கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களை பேச வைத்து ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள். இவர்கள் சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவர்கள். மனதுக்கு பிடித்தால் மட்டுமே வேலை செய்வார்கள். அவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
கன்னி ராசிகாரர்கள் எதிலும் அவசரபடாமல் நிதானமாக செய்யக்கூடியவர்கள். இவர்கள் மகிழ்ச்சியாக இருபதையே விரும்புவார்கள். யாரையும் புண்படுத்தும்படி பேச மாட்டார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்ள கூடியவர்கள்.
இவர்கள் வசீகரமான தோற்றத்தை கொண்டவர்கள். கூடவே நன்னனடதையும் உள்ளவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் எதிரிகளே இருக்க மாட்டார்கள். தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள்.
இவர்கள் பேச்சாற்றலும், அறிவாற்றலும் ஒருங்கே கொண்டவர்கள். தன்னை தாழ்த்தி கொண்டு பிறரை உயர்த்தும் குணம் கொண்டவர்கள்
சாத்வீக கிரகம்
வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது.
குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. குரு தனது 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.
- குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள்?
- மிதுன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
ஜோதிடத்தைப் பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வரும் போது தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன்கள் தரப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு.
குரு பகவான்
அந்த வகையில் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான ஆண்டு கிரகம், குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2-ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3-ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.
கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13-ம் தேதி பெயர்ச்சி ஆவார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20-ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.
கன்னி ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 13, 2021 அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். ஆறாம் இடம் என்பது கடன், நோய் மற்றும் எதிரிகளைக் குறிக்கும் இடம் ஆகும். குருவிற்கு 5, 7 மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 10, 12 மற்றும் 2 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார்.
பேச்சில் கவனம்
குடும்பத்தில் உறவு நிலை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்தப் பெயர்ச்சிக் காலங்களில் நீங்கள் அதிக குடும்ப பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற வார்த்தைகள் காரணமாக வீட்டு உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை.
- ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- இந்த குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது?
காதலர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம். கணவன் மனைவி உறவில் சில சிக்கல்கள் இருக்கும். எனவே உணர்ச்சி வசப்படாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும். அனுசரித்தும் விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவை பராமரிக்க முயலும். உங்கள் நிதிநிலையில் ஏற்றமான நிலை காணப்படும். வெளிநாட்டு முதலீடு மூலம் லாபம் அதிகரிக்கும்.
வீடு வாங்குதல்
நீங்கள் வீடு வாங்குதல், வீட்டுப் பராமரிப்பு, மற்றும் பயணச் செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். கடின உழைப்பு, பெயரையும் புகழையும் பெற்றுத் தரும். மாணவர்கள் சிறப்பாகப் படித்து முன்னேற்றம் காண்பார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இந்த குருப்பெயர்ச்சியானது கன்னி ராசியைச் சார்ந்தவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றத்தையும், தன நிலையில் உயர்வையும் ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது.
குடும்பம்
குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் உங்கள் பொறுப்பு அதிகரிக்கும். நீங்கள் உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் போது வீட்டில் உள்ள பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளுடனான உறவு வலுப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
ஆரோக்கியம்
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் சிறப்பான செயல்பாட்டிற்கு சிறந்த ஆரோக்கியம் முக்கியம். பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே சமயத்தில் அதிக பணிகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்காமலும் நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சி தியானம், முறையான ஒய்வு, சரியான உணவு மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள இயலும்.
காதல் / திருமணம்
காதல் என்றால் எந்த வகையிலாவது எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். இந்தக் காலக் கட்டத்தில் காதலர்கள் சில போராட்டங்களை சந்திப்பார்கள். காதல் கை கூடுவதில் சில சிரமங்களை சந்திக்க நேரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும் வாய்ப்பு உள்ளது. புரிந்துணர்வில் குறைபாடு இருப்பதன் காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். வாய்ச் சண்டை மற்றும் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவைப் பராமரிக்க இயலும்.
நிதி நிலை
பண விஷயங்கள் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். வருமானம் கணிசமாக உயரும். பொருளாதார ஏற்றம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு முதலீடுகள் லாபங்களை பெற்றுத் தரும். வீடு பராமரித்தல், பயணங்கள் செல்லுதல் என தரமான விஷயங்களுக்கு நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரும்.
- ராமநாதபுர அரண்மனைப் பற்றி நாம் அறியாத மர்மங்கள்..!
- தமிழ் நாட்டுக்காக தன்னையே மாய்த்துக்கொண்ட மாமனிதர்..!
வேலை / தொழில்
அலுவலகப் பணியாளர்கள் கவனமுடன் பொறுமையாகச் செயல்படுவதன் மூலம் வளர்ச்சி காண இயலும். பொறுப்புகள் கூடும் என்பதால் பணியிடத்தில் பதட்டமான மன நிலை இருக்கும். நீங்கள் கடினமாகவும் சிறப்பாகவும் பணியாற்றுவதன் மூலம் பணியிடத்தில் பெயரும் புகழும் பெறுவீர்கள். புதிய தொழில் ஆரம்பிக்க இது ஏதுவான காலம். வேலை நிமித்தமான பயணங்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள்.
கல்வி
மாணவ மாணவியர்களுக்கு இது ஒரு வசந்த காலம். படிப்பில் வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்கும். விடா முயற்சி மூலம் உயர் நிலை மாணவர்கள் சிறந்த நிலையை எட்டுவார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் உங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்.
வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்
முதியோர்களுக்கு வஸ்திர தானம் செய்வது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும். வியாழக்கிழமைகளில் பசுவிற்கு உணவு அளிக்கலாம். ஏழைக் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.

ஆசிரியர் பற்றி…
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர், மீனாட்சி மைந்தன், திருவருட்செல்வர், நகைச்சுவை நாவரசு, எழுத்தாளர், கவிஞர், ஆன்மிக சொற்பொழிவாளர், குடமுழுக்கு திருவிழாக்களின் நேர்முக வருணனையாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், 5000 ஆயிரம் பட்டிமன்றங்களுக்கு மேல் நடுவராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். வெள்ளி விழா கண்ட மதுரை இலக்கியப்பேரவையின் தலைவர்.