Guru Peyarchi 2021 Magaram

மகர ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?

மகர ராசிகார்கள் பொதுவாக விடமுயற்சி உடையவர்கள். இவர்கள் பொறுமையாகவே எல்லா விஷயங்களையும் செய்வார்கள். இவர்கள் எப்பொழுதுமே யோசித்து கொண்டே இருப்பார்கள்.

எவ்வளவு பெரிய தோல்வி கண்டாலும் சோர்வு அடைய மாட்டார்கள். அதிலிருந்து பாடம் கற்று மீண்டும் முயற்சி செய்வார்கள். இவர்கள் இரக்க சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள்.

மகர ராசிகார்களின் பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிரிகளுக்கும் உதவி தேவை என்ற நிலை வந்துவிட்டால் பகையை மறந்து உதவி செய்வார்கள். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம், துன்பம் வந்தாலும் அலட்டி கொள்ள மாட்டார்கள்.

பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். எல்லா விஷயங்களிலும் ஆதாயம் அடைய நினைப்பார்கள். இவர்கள் சமயங்களில் நகைச்சுவையாளராக மாறி மற்றவர்களை சிரிக்கவும் வைப்பார்கள். இவர்கள் வெகுளித்தனமான வெள்ளை மனம் கொண்டவர்கள்.

மகர ராசிகார்களுக்கு குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும். பெற்றவர்கள், பிள்ளைகள் மேல் அதிக அன்பு கொண்டிருப்பார்கள். தான் கஷ்டபட்டாலும் மற்றவர்கள் மனம் கோணாத அளவுக்கு நடந்து கொள்வார்கள்.

இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். இவர்கள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாக்கு கொடுக்க மாட்டார்கள். வாக்கு கொடுத்துவிட்டால் அதை எப்படியாவது முடித்து கொடுத்து விடுவார்கள்.

சாத்வீக கிரகம்

வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும்.   

குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது.

குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒர் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. குரு தனது 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.

ஜோதிடத்தைப் பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வரும் போது தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன்கள் தரப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு.

மகர ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களை காணொளியாகவும் இங்கு பார்க்கலாம்

அந்த வகையில் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான ஆண்டு கிரகம், குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆகியுள்ளார்.

சஞ்சாரம்

மகர ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 12 மற்றும் 3ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு இரண்டாம்   வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார்.

இரண்டாம்  இடம் என்பது குடும்பம் மற்றும் தனத்தைக் குறிக்கும் ஸ்தானம் ஆகும்.  குருவிற்கு 5, 7 மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 6, 8 மற்றும் 10 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார்.

இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும்.

குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் கவனம் தேவை. குழந்தைகள் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம்.

நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும்.  காதல் வயப்பட்ட மகர ராசி அன்பர்கள் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வார்கள்.

ஆடம்பர வாழ்க்கை

கணவன் மனைவி உறவில் இனிமை இருக்கும். இல்லறத்தில் இனிமையும் அந்நியோன்யமும் நெருக்கும் அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றம் தரும் வகையில் இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

உங்கள் சேமிப்புப் பணம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவியாக இருக்கும்.  உங்கள் வசதி வாய்ப்புகள் பெருகும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள். அலுவலகத்தில் பணி புரிபவர்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள்.

அரசுத் துறையில் பணி புரிபவர்கள் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் பெறுவார்கள். தொழில் சிறப்பாக நடக்கும். கூட்டுத் தொழில் மூலம் லாபம் பெருகும். பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களுக்குப் படிப்பில் கவனச் சிதறல்கள் ஏற்படலாம்.

உயர் கல்வி படிக்கும் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெறுவார்கள். சிறப்பாகப் கல்வி பயின்று வெற்றி காண்பார்கள்.

படித்து முடித்து வேலை தேடும் மாணவர்கள் சிறந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கப் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள்.

அதிக பணிகள் காரணமாக சோர்வு மற்றும் அசதி உங்களை ஆட்கொள்ளும். சரியான உணவு மற்றும் முறையான தூக்கம் உங்கள் சிறந்த ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

குடும்பம்

குடும்பத்தில் அனைவரிடமும் சுமுகமான உறவு மேற்கொள்ள நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை.  நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

ஆரோக்கியம்

கடமை முக்கியம் என்றாலும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பல கடமைகள் இருந்தாலும் ஓய்விற்கும் நேரத்தை ஒதுக்க முயலுங்கள். அதிகப் பணிகள் சோர்வை ஏற்படுத்தி தூக்கமின்மை பாதிப்பிற்கு உங்களை ஆளாக்கும்.

தியானம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளுங்கள். உங்கள் தாயாரின் உடல் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்.

காதல் / திருமணம்

காதலர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். வெளியிடங்களுக்குச் சென்று தங்கள் உறவை பலப்படுத்திக் கொள்வார்கள்.

கணவன் மனைவி உறவுநிலை சுமுகமாக இருக்கும். சரியான புரிந்துணர்வு காரணமாக நெருக்கமும் அந்நியோன்யமும் அதிகரிக்கும்.

நிதி நிலை

உங்கள் வருமானம் கணிசமாக உயரும். கையில் பணம் தாராளமாகப் புழங்கும். பொருளாதார நிலை ஸ்திரமாக இருக்கும். பண நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. சேமிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும்.

வேலை / தொழில்

இந்தப் பெயர்ச்சியில் வேலையைப் பொறுத்தவரை சாதகமான பலன்கள் கிட்டும் என்றாலும்  உங்களுக்கு அலுவலகத்தில் பணிகள் அதிகம் காணப்படும். பொறுப்புகள் கூடும்.

மலை போலக் குவியும் பணிகள் உங்களுக்கு அச்சம் மற்றும் அசதியை ஏற்படுத்தும். திட்டமிட்டு பணியாற்ற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அரசுப் பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வைப் பெறுவார்கள்.  வியாபாரம் மற்றும் தொழில் மூலம் சிறந்த லாபம் கிட்டும்.

கல்வி

பள்ளி மாணவர்கள் மனதை ஒருமுகப் படுத்தி படிக்க முயல வேண்டும். கவனம் சிதறாமல் படிப்பதன் மூலம் வெற்றி காண இயலும். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு உங்களுக்கு உறுதுணையாகச் செயல்படும்.

வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். படிப்பை முடித்தவர்கள் உடனடியாக வேலை கிடைக்கப் பெறுவார்கள்.

பரிகாரங்கள்

குழந்தைகளுக்கு இனிப்பு பதார்த்தங்களை வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும்.  வியாழக்கிழமை விரதமிருந்து தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும். ஏழை மாணவர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published.