Catacombs Paries

திரும்பிய பக்கமெல்லாம் எலும்புக் கூடுகள் திகிலூட்டும் சுற்றுலா

ஒரே இருட்டு..
ஏதோ மக்கிப்போன வாசனை..
தூரத்தில் ஒரு நாய்..
கண்ணை முழிச்சுப் பார்த்தா..
சுற்றிலும் எலும்பு கூடுகள்..
இப்படித்தான் இரவு இங்கு தங்குவார்கள் அரண்டடித்து எழுகிறார்கள்.

‘கேட்டகோம்ப்ஸ் ஆஃப் பாரிஸ்’

இந்த குகை பிரான்ஸில் இருக்கிறது. ‘கேட்டகோம்ப்ஸ் ஆஃப் பாரிஸ்’ என்பதுதான் இதன் பெயர். பாரீஸ் நகரின் நிலத்துக்கடியில் இயற்கை உருவாக்கிய சுண்ணாம்புக் குகைகள் ஏராளமாக இருக்கிறது. இந்த குகைகளின் மொத்த நீளம் 300 கி.மீ.

முன்னொரு காலத்தில் பாரீஸ் நகரம் யுத்தக்களமா இருந்தது. யுத்தத்தில் ஏகப்பட்ட போர் வீரர்கள் இறந்து போனார்கள். போதாக்குறைக்கு, தொற்றுநோய் வேற வேக வேகமா பரவ தொடங்கியது.

நகர வீதிகள் முழுக்க மனித உடல்கள் பிரேதங்களாக விழுந்து கிடந்தன. கல்லறைகள் பிணங்களால் நிறைந்து வழிந்தது.

இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் உடல்கள் சரியாக புதைக்கப்படவில்லை. அதுவும் அதோட பங்குக்கு நோய பரப்பியது. உடல்கள் அழுகி துர்நாற்றம் வேறு நகரம் முழுக்க வீசியது.

சுண்ணாம்புக் குகைகள்

அன்றைய மன்னருக்கு இது மிகப் பெரிய தொந்தரவாக இருந்தது. ‘நிலத்துக்கடியில் பல கி.மீ. நீளத்துக்கு சுண்ணாம்புக் குகைகள் சும்மாதானே இருக்கிறது. அதுக்குள்ள இந்த உடல்களை கொண்டு போய் வைய்யுங்கன்னு..!’ மன்னர் ஆணையிட்டுட்டார்.

கி.பி.1774-ம் ஆண்டு முதன்முதலாக கல்லறைகளில் இருந்த உடல்களை குகைக்கு மாற்றினார்கள். அப்போதிருந்து 200 வருஷங்களுக்கு மேலாக இந்தப் பழக்கம் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்தது.

அதன்பின் 1786 முதல் 1788 வரையான மூன்று வருடங்களில் நகரின் கல்லறைகள் மற்றும் தேவாலயங்களில் அடக்கம் செய்யப்பட்ட மற்ற உடல்களின் எலும்புகளையும் மொத்தமாக கொண்டுவந்து இங்கு சேர்த்தார்கள்.

இப்படி அவர்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்தது ஒண்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட 60 லட்சம் மனித எலும்பு கூடுகள். உலகத்தின் மிகப்பெரிய கல்லறையாக இது மாறியது.

இந்த எலும்புகளைக் கொண்டு குகைகளின் சுவரை அமைத்தார்கள். எலும்புகளையும் மண்டையோடுகளையும் அற்புதமாக அடுக்கி வைத்து புது கலைப்படைப்பாக மாற்றிவிட்டார்கள்.

கேட்டகோம்ப்ஸ் ஆஃப் பாரிஸ்
கேட்டகோம்ப்ஸ் ஆஃப் பாரிஸ்

துணிவு மிக்கவர்கள்

1874-ஆம் ஆண்டு பொதுமக்கள் இந்த கலைப்படைப்பை பார்வையிட அனுமதி வழங்கினார்கள். அன்று முதல் இப்போது வரைக்கும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக இது இருக்கிறது. துணிவு மிக்கவர்கள் மட்டும் இதை பார்த்து வந்தார்கள்.

1995-ல் மனித எலும்புகளால் ஆன இந்த குகையை மூடினார்கள். மூடியப்பின் குகையினுள் 10 வருடங்களாக கட்டுமானப்பணி நடந்தது.

காணொளி

அது முடிந்ததும் 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு இந்த குகையை திறந்தார்கள்.

130 படிகள் வழியாக கீழே இறங்கி சென்றால் 60 அடி ஆழத்தில் இந்த குகை இருக்கிறது. 1.5 கி.மீ. நீளமுள்ள இந்த குகையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மனிதர்களின் எலும்புக கூடுகள் கலைநயத்தோடு அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

இதை முழுமையாக பார்வையிட 45 நிமிடங்கள் ஆகும். ஒருமுறைக்கு 200 பார்வையாளர்களைத்தான் உள்ளே அனுமதிக்கிறார்கள்.

14 டிகிரி செல்சியஸ்

குகையின் உள்ள 14 டிகிரி செல்சியஸ் வெப்பம்தான் இருக்கிறது. அதனால இதயம் பலவீனமானவங்களுக்கு இதைப் பார்வையிட அனுமதியில்லை.

குகை முடிவில் 83 படிகள் கொண்ட வழி இருக்கிறது. அது வழியாக மேலே ஏறி நிலத்துக்கு வந்துடலாம்.

ஒருவருக்கு 29 யூரோ கட்டணம் வசூலிக்கிறார்கள். டிக்கெட் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும். இரண்டு மாதத்துக்கு முன்பு பதிவு செய்திருந்தாலும் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அலைமோதும் இடங்களில் இதுவும் ஒன்று.

உங்களுக்கு தில் இருந்தால் சிறப்பு அனுமதி வாங்கி இரவில் தனியாக இங்கு தங்கலாம். திகில் அனுபவங்களை இலவசமாக பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.