திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

‘கிருபானந்த லாரி வருகிறது’ கிண்டலடித்த திகவினர் – மனம் மாறிய பெரியார்

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே..!” என்று வருத்தப்பட்டனர்.

மேலும் படிக்க ‘கிருபானந்த லாரி வருகிறது’ கிண்டலடித்த திகவினர் – மனம் மாறிய பெரியார்
லட்சுமி குபேர பூஜை

லட்சுமி குபேர பூஜை: அளவில்லா செல்வம் பெறுவது எப்படி?

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று சொல்வது உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார். வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது.
குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிப்பவர் குபேரன். எனவே தான் குபேரன், லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார். குபேரன் அருளாட்சி நடத்த அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான்.

மேலும் படிக்க லட்சுமி குபேர பூஜை: அளவில்லா செல்வம் பெறுவது எப்படி?
Mesham Guru Peyarchi 2021

குரு பெயர்ச்சி: மேஷம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?

மார்ச் மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகும்வரை கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானமான 2-ல் ராகு நீச்சம் பெற்றிருப்பதால் பேச்சில் கவனம் தேவை. சிந்தித்து நிதானமாக பேச வேண்டும். படபடப்பு மற்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் பிரச்னைகள்தான் வரும். அதனால் யோசனை செய்து எதையம் செய்வது, மற்ற கிரகங்களின் அனுக்கிரகம் இருப்பதால் வெற்றி. ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..! இந்தக் கூற்று இந்த குருபெயர்ச்சியில் மேஷ ராசி அன்பர்களுக்கு பொருந்தும். உங்களோட பிறந்த இளைய உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். நல்லுறவு பராமரிப்பீர்கள். குடும்பத்தினர் மட்டுமன்றி அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் அனைவருடனும் நல்லுறவு பராமரிக்கிற காலகட்டமாக இடப்பெயர்ச்சி அமையப்போகிறது. பொழுதுபோக்குகளில் நாட்டம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க குரு பெயர்ச்சி: மேஷம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
Guru Peyarchi

குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன நன்மைகள்?

ஜோதிட உலகில் தேவர்களின் குரு பிரகஸ்பதி என்கின்ற வியாழ பகவான். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும் என்பதும்,  குரு பார்க்க கோடி நன்மை என்பதும், குரு பகவானை சிறப்பித்துக் கூறுகின்ற பழமொழிகள். அதனால் குரு…

மேலும் படிக்க குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன நன்மைகள்?
மனம் படுத்தும் பாடு

மனம் படுத்தும் பாடு – திருமூலரின் ரகசியம்

உடம்புக்கும் அதே நிலைதான்! மனம் எனும் தேரோட்டி, உடம்பு எனும் தேரை ஒழுங்காகச் செலுத்தாவிட்டால், உடம்பு சிதைந்து போய் விடும்.

மேலும் படிக்க மனம் படுத்தும் பாடு – திருமூலரின் ரகசியம்
குழந்தையின்மை ஏற்பட இதுதான் முதல் காரணம்

தம்பதியினருக்கு குழந்தையின்மை ஏற்பட இதுதான் காரணம்

எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு தொடர்ந்து உடலுறவு கொண்ட, ஒரே நேரத்தில் திருமணம் ஆன 100 தம்பதிகளை எடுத்துக்கொண்டால் அதில் 80 தம்பதிகள் முதல் வருடத்தில் கர்ப்பம் தரித்துவிடுவார்கள். இரண்டாம் வருடத்தில் 90 தம்பதிகள் கர்ப்பம் அடைந்து விடுவார்கள். இரண்டு வருடங்கள் முடிந்தும் குழந்தை உருவாகவில்லை என்றால் தம்பதிகள் தங்களிடம் குழந்தையின்மை குறையிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க தம்பதியினருக்கு குழந்தையின்மை ஏற்பட இதுதான் காரணம்
கண்ணதாசன் கையாண்ட சங்க இலக்கியங்கள்

கண்ணதாசன் கையாண்ட சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியத்துக்கு முந்தியதாகத் தமிழில் கிடைத்த இலக்கண நூல் தொல்காப்பியம் மட்டுமே சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் பழந்தமிழகத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. பண்டைத்தமிழ் அறிஞர்கள் இலக்கியங்களை அகம், புறம் என இரு வகையாகப் பிரித்தனர்.
அகத்துறை இலக்கியம் காதலைப் பற்றியும் புறத்துறை இலக்கியம் பிறவற்றையும் குறிக்கும் என்ற அடிப்படையில் இலக்கியங்கள் பாகுபாடு செய்யப்பட்டன.

மேலும் படிக்க கண்ணதாசன் கையாண்ட சங்க இலக்கியங்கள்
விதி என்பது என்ன? படம்

நான் நல்லவன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும்? விதி

முற்பிறவியின் ஞாபகங்கள் இருக்காததால் தான் எதற்காக இப்படி நடந்து கொள்கிறோம் என்று சில நேரங்களில் வாழ்பவர்களுக்கு தெரியாது..! ஒருவன் முற்பிறவியில் என்ன குணத்தில் இருந்தானோ அதே குணத்தின் மிச்சம் இப்பிறவியில் அவனது அடிப்படை குணத்தை நிர்ணயிக்கும். இப்பிறவியில் எந்த வகையான குடும்பத்தில் பிறக்கிறானோ அக்குடும்ப வளர்ப்பு ஒருவனது குழந்தை பருவத்தை பாதிக்கிறது. அந்த பாதிப்பே அவன் இளமை பருவத்தின் நடவடிக்கைகளுக்கு விதியாக அமைகிறது..! அந்த விதிப்படி அவன் இளமை பருவத்தில் செய்யும் காரியம் முழுவதும் அவனது வாழ்கை

மேலும் படிக்க நான் நல்லவன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும்? விதி
சென்னப் பட்டணம்

சென்னப் பட்டணம்: மேட்ரி டையஸ் மதராஸ் ஆன கதை

இந்தப் பட்டணம் 250 வருடங்களுக்கு முன் சில செம்படவர் குடிசைகள் உள்ள ஒரு மணல் வெளியாய் இருந்தது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த மணல் வெளி பெரிய பட்டணமானதை யோசித்தால் எவருக்கும் ஆச்சரியம் உண்டாகாமற்போகாது.
நல்லது, இவ்விடம் கப்பல் தங்கத் தக்க துறையா? அல்லது விசேஷ வர்த்தகம் செய்துகொண்டிருந்த இடமா? இல்லாவிட்டால் ஏதாவது பிரபலமான கைத்தொழில் நடக்கும் ஸ்தாபனமா? யாதொரு யோக்யதையுமில்லையே. மேலும் இத்தேசத்தார் பழமையானவைகளைக் கொண்டாடும் தன்மையுடையவர்களே அன்றிப் புதிதாய் ஒன்றையும் செய்யும் எண்ணமில்லாதவர்கள் என்பது பிரத்தியக்ஷம். இப்படியிருந்தும் இவ்விடத்தில் நூதனமாய் ஒரு பட்டணமுண்டானதை யோசிக்கின்ற யாவருக்கும் ஆச்சரியமாயிருக்கின்றது.

மேலும் படிக்க சென்னப் பட்டணம்: மேட்ரி டையஸ் மதராஸ் ஆன கதை
தீராத நோய்களைத் தீர்க்கும் புதிய வண்ண மருத்துவம்

தீராத நோய்களைத் தீர்க்கும் புதிய வண்ணங்கள் மருத்துவம்

சிவப்பு வண்ணம் உடலில் ‘லிவர்’ என்னும் ஈரல் பகுதியை சரிவர இயங்கச் செய்கிறது, எலும்புகளைப் பலப்படுத்துகிறது. தலைச்சுற்றல், மயக்கம் போன்ற வியாதிகளை குணப்படுத்துகிறது. இதன் அதிபதி கிரகம் சூரியன் ஆகும். சூரிய தெசா, புக்தி காலங்களில் சிவப்பு வர்ணத்தை உபயோகித்து வர சரீரம், ஆத்ம வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
தற்காலத்தில் ஆறா ஒளிவட்ட ஆய்வக கருவி மூலம் அறிய முடிகிறது. ஒவ்வொரு தெசா புக்தி காலங்களிலும் வண்ணப் பற்றாக்குறையை இக்கருவி மூலம் அறிய முடிகிறது. அதற்கேற்ப பரிகாரம் செய்ய நற்பலன் விளைகிறது. இதனையே தான் நம் முன்னோர்கள் கிரகப் பரிகாரம் என்ற ரீதியில், பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லி வந்துள்ளனர். ஆரஞ்சு வண்ணம் சந்திரன் ஆதிக்கமாகும்.

மேலும் படிக்க தீராத நோய்களைத் தீர்க்கும் புதிய வண்ணங்கள் மருத்துவம்