எங்களைப் பற்றி

S.P.Senthil Kumar

தகவல்360டி.காம் என்ற இந்த வலைத்தளம் பத்திரிக்கையாளர்களால் நடத்தப்படுகிறது. இந்த தளம் அனைத்து விதமான தகவல்களையும் தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், பயணம், சுற்றுலா, மனிதர்கள், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், உடல் நலம், ஆன்லைனில் வருமானம் போன்ற பல தகவல்களை வழங்குகிறது. சாதனை மனிதர்களின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் வாழ்க்கை முறை என்று சகலவிதமான தகவல்களையும் நிறைவாக தரும் தளமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த வலைத்தளத்தின் உரிமையாளரான எஸ்.பி.செந்தில்குமார், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்றவர். வாசிப்பிலும் தீவிர தேடலிலும் ஆர்வம் கொண்ட இவர் ‘தினத்தந்தி’யில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

holiday news wrapper

மேலும் யாத்ரிகன், கலாதேவி, கண்மணி பிரியங்கா என்ற பெயர்களில் பல்வேறு இதழ்களிலும் இணையத்திலும் பல ஆக்கங்களையும் பயணக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ‘ஹாலிடே நியூஸ்’ என்ற சுற்றுலா இதழில் இணை ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார். ‘தினத்தந்தி’  வெள்ளி மலரில் இவர் எழுதிய ‘சித்தர் அற்புதம்’ என்ற சித்தர்கள் பற்றிய ஆன்மிகத் தொடர் பலராலும் பாராட்டப் பெற்றது. ‘நம்பமுடியாத உன்மைகள்’ என்ற பெயரில் இவர் எழுதி, தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் வாசகர்களின் பேராதரவை பெற்றது.

 

Nampamudiyaatha Unmaigal Book

இணையத்திலும் அனுபவம் பெற்றவர். இவரின் ‘கூட்டாஞ்சோறு’ வலைப்பூ பல தகவல்களை உள்ளடக்கிய தகவல் பெட்டகமாக இருக்கிறது. அதுபோக, மூன்று யூடியூப் சேனல்களும் நடத்தி வருகிறார். அனைத்துவிதமான தகவல்களையும் தரும் விதத்தில் ‘எஸ்பிஎஸ் மீடியா’ என்ற சேனலும், சுற்றுலா தொடர்பான தகவல்களை தரும் விதமாக ‘டிராவல்ஸ் நெக்ஸ்ட்’ என்ற சேனலும், ஆரோக்கியம் மற்றும் அழகு சம்பந்தமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக ‘ஹெல்த் அண்ட் பியூட்டி பிளஸ்’ சேனலும் நடத்தி வருகிறார். அந்த சேனல்களில் காணொளியாக தரும் தகவல்களை இங்கு எழுத்து வடிவமாக தருவதற்காகவே இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் இதில் வெளியிடப்படும் பெரும்பாலான கட்டுரைகள் காணொளி காட்சியாகவும் இணைக்கப்பட்டிருக்கும்.

சமீபத்தில் ‘கூகுள் ஃபார் தமிழ்’ என்ற பெயரில் கூகுள் நிறுவனம் சென்னையிலும் மதுரையிலும் கருத்தரங்கை நடத்தியது. அதில் ஆங்கிலம் தவிர்த்த இந்திய மொழிகளில் தகவல் உள்ளடக்க வறட்சி இருப்பதாக தெரிவித்திருந்தது. அதுவே இந்த வலைத்தளம் புதிதாக தொடங்க தூண்டுதலாக அமைந்தது. அதனால்தான் நமக்கு தெரிந்த தகவல்களை வரலாற்று நிகழ்வுகளை அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் ‘அறிவோம் அனைத்தும்’ என்ற உட்தலைப்பு இடப்பட்டது. உங்கள் அனைவரின் ஆதரவும் எப்போதும் போல் கிடைக்கும் என்ற புரிதலோடு இந்த இணையதளத்தை தொடர்கிறோம்…

travels next logo

SPS Media logohealth & beauty plus Banner