மீன ராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிரித்த முகத்துடன் காட்சி தருவார்கள். இவர்கள் எப்பொழுதும் கனவுலகிலே சஞ்சரித்து கொண்டே இருப்பார்கள்.
மீன ராசியில் பிறந்தவர்கள் சமயத்துக்கு ஏற்றார் போல் நடந்து கொள்வார்கள்.
மீன ராசிக்காரர்கள் எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வார்கள். யாராவது இவர்களை அவமானபடுத்தினால் மறுபடி அவர்களை சீண்டவே மாட்டார்கள். இவர்கள் வாய் சாதுர்யம் மிக்கவர்கள். எதையும் பேசி பேசியே சாதித்து கொள்வார்கள். ஆனால் இவர்களால் ரகசியங்களை காக்க முடியாது.
இவர்கள் பொறுமையானவர்களாகவும் அதே சமயம் திறமையானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மீன ராசிக்காரர்கள் தேவையில்லாமல் பேசி வம்பை விலைக்கு வாங்கி கொள்வார்கள். பிறர் செய்கிற வேலைகளில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். இவர்கள் சுகபோகமாக வாழ வேண்டும் என்றே விரும்புவார்கள்.
குரு பகவான்
வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது.
குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. குரு தனது 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.
ஜோதிடத்தைப் பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வரும் போது தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன்கள் தரப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு.
அந்த வகையில் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான ஆண்டு கிரகம், குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆனார்.
அதிசாரமாக பயணம்
கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13ம் தேதி பெயர்ச்சி ஆனார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.
மீன ராசி அன்பர்களே! உங்கள் ராசி மற்றும் 10ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021 அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீடான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். பன்னிரண்டாம் இடம் என்பது அயன, சயன, போக ஸ்தானம் ஆகும்.
குருவிற்கு 5, 7 மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 4, 6 மற்றும் 8 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள்.
குடும்ப உறவுகள் சீராகவும் அமைதியாகவும் இருக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. சுயநலமின்றி செய்லபடுவதன் மூலம் குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் இருக்கும்.
காதலில் கடுமையான முயற்சிக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் எழும் வாய்ப்பு உள்ளது. வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பொருளாதார நிலை அதிருப்தி அளிக்கும். கடின உழைப்பின் மூலம் தான் ஏற்றம் பெற இயலும்.
பலன் கிடைப்பது கடினம்
அசையாச் சொத்துக்கள் வாங்க செலவு மேற்கொள்வீர்கள். அந்நிய முதலீடுகள் லாபம் அளிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மந்தமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். கடின உழைப்பு மேற்கொண்டாலும் அதற்குரிய பலன் கிடைப்பது கடினம்.
தொழிலில் போட்டியாளர்களை வெல்வீர்கள். கூட்டுத் தொழில் லாபம் அளிக்கும். பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தவற வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாகப் படிக்க வேண்டும். உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் கவனிப்புத் திறன் அதிகரிக்கும்.
தொழில் நுட்பத் துறை சார்ந்த ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள். கண் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் தூக்கக் குறைபாடுகள் போன்ற உபாதைகளை சந்திக்க நேரும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
குடும்பம்:
குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். தன்னலம் பாராத உங்கள் செயல் குடும்ப உறுப்பினர்களின் அன்பை பெற்றுத் தரும்.
பொறுமையும் பேச்சில் நிதானமும் தேவை. தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் குடம்ப அமைதி காக்கப்படும்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம். எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருங்கள். கண் அல்லது தூக்கக் குறைபாடுகள் போன்ற உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்கள் தேக நலனுக்காக நீங்கள் சில மருத்துவ செலவுகளை மேற்கொள்ள நேரும்.
காதல் / திருமணம்:
மீன ராசி இளம் வயதினர் தங்கள் காதல் உறவு கை கூட கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரும். தன்னலமற்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கணவன் மனைவி உறவிலும் கருத்து வேறுபாடுகள் காரணமாக முரண்பட்ட நிலை இருக்கும். பொறுமை அவசியம். பேசும் வார்த்தைகளில் கவனம் அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்குவாதங்களை தவிர்த்தல் அவசியம்.
நிதி நிலை:
உங்கள் நிதிநிலை திருப்தி அளிக்கும் வகையில் இருக்க வாய்ப்பில்லை. உங்கள் இலக்கை எட்ட நீங்கள் கடுமையாகப் போராட மற்றும் உழைக்க வேண்டியிருக்கும். என்றாலும் உங்கள் கடின முயற்சிக்கான வெற்றியை பெற்று நீங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அசையாச் சொத்துக்களை வாங்கும் வகையில் பணத்தை செலவு செய்வீர்கள். சேமிப்பின் அவசியம் உணர்ந்து பணத்தை சேமிக்க முயலுங்கள்.
வேலை / தொழில்:
பணியிடச் சூழல் மந்தமாக காணப்படும். உங்கள் முன்னேற்றமும் மந்த நிலையில் இருக்கும். இது உங்களுக்கு வருத்தம் அளிக்கும் வகையில் இருக்கும். நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். என்றாலும் அதற்கான பலன் பெற இது சரியான தருணமாக இருக்க வாய்ப்பில்லை.
தொழில் செய்பவர்கள் போட்டியாளர்களை சந்திக்க நேரும். வாடிக்கையாளர்களைக் கவர அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். என்றாலும் நல்ல லாபம் கிட்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தங்களின் கூட்டாளி மூலம் லாபமும் ஆதாயமும் காண்பார்கள்.
கல்வி:
மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும். மனதை ஒருமுகப் படுத்திப் படிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை மாணவர்கள் தங்கள் இலக்கில் கவனம் செலுத்தி தங்கள் உழைப்பின் மூலம் வெற்றிக் கனியைப் பறிப்பார்கள்.
தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் வாங்குவது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் ஆடை அணிவது நல்லது. வியாழக்கிழமைகளில் சிவாலயம் சென்று வருவது சிறப்பு.
பரிகாரங்கள்:
தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் வாங்குவது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் ஆடை அணிவது நல்லது. வியாழக்கிழமைகளில் சிவாலயம் சென்று வருவது சிறப்பு.

ஆசிரியர் பற்றி…
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர், மீனாட்சி மைந்தன், திருவருட்செல்வர், நகைச்சுவை நாவரசு, எழுத்தாளர், கவிஞர், ஆன்மிக சொற்பொழிவாளர், குடமுழுக்கு திருவிழாக்களின் நேர்முக வருணனையாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், 5000 ஆயிரம் பட்டிமன்றங்களுக்கு மேல் நடுவராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். வெள்ளி விழா கண்ட மதுரை இலக்கியப்பேரவையின் தலைவர்.