வெயில் பட்டால் போதும் உடல் எடை குறையும்

உடலில் வெயில் பட்டால் போதும் உடல் எடை குறையும்

உடல் பருமனுக்கு இன்றைய உணவுப் பழக்கம் முதற்கொண்டு ஏகப்பட்ட காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது வைட்டமின்கள். வைட்டமின் டி குறைப்பாட்டால் உடல் பருமன் கூடும் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி விரிவாக காண்போம்…

உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி மற்றும் பழங்களில் இருந்து இந்த வைட்டமின் சத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன. 

வைட்டமின் டி

அப்படி ஒரு நாளைக்குப் போதுமான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். இந்த வைட்டமின்களில் பல பிரிவுகள் உள்ளன. 

அதில் முக்கியமானது வைட்டமின் டி. இது சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்குக் கிடைக்கிறது. அதிகாலை சூரிய ஒளியில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும். 

ஆனால் தற்போது பலரும் வெயில் படாமலேயே இருந்துவிடுகின்றனர். தைராய்டு இருப்பவர்களுக்கு முக்கியமாக இந்த வைட்டமின் டி உடலில் போதுமான அளவு சென்றடைவதில்லை. இதனால்தான் திடீர் உடல்பருமன் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

இந்த வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் மட்டுமல்லாமல் இதயக் கோளாறுகள், புற்றுநாய் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த வைட்டமின் டி நேரடியாக நன்மை தருவதோடு மறைமுகமாகப் பல வேலைகளைச் செய்கிறது. 

எலும்பு வலி

வைட்டமின் டி நமது உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களை ஈர்ப்பதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியமும் குறையும். 

அதனால்தான் எலும்பு வலி இருப்பவர்களுக்கு முதலில் வைட்டமின் டி டெஸ்ட் எடுக்கிறார்கள். சரி எப்படி வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் ஆகிறது?

வைட்டமின் டி அவசியம்
வைட்டமின் டி அவசியம்

உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் டியின் வேலை. மேலும் வைட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டிரான் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது. இதனால் உடல் பருமன் ஆவது தடுக்கப்படுகிறது. 

உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.  உடல் எடைக் குறைய டயட் இருப்பவர்கள் கண்டிப்பாக வைட்டமின் டி அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். 

வைட்டமின் டி குறைபாட்டால் எவ்வளவு டயட் இருந்தாலும் உடல் எடைக் குறையாது. மேலும் கால்சியமும் குறைந்து போய், உடல் மிகுந்த சோர்வுற்றும், எலும்புகளில் வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

உடல் பருமன்

உடல் பருமன் ஆகாமல் இருக்க, வைட்டமின் டி அதிகம் உடலில் சேர என்ன செய்யவேண்டும்? 

முதலில் உங்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கிறதா என்று மருத்துவரிடம் பரிசோதனைச் செய்து அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். இந்த வகை வைட்டமின்கள் வெயிலித் தவிர உணவுகளில் மிகவும் குறைவு என்பது தான் உண்மை. 

உங்களுக்கு வைட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், வைட்டமின் மாத்திரைகளைக் கொடுப்பார்கள். தயவுசெய்து நீங்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் இந்த வகை வைட்டமின் உடலில் அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறிவிடும். இது மிகவும் கெடுதலான விஷயம். 

சூரிய ஒளியால் உடல் எடை குறையும்
சூரிய ஒளியால் உடல் எடை குறையும்

பொதுவாகவே தினமும் வைட்டமின் டி கிடைக்கவேண்டும் என்றால், அதிகாலை வெயில் படுமாறு நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யத் தொடங்குங்கள். முடியாவிட்டாலும் காலையில் செய்தித்தாளையாவது வெயிலில் உக்கார்ந்து படியுங்கள். 

தினமும் 20-30 நிமிடங்கள் காலை வெயில் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் டி குறைபாட்டால் பாதிப்படைவது வயிறுதான் என்பதால், வைட்டமின் டி குறைந்தால் முதலில் எடை கூடுவது வயிற்றுப்பகுதிதான். அதனால் வயிறு தொப்பைப் போடுகிறது என்றால் உடனே மருத்துவரிடன் சென்று ஆலோசனைக் கேளுங்கள். 

காசு செலவின்றி கிடைக்கும் காலை மற்றும் மாலை நேர வெயிலை உடலில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமும் கூடும். உடல் பருமனும் குறையும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *