ஆண்மைக்கு ஆபத்தான 4 வகை உணவுகளை ஆய்வு ஒன்றின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். ஹார்வேர்டு பல்கலைக்கழகம் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்தது.
இந்த ஆய்வில் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் மீன், சிக்கன் உணவுகளை உண்பவர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பவர்களைவிட விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையை அப்போது வியன்னாவில் நடைபெற்ற மனித இனப்பெருக்கம் பற்றிய ஐரோப்பிய மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஆண்களின் விந்து எண்ணிக்கை அதிகரிப்பதில் நமது உணவு முறைக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நான்கு உணவுகளை ஆண்கள் தவிர்த்தால் ஆண்மைக் குறைவு ஏற்படாது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்மை குறைவுக்கும் காரணமாக அது இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக பயன்படுத்துகின்றன. இந்த இறைச்சி வகைகளால் ஆண்களின் விந்து எண்ணிக்கை வெகுவாக குறைவதாக ஹார்வேர்டு ஆய்வு தெரிவிக்கிறது.
கார்பனேட்டட் பானங்கள்
இந்தப் பட்டியலில் இரண்டாவதாக வருவது கார்பனேட்டட் பானங்கள்:
கோக், பெப்சி போன்ற கார்பனேட்டட் பானங்கள் வெளிநாடுகள் மட்டுமல்லாது இந்தியாவிலும் அதிகம் அருந்தும் பானங்களாக மாறிவிட்டன. இந்த பானங்களை தொடர்ந்து அதிக அளவு குடித்து வந்தால், ஆண்களின் விந்து அணுக்களின் செயல் திறன் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மையை உருவாக்குவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பாலாடைக் கட்டி

இதற்கடுத்து இந்தப் பட்டியலில் மூன்றாவதாக வருவது பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்:
பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும் பழக்கம் சமீபத்தில் அதிகமாக வளர்ந்துள்ளது. இத்தகைய உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்வதால் விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. பால் பொருட்கள் சில அத்தியாவசிய சத்துக்ளான கால்சியம், விட்டமின் டி உள்ளிடவை அடங்கியதாக இருந்தாலும், அந்த சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருந்த போதிலும், அந்த சத்துக்கள் விந்து அணுக்களை பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் ஆண்கள் பாலாடைக் கட்டிகளை அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
சோயா உணவு வகைகள்
இந்தப் பட்டியலில் நான்காவதாக வருவது சோயா உணவு வகைகள்:
பாஸ்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் சோயா பொருட்களை அதிக அளவு பயன்படுத்தும் ஆண்களில் 99 சதவிகிதம் பேருக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. அதனால் சோயா வகை உணவுகளையும் ஆண்கள் முடிந்தளவு தவிர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
சமீப காலங்களில் நமது உணவில் அதிக அளவில் இடம் பிடித்துவிட்ட இந்த வகை உணவுகள் ஆண்மைக்கு ஆபத்தானவை என்ற ஆய்வு முடிவுகள் ஆண்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகமாக உருவாவதற்கு இவைகளும் காரணங்களாக உள்ளன. இவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்வதே ஆரோக்கியம்.

தகவல் 360டி.காம் என்ற இந்த தளம் அனைத்து விதமான தகவல்களையும் தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், பயணம், சுற்றுலா, மனிதர்கள், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், உடல் நலம், ஆன்லைனில் வருமானம் போன்ற பல தகவல்களை வழங்குகிறது. சாதனை மனிதர்களின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் வாழ்க்கை என்று சகலவிதமான தகவல்களையும் நிறைவாக தரும் தளமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.