கிளியோபாட்ரா மஞ்சணையில்

கிளியோபாட்ரா – 10 மஞ்சணையில் முதல் வெட்கம்

மஞ்சணையில் முதல் வெட்கம்

இரவு 8 மணி கடந்திருக்கும்.

52 வயதான ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீஸர் கிளியோபாட்ரா அறை நோக்கி வந்து கொண்டிருந்தார். கம்பீரமாக நிமிர்ந்து நடந்து வந்த ஜூலியஸ் சீஸர், கிளியோபாட்ரா அறையை நெருங்கியதும் உடன் வந்த சேவைப் பெண்கள் உத்தரவு பெற்று விலகிக்கொண்டனர். அவர் மாத்திரம் கிளியோபாட்ரா இருந்த அறைக்குள் நுழைந்தார்.

மஞ்சணை

அறையின் கதவைத் தாழ்ப்பாள் இட்டுக்கொண்டவர், கிளியோபாட்ரா எங்கே என்று பார்வையைச் சுழற்றினார். உயரிய படுக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.

முதலிரவுக்கு அலங்கரிக்கப்படுவது போல், அந்தப் படுக்கை முழுவதும் மலர்கள் நிரம்பியிருந்தன. வாசனைத் திரவியங்களின் நறுமணம் அதில் கமழ்ந்தது.

கிளியோபாட்ராவுக்கு அருகில் தீப விளக்குகள் எரிந்து, அறையை ஒளியூட்டிக் கொண்டிருந்தன. தன்னைப் பார்த்ததும் அவள் எழுந்து விடுவாள் என்றுதான் நினைத்தார் ஜூலியஸ் சீஸர். ஆனால், அவள் எழுந்திருக்கவே இல்லை.

‘சரி… அவளும் ஒரு நாட்டின் பேரரசி ஆயிற்றே. அந்த கம்பீரம் இருக்காதா என்ன?’ என்று தன்னைத்தானே சமாளித்துக்கொண்டார்.

மஞ்சணையில் கிளியோபாட்ரா அருகில் அமர்ந்து கொண்டார் ஜூலியஸ் சீஸர். கிளியோபாட்ரா சாய்ந்தபடியே தான் இருந்தாள்.

தங்கப் பதுமையா?

அவளை இரவு ஆடையில் முதன் முதலாகக் கூர்ந்துப் பார்த்தார் ஜூலியஸ் சீஸர்.

தங்கம் போன்ற நிறத்தில் மெல்லியதாக இருந்தது அந்த ஆடை. தீப வெளிச்சத்தில் அவள் ஒரு தங்கப் பதுமை போலவே மின்னினாள். முகத்தின் முழு அழகையும் வெளிப்படுத்தாமல் இருக்க, வெண்மை நிறத்தினால் ஆன மெல்லிய முகத்திரை ஒன்றை அணிந்திருந்தாள்.

பார்வையை சற்றுக் கீழே சுழல விட்டார். மெல்லிய ஆடையில் மிகவும் பக்கத்தில் அவள் அமர்ந்திருந்ததால் அவளது மேனி அழகு வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருப்பது சீஸருக்கு நன்றாகவே தெரிந்தது. எடுப்பாக நிமிர்ந்து தலைக்கனத்துடன் காணப்பட்ட அவளது மார்பகங்கள் அவரை கிச்சுகிச்சு மூட்டின.

மஞ்சணையில் அந்த காட்சியை மேற்கொண்டு பார்த்தால், ‘அந்த’ விஷயத்தில் அவசரப்பட்டுவிட நேரிடலாம் என்பதை உணர்ந்த ஜூலியஸ் சீஸர் அமைதியாக இன்னும் கொஞ்சம் பார்வையைத் தாழ்த்தினார்.

இடுப்புப் பகுதியில் அவள் கட்டியிருந்த நாடா மிகவும் தளர்ந்து போய் இருந்ததால் எலுமிச்சம் பழ நிறத்தில் அப்பட்டமாக தகதகத்துக் கொண்டிருந்தது அவளது இடுப்பு பிரதேசம். இடுப்புக்குக் கீழான பகுதிகளும் மஞ்சள் நிறத்தில் மின்னியதை ஓரளவுக்குத்தான் அவரால் பார்க்க முடிந்தது.

இதற்குள் சில நொடிகள் வேகமாக ஓடிப்போய் இருந்தன. கிளியோபாட்ராவும், தனது பேரழகில் பேரரசர் மயங்கிவிட்டார் என்பதை நன்றாக தெரிந்து கொண்டாள்.

இவரல்லவோ வீரன்?

அவளும் தனது காந்தக் கண்களால் சீஸரை வேகமாக ஒரு நோட்டமிட்டாள்.

வீரன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியது சீஸரின் கம்பீரமான உடல். உடற்பயிற்சி செய்து ‘சிக்ஸ் பேக்’ கொண்டு வந்தது போல் ஆங்காங்கே சில கட்டிங்ஸ் அமைப்புகள். சீஸரின் இந்த சாதகமான அம்சங்கள் அவரது காக்காய் வலிப்பு நோயை அவளது பார்வையில் இருந்து மறைத்திருந்தன.

இவற்றைப் பார்த்த கிளியோபாட்ரா, சீஸர் மிகப்பெரிய வீரர் மட்டுமல்ல; ஆண்மை மிகுந்தவரும் கூட என்பதைப் புரிந்து கொண்டாள். இவரிடம் தன்னை ஒப்படைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்ற முடிவுக்கும் வந்தாள்.

அவளது இந்த முடிவின் பின்னணியில் ராஜதந்திரமும் ஒளிந்திருந்தது. தனது அழகில் சீஸர் மயங்கி, அவர் தன்னை அவரது மகாராணி ஆக்கிக்கொண்டால், மீண்டும் எகிப்துப் பேரரசு தனக்கு கிடைத்து விடும். ரோமானிய பேரரசியாகவும் வலம் வரலாம் என்று எண்ணினாள். உடனே நிமிர்ந்து கொண்டு அமர்ந்தாள்.

சீஸரே பேச ஆரம்பித்தார்

“பேரழகுக்கு பேரழகாக திகழும் கிளியோபாட்ராவே. உன் மவுனம் கூட பேரழகாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இந்த நேரத்தில், அதாவது… என்னருகில் நீ இருக்கும்போது அந்த மவுனம் தேவையில்லையே…”

“அப்படியில்லை பேரரசரே! தாங்கள் முதலில் பேசினால் நன்றாக இருக்கும் என்பதால் அமைதி காத்தேன்”.

“ஆமாம்… திடீரென்று நீ என்னை சந்திக்கக் காரணம்…?”

“இப்போது, இந்த எகிப்து பேரரசுக்கு நீங்கள் பேரரசராக இருக்கலாம். ஆனாலும், நான் தான் பேரரசி. அப்படியிருந்தும், சிலரது சூழ்ச்சிகளுக்கு மயங்கி என்னை நாட்டை விட்டு விரட்டிய எனது கணவனை தோற்கடிக்க வேண்டும். நான் மீண்டும் பேரரசி ஆக வேண்டும். அதற்கு உங்கள் துணை எனக்கு வேண்டும்….” என்று படபடத்தபடி வேகமாக கர்ஜித்தவள், அடுத்த நொடியே அமைதியாக சீஸரை ஒருமாதிரியாகப் பார்த்தாள்.

ஏற்கனவே அவளது அழகைப் பார்த்துக் கிறங்கிப் போனவர், அவளது இந்த பார்வைக்கான பதிலைப் புரிந்துகொண்டார்.

“உனது விருப்பத்தில் என்ன தவறு இருக்கிறது? நிச்சயம் உன் கணவனை பழி வாங்கியே ஆக வேண்டும். இந்த நாட்டுக்கு பேரரசியாக மட்டுமின்றி, எனக்கு மகாராணியாகவும் நீ இருந்தால் நிச்சயம் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம்.”

சீஸர் இப்படிச் சொன்னதும் சட்டென்று சிரித்தாள் கிளியோபாட்ரா.

“எனது விருப்பத்தை இவ்வளவு எளிதில் நிறைவேற்றுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை…” என்ற கிளியோபாட்ராவிடம், லேசாகக் காதலும் காமமும் கலந்த வெட்கமும் வெளிப்பட்டது.

காதல் பரிமாற்றம்

முதன் முறையாக ஒரு பேரரசர் முன்பு தலை குனிந்து வெட்கப்பட்டாள்.

கிளியோபாட்ராவிடம் முதன் முறையாக வெட்கத்தை, அதுவும் மிக நெருக்கத்தில் பார்த்த ஜூலியஸ் சீஸரின் உடலுக்குள் என்னமோ செய்தது. மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்றும் உணர்ந்தார். வானத்தில் இறக்கை விரித்து முதன் முதலாகப் பறந்தால் எப்படி இருக்குமோ… அந்த உணர்வும் வந்து போனது.

சட்டென்று எழுந்துவிட்டார் சீஸர். அதைப் பார்த்த கிளியோபாட்ராவும் வளைந்து நெளிந்து எழுந்து நின்றாள். இருவருக்கும் இடையே 2 – 3 அடி இடைவெளியே இருந்தது.

எத்தனையோ இளம்பெண்களை மஞ்சணையில் சுவைத்துத் துப்பிய இந்த 52 வயது கிழட்டுச் சிங்கத்திற்கு, இது புது அனுபவமாக இருந்தது.

கிளியோபாட்ரா மஞ்சணையில்...

வெட்கத்தில் கனிந்த கிளியோபாட்ராவின் இரு கன்னங்களும் சிவந்துபோய் இருந்தன. ஈரமான இதழ்களும் எதையோ எதிர்பார்த்து ஏங்கித் துடித்ததில் ஆரஞ்சுப் பழ நிறத்திற்கு மாறியிருந்தன.

அதுவரை வேல் விழிகளாக சிலிர்த்துக் கொண்டிருந்த இமை புருவங்களும் அமைதியாகி அடக்கி வாசித்தன. மூக்கு நுனியிலும் வியர்த்துப்போய் இருந்தது.

இதையெல்லாம் பார்த்த சீஸருக்கு மேற்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. தனது வலது கரத்தால் அவளது இடுப்பைத் தொட்டார். அடுத்த நொடியே சிலிர்த்து, நெளிந்து நிமிர்ந்தாள் கிளியோபாட்ரா.

தொடர்ந்து, இடது கையை அவளது முதுகுக்கு கொண்டுச் சென்றவர், அந்தக் கையாலேயே அவளைத் தாங்கிப் படுக்கையில் சாய்த்தார். இருவரது உடலில் இருந்த துணிகளும் விடைபெற்று ஒதுங்கின. இருவரும் உடலால் மட்டுமின்றி மனதாலும் கலந்தனர். முதன் முதலாக தாம்பத்திய சுகத்தை அனுபவித்த கிளியோபாட்ரா, தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட சீஸரை கணவனாகவே பார்த்தாள்.

மறுநாள் காலை

கிளியோபாட்ராவும் ஜூலியஸ் சீஸரும் தங்கியிருந்த அறை முன்பு சேவைப் பெண்கள் சிலர், ‘இருவரும் எப்போது வருவார்கள்?’ என்பதற்காக காத்திருந்தனர்.

இரவில் நீண்ட நேரம் காம விளையாட்டு விளையாடிய களைப்பில் அவர்கள் இருவரும் நீண்ட நேரமாக உறங்கிக் கொண்டிருப்பது அவர்களுக்கு ஓரளவுக்கு தெரியத்தான் செய்தது. இருந்தாலும்… ‘வேறு ஏதாவது விபரீதம் நடந்திருக்குமோ…’ என்று அச்சப்படவும் செய்தனர்.

கதவைத் தட்டி அவர்களை எழுப்பவும் அவர்களுக்கு பயமாக இருந்தது. ‘கதவைத் தட்டப்போய்… அது, அவர்களது தூக்கத்தைக் கலைப்பதாக அமைந்துவிட்டால் என்ன செய்வது?’ என்று யோசித்தனர்.

இப்படி அவர்கள் எல்லோரும் மசமசவென்று நின்றிருக்க… அந்தக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. வாயிலில் காத்திருந்த அனைத்து சேவைப் பெண்களும் வேகமாக அகன்று அந்த அறையின் இருபுறமும் வரிசையாகப் போய் நின்று கொண்டனர்.

முதன் முதலாக அறைக்குள் இருந்து பேரரசர் ஜூலியஸ் சீஸர் மட்டும் வெளிப்பட்டார். அவரை, அவர்களில் ஒரு பெண்ணைத் தவிர மற்றவர்கள், மெதுவாக அழைத்துக்கொண்டு குளியல் அறை பக்கம் ஒதுங்கினர்.

ஒரே ஒரு பெண் மட்டும் கிளியோபாட்ரா அறைக்குள் நுழைந்தாள். அங்கே படுக்கையில் கிளியோபாட்ரா மட்டும் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது உடலில் ஒட்டுத்துணி கூட இல்லை. ஆனால், அவளுக்கு மேலே ஒரு சிறிய துணி மட்டும் தெரியாமல் கிடந்து, அவளது மானத்தைத் தற்காலிகமாகக் காத்துக் கொண்டிருந்தது.

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *