Thulam Guru Peyarchi

குரு பெயர்ச்சி: துலாம் ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?

துலாம் ராசிக்காரர்கள் தங்களை அழகு படுத்திகொள்வதில் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள். வித விதமான ஆடை, ஆபரணங்களை அணிவதில் விருப்பமுடையவர்கள். இவர்கள் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கிற வேறுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவார்கள்.

நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள். எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருபதையே விரும்புவார்கள். எல்லா விஷயத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவார்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதை எப்பாடு பட்டாயினும் செய்து முடித்து காட்டுவார்கள். தோல்விகள் வந்தால் துவண்டு போக மாட்டார்கள்.

துலாம் ராசிகாரர்கள் யாரையும் சார்ந்து இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு வைராக்கியம் அதிகம் இருக்கும். இவர்கள் கௌரவத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களின் வாழ்க்கை துணையும் இவர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். இவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். 

சுப கிரகம்

குடும்ப பொறுப்புகள் அதிகம் இருக்கும். பொது சேவைகள் செய்வார்கள். வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது.

துலாம் ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி இருக்கிறது? காணொளியாகவும் காணலாம்

குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. குரு தனது 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.

ஜோதிடத்தைப் பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வரும் போது தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன்கள் தரப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு.

அவிட்டம் 

அந்த வகையில் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான ஆண்டு கிரகம், குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2-ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3-ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.

கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13-ம் தேதி பெயர்ச்சி ஆவார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20-ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

துலாம் ராசி

துலாம் ராசிக்கு இதுவரை குரு பகவான் 4-ம் இடத்தில் அமர்ந்திருந்தார். அதாவது தடை ஸ்தனத்தில் இருந்தார். தற்போது 5-ம் இடத்திற்கு செல்கிறார்.

குரு நின்ற இடத்தை விட, அவரின் பார்வை பலன் அதிகம் என்பது ஜோதிட விதி. அதிலும் குருவின் 9ம் பார்வை மிக சிறப்பானது. இதுவரை தடைப்பட்டு வந்த உங்கள் முயற்சிகள், செயல்களில் வெற்றி உண்டாகும்.

ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?

திருமண தடையால் மனக்குழப்பத்திலிருந்த துலாம் ராசியினருக்கு நல்ல வரன் அமையும். வெளியூர், வெளிநாடு பயணங்களை எதிர்நோக்கி இருந்த துலாம் ராசியினருக்கு 9ம் பார்வையால் கனவு நினைவாகும். சிலருக்கு வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்க அனுமதி கிடைக்கும்.

கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். போட்டி தேர்வில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு போட்டி, தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்று நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

புத்திர ஸ்தானம்

மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். ஐந்தாம்  இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானம் ஆகும். குருவிற்கு 5, 7 மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 9, 11 மற்றும் 1 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார்.

இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடையே நல்லுறவு காணப்படும். உறவினர்கள் ஆதாரவாகச் செயல்படுவார்கள்.

குழந்தைகளுடன் நல்லுறவு இருக்கும். இளம் காதலர்கள் வெற்றி காண்பார்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் கை கூடும். கணவன் மனைவி உறவு நல்லுறவாக இருக்கும். அன்னியோன்யம் கூடும்.  வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். மனதில் அமைதி நிலவும். உங்கள் கடின முயற்சிகளின் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் நல்ல லாபம் கிட்டும்.

உணவில் கவனம்

முதலீடுகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருக்கும் துலாம் ராசி அன்பர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். பணிச் சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.  பிறர் பாராட்டும் வகையில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் அதிக லாபம் காண்பார்கள்.  பள்ளி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் உணவில் கவனம் தேவை.

கும்ப ராசியானது துலாம் ராசிக்குப் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீடாக அமைவதால் காதலில் வெற்றியைக் கொடுக்கும் விதமாகவும். திருமண முயற்சிகளில் வெற்றியைக் கொடுப்பதாகவும் இந்த குரு பெயர்ச்சி 2021 அமையப்போகிறது. 

கோள்சார குருவானவர் ஐந்தாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையாக லாபஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ராசியையும் பார்வையிடப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது துலாம் ராசியைச் சார்ந்தவர்களுக்கு நல்ல தொழில் மாற்றத்தையும், ஊக வணிகமான பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் லாபத்தையும், சகல சௌபாக்கியங்களையும் ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக அமையப்போகிறது. 

குடும்பம்

குடும்பத்தில் குதூகலம் நிறைந்து இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். மூத்த சகோதர சகோதரிகளிடம் நல்லுறவு காணப்படும். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளுடனான நல்லுறவு நீடிக்கும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். இது தங்களின் மன மகிழ்ச்சியைக் கூட்டும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடல் நிலைக்கு வழி வகுக்கும். இந்த பெயர்ச்சிக் காலக் கட்டங்களில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள இயலும். முறையற்ற உணவு காரணமாக அஜீரணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

காதல் / திருமணம்

துலாம் ராசி காதலர்கள் தங்கள் காதலில் வெற்றி காண்பார்கள். திருமணத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு தடைகள் யாவும் நீங்கப் பெற்று திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதிகள் இடையே நல்லுறவு காணப்படும். தாம்பத்திய வாழ்வு சிறக்கும். தங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். இது மனதிற்கு  அமைதியையும் மகிழ்ச்சியையும்  கொடுக்கும்.

நிதி நிலை

உங்கள் வருமானம் அதிகரிக்க நீங்கள் கடின முயற்சிகளை எடுப்பீர்கள் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றிக்கு வழி வகுக்கும். பங்கு வர்த்தக முதலீடு உங்களுக்கு லாபம் பெற்றுத் தரும்..

வேலை / தொழில்

நீங்கள் புதிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும். நீங்கள் சிறப்பாகச் செயலாற்றி பணியிடத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டுத் தொழில் மூலமும் நீங்கள் சிறந்த லாபம் பெறுவீர்கள்.

கல்வி

மாணவ மாணவியர்கள் சிறப்பாகப் படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் ஆதரவைப் பெறுவார்கள். அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதன் மூலம் வெற்றி அடைந்து அவர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆராய்ச்சித் துறை மாணவர்கள் சிறப்பாகச் செயலாற்றி வெற்றி காண்பார்கள்.

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குப் புத்தகம் வாங்கி கொடுக்கலாம். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிவது சிறப்பு. பிரதோஷ வழிபாடு மிகுந்த நன்மைகளை கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published.