மனித உடலில் காதல் உருவாகும் இடம் இதுதான்..!
இன்று காதலர் தினம். அதனால் இன்று காதலைப் பற்றி எதாவது ஒரு தகவலை கொடுத்தே ஆகவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.
அந்த வகையில் காதலைப்பற்றி பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஒன்றுதான் காதல் உருவாகும் இடம் எது என்பது பற்றிய ஆய்வு. இந்த ஆய்வின் மூலம் நாம் பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ளப்போகிறோம்.
பொதுவாக ஒரு நம்பிக்கை எல்லோரிடத்திலும் உண்டு. பெற்ற பிள்ளைகள் மீது அந்த குடும்பத்தினர் போதிய அன்பும், அக்கறையும் காட்டாத போது பிள்ளைகள் அன்புக்காக ஏங்கி லேசான அன்பு கிடைத்தால் கூட எதிர்பாலினத்தவருடன் காதலில் விழுந்து விடுகிறார்கள் என்பதுதான் அது.
இதுவும் ஒருபுறம் இருக்க, குடும்பத்தினர் அனைவரும் அன்பையும், அக்கறையையும் அள்ளி அள்ளி வழங்கும் வீடுகளில்கூட, குழந்தைகள் காதலில் விழுகின்றனரே! எப்படி?
காதல் உருவாவது
அதற்குத்தான்; காதல் உருவாவது இதயத்தில் அல்ல; மூளையில் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். உணர்ச்சி மாத்திரம் அல்ல… அந்த உணர்ச்சிக்கு கிடைக்கும் அங்கீகாரமும் சேர்ந்ததுதான் காதல்!
ஒரு தாய் தன் குழந்தை மேல் கொண்ட பாசமும் காதல்தான். அந்த தாய் ஆசையோடு தன் குழந்தையை கொஞ்சும்போது அந்த குழந்தை அதனை அங்கீகரிக்க வேண்டும்.
அதற்கு ஏற்ப நடந்து கொள்ளவேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் நாளடைவில் அந்த தாய்க்கு குழந்தையை கொஞ்சவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய்விடும். இது அப்படியே ஆண் பெண் இடையேயான காதலுக்கும் பொருந்தும்.
கம்பேனியனேட் லவ்
காதலை ‘கம்பேனியனேட் லவ்’, ‘ரொமாண்டிக் லவ்’ என்று இரண்டு விதமாக பிரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
‘கம்பேனியனேட் லவ்’ என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் மட்டும் நிகழ்வது இல்லை. பெற்றோர் குழந்தை, அண்ணன் தங்கை, நண்பர்கள், உறவினர்கள் இடையே ஏற்படும் எல்லா பாசமும், ஈர்ப்பும் இந்த வகைதான். இதில் பாலியல் கலப்பு இருக்காது.
ஆனால், ‘ரொமாண்டிக் லவ்’ அந்த ரகம் இல்லை. இது ஒரு ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே மட்டும் நிகழ்வது. இதில் செக்ஸ் தவிர்க்க முடியாத விஷயம்.
காதலுக்கு கண்
இப்போதுபோல் முன்பெல்லாம் காதலைப்பற்றி எந்த ஆராய்ச்சியும் மருத்துவரீதியாக நடைபெறவில்லை. அதனால் ‘காதலுக்கு கண் இல்லை’ என்று கண்மூடித்தனமாக சொல்லி வைத்தார்கள். ஆனால், இன்று ‘மூளை ரசாயனங்களின் மாற்றம்தான் காதல் உணர்வை தூண்டுகிறது’ என்று மருத்துவ ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
அதிகம் சுரந்தால்
மூளையில் ‘எண்டார்பின்’ என்கிற ரசாயனம் அதிகம் சுரந்தால் ‘கம்பேனியனேட் லவ்’ உண்டாகும்.
என்னதான் காதலி உயிரை கொடுத்து காதலித்தாலும், இந்த பிள்ளைகளுக்கு காதலைவிட குடும்பம் ஒருபடி மேலாகவே இருக்கும். எதற்காகவும் குடும்பத்தை இழக்கமாட்டார்கள்.
இதற்கு மாறாக மூளையில் ‘டொபாமைன்’, ‘நார் எபி நெர்பின்’, ஆகிய ரசாயனங்களின் கூட்டுக்கலவையால் ‘ரொமாண்டிக் லவ்’ உண்டாகும்.
என்னதான் குழந்தையை பொத்திப்பொத்தி, அன்பால் அரவணைத்து வளர்த்தாலும் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்து விடும். அதனால் காதலை தீர்மானிப்பது இதயம் அல்ல, மூளைதான் என்று ஆய்வாளர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.
தகவல் 360டி.காம் என்ற இந்த தளம் அனைத்து விதமான தகவல்களையும் தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், பயணம், சுற்றுலா, மனிதர்கள், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், உடல் நலம், ஆன்லைனில் வருமானம் போன்ற பல தகவல்களை வழங்குகிறது. சாதனை மனிதர்களின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் வாழ்க்கை என்று சகலவிதமான தகவல்களையும் நிறைவாக தரும் தளமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.