பூமியைப் போல பொறுமையாக காளை மாடைப் போல எப்போதும் சுமைகளை தாங்கிக்கொண்டிருக்கிற ரிஷப ராசிகாரர்களே! இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு என்னவெல்லாம் செய்து தர இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.
வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது.
குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. குரு தனது 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.
குரு பெயர்ச்சி
ஜோதிடத்தைப் பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வரும் போது தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன்கள் தரப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் கட்டுவதுண்டு.
குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள்?
அந்த வகையில் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான ஆண்டு கிரகம், குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2-ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3-ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.
கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13-ம் தேதி பெயர்ச்சி ஆகிறார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20-ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.
தொழில் ஸ்தானம்
குரு பெயர்ச்சி 2021ன் போது ரிஷப ராசிக்கு 10-ம் இடமான கர்மா, தொழில் ஸ்தானம் எனும் ஜீவன ஸ்தானத்தில் குரு பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். குரு பகவான் 2021 நவம்பர் 13-ம் தேதி (ஐப்பசி 27) முதல் ஏப்ரல் 14 (பங்குனி 30) வரை குரு கும்ப ராசியில் சஞ்சாரம் செய்வார். அதன் பின் அதிசாரமாக மீன ராசிக்கு சென்று திரும்புவார்.
குரு பெயர்ச்சி 2021 பிலவ வருடம் ஐப்பசி 27ம் தேதி (நவம்பர் 13), சனிக்கிழமை அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.
இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலிருந்து பெயர், புகழ், சமூகத்தில் மரியாதை கிடைக்கவும், சில சுப நிகழ்வுகள் நடக்கவும் உறுதுணையாக இருந்தார். ஆனால் தந்தையோடு சிறு மனஸ்தாபம், பிரச்னைகள், தந்தை வழியில் கருத்து வேறுபாடுகள் என சில சங்கடங்களையும் கொடுத்து வந்தார்.
தனித்திறமைகள்
இந்நிலையில் தற்போது குரு பகவான் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், தனித்திறமைகள் வெளிப்பட வாய்ப்புள்ளது.
இதுவரை உங்களுக்கு கிடைக்காத மதிப்பு, மரியாதை உங்கள் தொழில் மற்றும் பணிபுரியும் இடங்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. தகுதி வாய்ந்தவருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் சில இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேஷ ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
பல வழிகளில் உங்களுக்கு நல்லவிதமான பலன்கள் கிடைத்தாலும், அவ்வப்போது சக ஊழியர்களால் வேலையில் சில சங்கடங்கள், பிரச்னைகள், பணிச்சுமைகள் ஏற்படும் என்பதால் உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையும், நல்ல மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. குரு பகவான் தரும் பலன்களை இந்தாண்டு இரண்டாகப் பிரிக்கலாம். அவற்றை இங்கு பார்ப்போம்.
ஆம், ஒவ்வொரு ஆண்டும், நடக்கும் குரு பெயர்ச்சி முடிந்ததும், சில மாதங்கள், தான் பெயர்ச்சி ஆன ராசியில் இருக்கும் குரு, பின்னர் அதிசார நிலையாக அடுத்த ராசிக்கு சென்று மீண்டும் வக்கிர கதியாக திரும்புவது வழக்கம்.
அந்த வகையில் 2021 நவம்பர் 13ம் தேதி (ஐப்பசி 27) முதல் ஏப்ரல் 14 (பங்குனி 30) வரை குரு கும்ப ராசியில் சஞ்சாரம் செய்வார். அதன் பின் அதிசாரமாக மீன ராசிக்கு சென்று திரும்புவார்.
கும்பத்தில் இருக்கும் போது தரும் பலன்கள்
2021 நவம்பர் 13ம் தேதி (ஐப்பசி 27) முதல் ஏப்ரல் 14 (பங்குனி 30) வரையிலான காலகட்டத்தில் குரு தன் 5, 7, 9-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 2, 4, 6ம் இடங்களுக்குரிய பார்வை பலன்களைத் தருகிறார்.
வீடு, சொத்து வாங்க நல்ல வாய்ப்பு குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கி நிம்மதி ஏற்படும். சுப காரிய முயற்சிகள் வெற்றி அடையும், மகிழ்ச்சி பெருகும்.
வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. சிலர் வீடு, மனை, பழைய வீட்டை புதுப்பித்தல் போன்ற சுப செலவுகளை செய்வீர்கள். அதுமட்டுமில்லாமல் சுப நிகழ்வுக்காகவும், உங்கள் விருப்பம் நிறைவேற்றும் விதமாக ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
உங்களின் பொருளாதார நிலை உயரும் என்பதால் உங்களின் கடன் பிரச்னைகளை தீர்க்க வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்து வந்த நோய்கள் தீர்வதற்கான மருத்துவச் சிகிச்சை முன்னெடுப்பீர்கள். உங்களின் மருத்துவ செலவுகளால் உடல் நலம் சிறக்கும்.
அதிசார குரு பெயர்ச்சி
அதிசார குரு பெயர்ச்சி என்ன பலன் தரும்?
குரு பகவான் ஏப்ரல் 14 முதல் நவம்பர் 22ம் தேதி வரை எப்படி பலன் தருவார்?
இரண்டாம் பகுதியாக குரு பகவான் தான் வசித்துக் கொண்டிருக்கும் கும்ப ராசியிலிருந்து அதிசாரமாக, ரிஷப ராசிக்கு 11-ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
இதன் காரணமாக உங்களுக்கு நிதி ரீதியாக உங்களுக்கு சாதகமானதாகவும். பல வழிகளிலிருந்து லாபம் தரக்கூடிய அமைப்பு இருக்கும்.
சிலர் வெளியூர், வெளிநாடு சென்று வேலை அல்லது தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். சிலர் புதிய தொழில் அல்லது புதிய வேலைக்கு செல்ல வாய்ப்புகள் ஏற்படும்.
குருவின் அதிசார பெயர்ச்சியின் போது குருவின் 5, 7, 9ம் பார்வை, உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்கள் மீது விழுகிறது.
ஐந்தாம் பார்வை ராசிக்கு 3-ம் இடமான தைரிய ஸ்தானத்தின் மீது விழுவதால், நீங்கள் குடும்பம், தொழில், வேலை என எல்லாவற்றிலும் தைரியமாக முடிவெடுப்பதோடு, செயல்களையும் உறுதியாக செய்வீர்கள்.
குழந்தை பாக்கியம்
சகோதர, சகோதரிகள் உங்களுக்கு பல வழிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ராசிக்கு 5-ம் இடத்தை குரு 7-ம் பார்வையாக பார்ப்பதால், திருமணமான தம்பதிகளுக்கும், நீண்ட காலமாக குழந்தை வரம் வேண்டுவோருக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து பிரச்சினை நீங்குவதோடு, புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உயர் கல்வி கனவுகள் நினைவாகும்.
குருவின் 9-ம் பார்வை ராசிக்கு 7-ம் இடமான மனைவி, தொழில் கூட்டாளி ஸ்தானத்தைப் பார்ப்பதால், நீண்ட காலமாக திருமண தடை ஏற்பட்டவருக்கு கூட விரைவில் திருமணமாக வாய்ப்புள்ளது. உங்களின் தொழில் சிறக்கும்.
உங்களின் பங்குதாரர் உங்களின் முடிவுக்கு ஆதரவு தருவதோடு, உங்கள் பணியாளர்கள் மிக சிறப்பான ஆதரவை உங்களுக்கு தருவார்கள். இதனால் தொழில் ரீதியான நல்ல லாபம் உண்டாகும். உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும்.
ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி ஒட்டுமொத்தத்தில் முதல் பாதியில் உங்களின் தொழில், வேலை சிறப்பாக செய்வதற்கும், உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் தருவதாக இருக்கும்.
நிம்மதி, அமைதி
குடும்பம், தொழில் ரீதியாக சிறியளவிலான பிரச்னைகள் இருந்தாலும் நிம்மதி, அமைதி ஏற்படும்.
குரு பெயர்ச்சி பிற்பகுதியில் மிக சிறப்பாக, யோக பலன்களையும், கர்ம பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சுப காரியங்கள் சிறப்பாக நடக்க வாய்ப்புள்ளது.
அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வரவும். முடிந்தால் அர்ச்சனை செய்யவும்.
இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்களால் முடிந்தால் அருகில் இருக்கும் குரு பகவானுக்கு சிறப்பு வாய்ந்த ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வரவும்.
உங்களின் குருவான ஆசிரியர்களின் ஆசி பெறுங்கள், மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதி சென்று வழிபட்டு வாருங்கள்.
இந்த குரு பெயர்ச்சியானது ரிஷப ராசியைச் சார்ந்தவர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன் உயர்பதவி கிடைப்பதற்கு ஏதுவாகவும், நிலம், வீடு, வண்டி போன்ற இவ்வுலக சுகங்களை வாரி வழங்கும் வருடமாகவும் இருக்கப்போகிறது.
குடும்பம்:
ரிஷப ராசி அன்பர்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். குடும்ப உறுப்பினர்கள் இடையே ஒற்றுமையும் நல்லிணக்க உறவும் மேம்படும். அண்டை அயலார் மற்றும் நண்பர்களிடமும் சமூகமான உறவு இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம், வளைகாப்பு, குழந்தைப் பேறு போன்ற விசேஷங்கள் காரணமாக வீடு களை கட்டும். கலகலப்பு இருக்கும். தாய் மற்றும் தந்தையின் நலனில் அக்கறை தேவை. குழந்தைகளுடனான உறவு நன்றாக இருக்கும்.
ஆரோக்கியம்:
சுத்தம் சுகாதாரம் மற்றும் ஒழுக்கம் பின்பற்றுவதன் மூலம் தேக ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள இயலும். இவற்றை நீங்கள் உங்கள் வாழ்வில் பின்பற்றுவதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். மேலும் முறையான உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். துரித உணவு வகைகளைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். வயதானவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை.
கணவன் மனைவி தங்கள் உறவில் சிறிது கவனமாகச் செயல்பட வேண்டும். கருத்து வேறுபாடு காரணமாக சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பணம் சம்மந்தப்பட்ட விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
வேலை, தொழில்:
பணியில் இருக்கும் ரிஷப ராசி அன்பர்கள் உற்சாகத்துடன் பணி புரிவார்கள். அதன் மூலம் உங்கள் செயல் திறன் வெளிப்படும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். சக பணியாளர்கள் சிறந்த ஒத்துழைப்பை நல்குவார்கள். தொழில் சிறப்பாக நடக்கும். அதன் மூலம் லாபமும் வருமானமும் உயரும்.
புதிய தொழிலைத் தொடங்குவது ஏற்ற காலமாக இந்தக் காலம் அமையும். என்றாலும் புதிய தொழிலை தொடங்குவதற்கு முன் நன்மை தீமைகளை அலசி பிறகு முடிவுகளை எடுப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் பொறுப்புகள் அதிகம் காணப்படும்.
வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த சரியான முறையில் கடமைகளை ஆற்ற வேண்டியிருக்கும். உங்கள் முயற்சி மூலம் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். தொழில் வல்லுனர்கள் தங்கள் பணியில் ஏற்றம் காண்பார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவார்கள்.
கல்வி:
மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டும். கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் மனதை ஓருமுகப்படுத்தி படிக்க வேண்டும். பொறியியல் மற்றும் ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு இது சாதகமான பலனளிக்கும் காலக் கட்டம் ஆகும்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமை அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொண்டைக்கடலை சுண்டல் செய்து தானம் செய்யவும். பசுவிற்கு வாழைப்பழம் தானமாகக் கொடுக்கவும். சிவன் கோவிலில் நெய் தானமாகக் கொடுக்கவும்.
ஆசிரியர் பற்றி…
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர், மீனாட்சி மைந்தன், திருவருட்செல்வர், நகைச்சுவை நாவரசு, எழுத்தாளர், கவிஞர், ஆன்மிக சொற்பொழிவாளர், குடமுழுக்கு திருவிழாக்களின் நேர்முக வருணனையாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், 5000 ஆயிரம் பட்டிமன்றங்களுக்கு மேல் நடுவராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். வெள்ளி விழா கண்ட மதுரை இலக்கியப்பேரவையின் தலைவர்.