Simmam Guru Peyarchi 2021

குரு பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி?

இந்த குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது? சிம்ம ராசிக்கரர்கள் விடாமுயற்சி அதிகம் கொண்டவர்கள். இவர்கள் வீண் சண்டைக்கு போக மாட்டார்கள். ஆனால் சண்டை என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்க்காமல் விடமாட்டார்கள். இவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். பிறர் செய்யும் சிறு தவறை கூட பெரிதாக்கி அவர்களை தண்டிப்பார்கள். இவர்கள் பெற்றோர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வார்கள்.

இவர்களில் பெரும்பாலோனோர் படித்த படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் சம்மந்தம் இருக்காது. செலவுகளை பற்றி கவலை பட மாட்டார்கள். பிறரிடம் கடன் வாங்குவது இவர்களுக்கு பிடிக்காது. கடன் வாங்கினாலும் அதை சரியாக திருப்பி செலுத்தி விடுவார்கள். கோபம் அதிகம் கொண்டவர்கள், அதனால் பிறருடன் இணக்கமாக இருபது கடினம்.

வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும்.   குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது.

குரு பிரகஸ்பதி

குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. குரு தனது 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.

ஜோதிடத்தைப் பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வரும் போது தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன்கள் தரப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு.

சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் காணொளியாக…

அந்த வகையில் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான ஆண்டு கிரகம், குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2-ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3-ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.

கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13-ம் தேதி பெயர்ச்சி ஆகிறார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20-ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

பார்வை அமைப்பு

குரு பகவானின் பார்வை அமைப்பு இதுவரை ஆறாம் இடத்தில் விழுந்து, சங்கடங்களை அனுபவித்து வந்த சிம்ம ராசியினர். தற்போது குருவின் நேர் எதிர் பார்வையான 7-ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது மிகவும் விசேஷமானது.

5, 8-ம் இடத்திற்கு உரிய குரு பகவான். 5-ம் இடத்தின் வேலையை 7-ம் இடத்தில் அமர்ந்து செய்வதால் வேலை, தொழில், சுற்றுலா தொடர்பாக வெளிநாடு, வெளியூர் பிரயாணங்கள் செய்ய திட்டமிட்டு நிறைவேறாமல் இருந்தவர்களின் கனவு நிறைவேற நல்வாய்ப்பாக அமையும்.

இதுவரை இருந்த கடன், வம்பு, வழக்கு, நோய், வில்லங்கங்கள் போன்ற மோசமான நிலை நீங்கி விடுதலைப் பெற வாய்ப்புகள் அமையும்.

திருமணம், குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு அவர்களின் விருப்பம் நிறைவேறி, குடும்பமே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிறப்பான வாழ்க்கை துணை உங்களுக்கு அமைவார்கள். உங்களுக்கு இருந்த சொத்து பிரச்னைகள், புதிய சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற கனவு, ஆசைகள் நிறைவேற வாய்ப்புகள் உருவாகும்.

உங்களின் மருத்துவ செலவுகள் வெகுவாக குறையும். ஆரோக்கியம் மேம்படும். ராசி மீது குருவின் பார்வை நேரடியாக விழுவதால் உங்களின் காரிய தடை நீங்கி சிறப்பாக இலக்கை அடைந்து பெயர், புகழுடன் செம்மையாக வாழ்வீர்கள்.

நல்ல வாய்ப்புகள்

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். அரசியலில் சிறப்பாக செயல்படுவீர்கள். அரசு வேலைக்கு முயல்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். எந்த ஒரு செயலிலும் துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் ஏற்படும்.

கும்ப ராசியானது சிம்ம ராசிக்கு களத்திர ஸ்தானமான ஏழாம் வீடாக அமைவதால் திருமணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தவர்களுக்கு திருமணத்தையும், புதிய தொழிலில் அமைப்பையும் ஏற்படுத்தக்கூடியதாக இந்த குரு பெயர்ச்சி அமையப்போகிறது.

ஏழாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக லாபஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக  சிம்ம ராசியையும், ஒன்பதாம் பார்வையாக இளைய சகோதர ஸ்தானத்தையும், குரு பார்வையிடப்போகிறார். இந்த குருப் பெயர்ச்சியானது சிம்ம ராசியைச் சார்ந்தவர்களுக்கு தாம்பத்திய வாழ்வில் நல்ல அன்யோன்யத்தையும், தொழில் முயற்சிகளில் வெற்றியையும், பொருளாதார நிலையில் ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது. 

குடும்பம்

குடும்ப உறப்பினர்களுடனான உறவு நிலை சிறப்பாக இருக்கும். குறிப்பாக  இளைய சகோதர சகோதரிகளிடம் நல்லுறவு காணப்படும்.  திருமணம் மற்றும் வளைகாப்பு போன்ற சுப விசேஷங்கள் மற்றும் விருந்து விசேஷங்கள் காரணமாக வீட்டில் கலகலப்பான சூழ்நிலை இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். புதிய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.  உங்கள் தாயாரின் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க இயலும். எனவே உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறந்த முறையில் காத்துக் கொள்ளுங்கள்.  சிறுநீரகம் சம்பந்தப்பட்ட உடல்நல பாதிப்பு ஏற்படலாம். போதுமான நீர் உட்கொண்டு இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். சிறிய பாதிப்பு என்றாலும் உடனடி கவனம் செலுத்தி ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளுங்கள்.

திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்கள் முயற்சி கை கூடி வருவதால் மகிழ்ச்சி கொள்வார்கள். தடைகள் யாவும் நீங்கப் பெற்று இனிய இல்லறம் தொடங்க ஏற்ற காலம். கணவன் மனைவி ஒற்றுமை கூடும்.

நிதி நிலை

உங்கள் பொருளாதார நிலை திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். சேமிப்பு மற்றும் முதலீடுகளின் மூலம் உங்களின் பெரும் செலவுகளை சமாளிக்க இயலும். அசையாச் சொத்துக்களை வாங்குவது அல்லது இருக்கும் சொத்தை பராமரிப்பது என்ற வகையில் செலவினங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வேலை / தொழில்

அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் கருத்து வேறுபாடு ஏற்படாத வகையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சுமுகமான நிலையை ஏற்படுத்திக் கொள்ள இயலும். எதிர் வாதம் மற்றும் வாக்கு வாதங்கள் எடுபடாது என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. 

நிதித்துறை, கல்வித்துறை, மருத்துவத் துறை மற்றும் நீதித்துறையில் வேலை செய்பவர்கள் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள். வெளிநாட்டில் வேலை வேண்டும் என்ற உங்கள் எண்ணம் கை கூடும்.  பேராசிரியர் தொழிலில் இருப்பவர்களுக்கு கணிசமான வருமானம் கூடும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதித் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள்   கிடைக்கப் பெறுவார்கள். அது உங்களுக்கு எதிர்காலத்தில் நன்மை அளிக்கும். 

கல்வி

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றுவதன் மூலம் வெற்றி காண இயலும். பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் உடனடியாக வேலை கிடைக்கப் பெறுவார்கள். ஆராய்ச்சித் துறை  மாணவர்கள் தங்கள் கடின முயற்சி மூலம் வெற்றி இலக்கை எட்ட இயலும்.

பரிகாரங்கள்

வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட அனைத்திலும் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து சிவாலயம் சென்று வருவது நன்மை பயக்கும். ஏழை மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுப்பது உங்கள் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published.