Mesham Guru Peyarchi 2021

குரு பெயர்ச்சி: மேஷம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?

எப்போதும் மேன்மையான சிந்தனை உடைய மேஷ ராசி அன்பர்களே! குரு அதிர்ஷ்டம் தரும் ராசிகளில் அதிக நற்பலன்களை அடையப்போவது நீங்கள்தான். ஏன் என்று சொன்னால் குருவின் நண்பரான செவ்வாய் ஆளக்கூடிய ராசி மேஷம். மேஷ ராசியை சார்ந்தவர்களுக்கு அனைத்து விதமான ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கப்போகிறது குரு பெயர்ச்சி. உங்கள் எண்ணங்கள் ஆசைகள் நிறைவேறப் போகிறது. 


தனகாரகன் லாபஸ்தானத்தில் வருகிற காரணத்தால் மகா தனயோகம் ஏற்பட இருக்கிறது. அது மாத்திரம் இல்லாமல் ஒன்பதாம் அதிபதி 11ஆம் இடத்திற்கும், பத்தாம் அதிபதி ஏற்கனவே 10-ல் சஞ்சாரம் செய்வதால் அதிக நற்பலன்களை மேஷ ராசியினர் பெறுவார்கள். 

குரு பகவான்


குரு மேஷ ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானம். பூர்வ புண்ணிய ஸ்தானம், கலஸ்தர ஸ்தானம் இதன் மீது விழுவதால் முயற்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கும். தைரியமாக முடிவுகள் எடுத்து செயலில் இறங்க வேண்டும். புதிய வாய்ப்புகள் வரும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புகழ் உண்டாகும். திருமணத்தால் ஆதாயமுண்டு. மறுமண முயற்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ற வரன் அமையும்.


11-ல் குரு இருப்பதால் உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பெரிய மனிதருடைய ஆதரவு கிடைக்கப் போகிறது. அவருடைய ஆலோசனை மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும். அதற்கு உங்கள் தசாபுத்தி சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். அப்படி அமைகிற பொழுது உங்கள் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் நடக்கும். 

யோகம்


மேஷ ராசிக்கு 11-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் அவரது பார்வை பலனால் எப்படிப்பட்ட பலனைத் தரப்போகிறார்? எந்தெந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்? 


செவ்வாய் அதிபதியாக இருக்கும் மேஷ ராசிக்கு குரு பகவான் 11-ம் இடமான கும்ப ராசிக்கு பெயர்ச்சி. 10-ம் இடமான மகரத்தில் சனி சஞ்சரிக்கிறார். மேஷ ராசிக்கு ஓன்பது 12-ம் வீட்டுக்கான குரு பகவான், 11-ம் இடமான லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது மிகப்பெரிய யோகம். எனவே, தந்தை மூலமான அனுகூலமான பலன், சொத்துக்கள், நற்பெயர் கிடைத்தால் போன்ற சிறப்பான விஷயங்கள் எல்லாம் நடைபெறும்.


ஒன்பதாம் வீட்டு அதிபதி 11-ம் வீட்டில் அமர்வது   சிறப்பு. அதுவும் குருவே அமர்வதால் பெயர் புகழ் உண்டாகும்.  குரு நின்ற இடத்தை விட அவரின் பார்வை பலம் அதிகம் என்பது ஜோதிட விதி. குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களில் சுப பலன்களை தருவார். எனவே, மேஷ ராசி அன்பர்களுக்கு 5, 7, 9 முறையே மிதுனம், சிம்மம், துலாம். இந்த ராசி மீது விழுவதால் மேஷ ராசிக்கு சிறந்த மாற்றங்கள் உருவாகும். 

Guru Peyarchi Mesham 2021-2022


அதுவும் குருவினுடைய மிகச் சிறப்பான ஒன்பதாம் பார்வை மேஷ ராசிக்கு ஏழாம் இடமான களத்திரஸ்தானம் மீது குருவின் பார்வை விழுவது. இதுவரை சனி பகவானின் பார்வை தனியாக இந்த இடத்தில் இருந்தது. இப்போது குருவின் பார்வை விழுவதனாலே மேஷ ராசிக்கு கூடுதலாக சிறப்பு கிடைக்கப்போகிறது.


அந்த அடிப்படையில் பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்திலேயே குரு பகவான் இருந்தாலும் மேஷ ராசிக்கு மூன்றாம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தை பார்க்கவில்லை. சனியுடன் சேர்ந்து போது பார்வை பலன் இதன்மீது இல்லாததால் மகரத்தில் குரு இருந்தபோது செய்ய முடியாத விஷயங்கள் அனைத்தையும் இந்த குருபெயர்ச்சியில் செய்வதற்கு ஆற்றல் கிடைக்கும். அதனால் கவலை வேண்டாம். 

உடன்பிறப்புகள்


மார்ச் மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகும்வரை கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானமான 2-ல் ராகு நீச்சம் பெற்றிருப்பதால் பேச்சில் கவனம் தேவை. சிந்தித்து நிதானமாக பேச வேண்டும். படபடப்பு மற்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் பிரச்னைகள்தான் வரும்.  


அதனால் யோசனை செய்து எதையம் செய்வது, மற்ற கிரகங்களின் அனுக்கிரகம் இருப்பதால் வெற்றி. ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..!’.  இந்தக் கூற்று இந்த குருபெயர்ச்சியில் மேஷ ராசி அன்பர்களுக்கு பொருந்தும். உங்களோட பிறந்த இளைய உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். நல்லுறவு பராமரிப்பீர்கள்.


குடும்பத்தினர் மட்டுமன்றி அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் அனைவருடனும் நல்லுறவு பராமரிக்கிற காலகட்டமாக இடப்பெயர்ச்சி அமையப்போகிறது. பொழுதுபோக்குகளில் நாட்டம் அதிகரிக்கும். 


வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு செயல்படுத்துவீர்கள். குறிப்பாக குடும்பத்தோடு நல்லுறவு பேண வேண்டும் என்று நினைப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும். அது மிக மிக முக்கியம். அதிக பணிச்சுமை அசதிகளை ஏற்படுத்திக் தூக்கமின்மை பாதிப்பு ஏற்படுத்தும். அஜீரண கோளாறுகள் ஏற்படும். அதனால் உணவில் கொஞ்சம் கவனம் தேவை. 

நல்லுறவு


காதல் வயப்பட்டிருக்கும் மேஷ ராசி நேயர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகம். காதலர்கள் மனதில் அன்பு அன்னியோன்யம் அதிகரிக்கும். இது திருமணமான தம்பதிகளுக்கும் பொருந்தும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கி நன்மை கிடைக்கும். ஒருமித்து வாழ்வார்கள்.  நல்லுறவு கிடைக்கும். அதுதான் முக்கியமானது.  திருமணமான தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடு நீங்கி நன்மை கிடைக்கும். 


நிதி நிலையை பொறுத்தவரைக்கும் மேஷ ராசி அன்பர்களுக்கு ஏற்றமான நிலை. வருமானம் கணிசமாக உயரும், பணவரவு அதிகரிக்கும்.  வரவை விட செலவு குறைவாக இருக்கும் எனவே பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது. வீண் விரயம் வருமா என்றால் கிடையாது. அவசியமான செலவுகளை மட்டுமே செய்வீர்கள்.  


வெளிநாட்டு வியாபாரம் மூலம் வருமானம் கணிசமாக உயரும். அலுவலகத்தில் பணியாற்றும் மேஷ ராசி நண்பர்கள் அதிக பணிகளை மேற்கொள்ள நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். கூடுதல் பொறுப்பு வந்து சேரும். இருந்தாலும் திறமையாக பணியாற்றி மேலதிகாரியின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். 

படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் புதிய வேலை கிடைக்கப் பெறுவார்கள். தொழில் சிறப்பாக இருக்கும். அதிக லாபம் காண முடியும். கூட்டுத் தொழிலில் இருக்கக்கூடியவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். 

ஆபரணச் சேர்க்கை


மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் முன்னேற்றம் கான அவர்கள் உழைப்பு அவசியம். ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பதற்கேற்ப கடினமான முயற்சி நீங்கள் எடுக்கிற பொழுது நிச்சயமாக வெற்றிகளையும் பெற முடியும். பெண்களைப் பொறுத்த வரை ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும். 

குறைத்துக்கொள்ளும் போது அவரது குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு மறைந்து சுகமாக வாழ்வதற்கு வழி கிடைக்கும். எனவே, எத்தவகையில் பார்த்தாலும் பெண்களுக்கும் சிறப்பு. ஆண்களுக்கும் சிறப்பு. மாணவர்களுக்கும் சிறப்பு. 


பரிகாரம் என்று பாக்கும்பொழுது வியாழக்கிழமை அன்று ஏதாவது ஒரு ரூபத்தில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது. குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு வஸ்திர தானம் கொடுப்பது நல்லது.  கருங்காலியால் செய்யப்பட்ட சிறு யானை சிலையை வாங்கி வீட்டு வரவேற்பறையில் வைப்பது நல்லது. கருங்காலி மரத்திற்கு நிறைய சிறப்புண்டு. 


மேஷ ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சி நடைபெறுகிற நாட்களிலே ஒரு சிறு கருங்காலி யானையை வாங்கி வீட்டின் வரவேற்பறையில் வைக்கும்பொழுது கண் திருஷ்டி நீங்கி, குல தெய்வத்தின் அருளைப் பெற்று நீங்கள் வாழ்வாங்கு வாழ முடியும். மொத்ததில் ஏற்றமிகு வாழ்வில் சிறப்பான இடத்தை அளிக்கிறது இந்த குரு பெயர்ச்சி. 

Leave a Reply

Your email address will not be published.