இந்தியாவில் எடுக்கப்பட்ட டாப் 10 மெகா பட்ஜெட் படங்கள் பற்றி இங்கு பார்க்கப்போகிறோம். ஒரு காலத்தில் பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து வந்த இந்தி திரையுலகம் சமீபகாலங்களில் சற்று பின்தங்கி இருப்பதாகத்தான் தெரிகிறது. டாப் 10 படங்களில் 6 படங்கள் தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்பட்ட படங்களாக உள்ளது. வசூலிலும் தென்னிந்திய மொழிப் படங்கள்தான் சாதனைப் புரிகின்றன. அதை பற்றி விரிவாக இங்கு பார்ப்போம்.

10. 83
வெளிவந்த ஆண்டு: 2021
மொழி: இந்தி, ஆங்கிலம்
பட்ஜெட்: 265 கோடி
வசூல்: 193.73 கோடி
அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களில் 10-வது இடத்தில் இருப்பது 83 என்ற இந்தப் படம்தான். 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். கிரிக்கெட் லவ்வர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்த படம். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் எடுக்கப்பட்ட படம். படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் வசூல் சுமார்தான். 265 கோடி செலவழித்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்தியாவில் 10-வது பிரமாண்டமான படமாக இருக்கிறது. உலகம் முழுவதும் 193.73 கோடி வசூல் ஈட்டிய படம்.
09. ஜீரோ
வெளிவந்த ஆண்டு: 2018
மொழி: இந்தி
பட்ஜெட்: 270 கோடி
வசூல்: 191.13 கோடி
டாப் 10 மெகா பட்ஜெட் படங்களில் ஒன்பதாவது இடத்தில் இருப்பது ஜீரோ. 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் இது. ஷாருக்கான் நடித்த படங்களில் இதுதான் அதிக பட்ஜெட் படம். காதலும் காமெடியும் கலந்த இந்தப் படத்தின் பட்ஜெட் 270 கோடி. உலகம் முழுவதும் 191.13 கோடி வசூலானது.

08. சாம்ராட் பிரித்விராஜ்
வெளிவந்த ஆண்டு: 2022
மொழி: இந்தி
பட்ஜெட்: 300 கோடி
வசூல்: 87 கோடி
மெகா பட்ஜெட் படங்கள் வரிசையில் எட்டாவது இடத்தில் இருப்பது சாம்ராட் பிரிதிவிராஜ். இதுவொரு இந்திப் படம். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். வெறும் 87 கோடிதான் வசூலானது. அக்ஷய் குமார் நடித்த இந்தப் படம் மன்னன் பிரிதிவிராஜ் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
07. ராதே ஷ்யாம்
வெளிவந்த ஆண்டு: 2022
மொழி: தெலுங்கு, இந்தி
பட்ஜெட்: 330 கோடி
வசூல்: 156.8 கோடி
மெகா பட்ஜெட் படங்கள் வரிசையில் ஏழாவது இடத்தில் இருப்பது ராதே ஷ்யாம் என்ற தெலுங்கு மற்றும் இந்தி படம். இரண்டு மொழிகளில் 330 கோடி ரூபாய் செலவில் உருவான ஒரு பீரியட் ரொமான்டிக் பிலிம். பாகுபலி நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் இத்தாலி ஜியார்ஜியா மாற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. உலகம் முழுவதும் 156.8 கோடி வசூலானது.
06. சாகோ
வெளிவந்த ஆண்டு: 2019
மொழி: தெலுங்கு, இந்தி, தமிழ்
பட்ஜெட்: 350 கோடி
வசூல்: 432 கோடி
அதிகமாக செலவழித்து எடுக்கப்பட்ட இந்தியப் படங்கள் வரிசையில் ஆறாவது இடத்தில் இருப்பது சாகோ. இதுவும் பிரபாஸ் படம்தான். இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் எடுக்கப்பட்டப் படம். மொத்த பட்ஜெட் 350 கோடி. உலகம் முழுவதும் வசூலான தொகை 432 கோடி ரூபாய்.

05. புஷ்பா 2 தி ரூல்
வெளிவரும் ஆண்டு: 2023
மொழி: தெலுங்கு
பட்ஜெட்: 400 கோடி
அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்தியப் படங்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருப்பது புஷ்பா -2 தி ரூல். அடுத்த வருடம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த புஷ்பா முதல் பாகத்தை அடுத்து இது வெளிவருகிறது. முதல் பாகம் வசூலில் சாதனை புரிந்ததுபோல் இரண்டாவது பாகமும் சாதனை புரியும் என்று நம்பப்படுகிறது.

04. ஆதிபுருஷ்
வெளிவரும் ஆண்டு: 2022
மொழி: இந்தி
பட்ஜெட்: 500 கோடி
பெரிய பட்ஜெட் படங்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருப்பது ஆதிபுருஷ். இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் எடுக்கப்படுகிறது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் இந்த வருடம் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மனிதன் என்ற பெயரில் இந்திய புராணங்களின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. பிரபாஸ் தான் இதிலும் ஹீரோ.

03. பொன்னியின் செல்வன்
வெளிவரும் ஆண்டு: 2022
மொழி: தமிழ்
பட்ஜெட்: 510 கோடி
மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் டாப் 10 இந்தியப் படங்களில் மூன்றாவது இடத்தில் இருப்பது நாம் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் மணிரத்தினத்தின் இயக்கத்தில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்‘. 510 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் இந்தப் படம் தமிழர்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக உருவாகி வருகிறது. இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் படம் ரிலீசாக உள்ளது. படம் மாபெரும் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.

02. 2.0
வெளிவந்த ஆண்டு: 2018
மொழி: தமிழ்
பட்ஜெட்: 575 கோடி
வசூல்: 618 கோடி
டாப் 10 பிரமாண்ட படங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் வந்தது. இதன் பட்ஜெட் 575 கோடி. இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாக கடந்த நான்காண்டுகளாக முதலிடத்தில் இருந்த படம் இதுதான். தமிழில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பின்னர் நிறைய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இந்தப் படம் உலகம் முழுவதும் 618 கோடி வசூல் செய்தது.

01. ஆர்ஆர்ஆர்
வெளிவந்த ஆண்டு: 2022
மொழி: தெலுங்கு
பட்ஜெட்: 600 கோடி
வசூல்: 1,120 கோடி
இந்திய மொழிகளில் வெளிவந்த மற்றும் வரப்போகிற படங்களில் அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்ற வரிசையில் முதலிடத்தில் இருக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்திய சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் பட்ஜெட் 600 கோடி. இப்படி பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும் இதன் வசூலும் பிரமாண்டமாக இருந்தது. உலகம் முழுவதும் இந்தப் படம் வசூல் செய்த தொகை 1,120 கோடி.
இந்தப் படங்களில் உங்கள் மனதை கவர்ந்த படம் எது? என்ன காரணம் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

தகவல் 360டி.காம் என்ற இந்த தளம் அனைத்து விதமான தகவல்களையும் தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், பயணம், சுற்றுலா, மனிதர்கள், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், உடல் நலம், ஆன்லைனில் வருமானம் போன்ற பல தகவல்களை வழங்குகிறது. சாதனை மனிதர்களின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்வுகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் வாழ்க்கை என்று சகலவிதமான தகவல்களையும் நிறைவாக தரும் தளமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
Try this link.
betanovip
Thank you.