ஹிரண்யா பிரச்சனைக்கு ஆபரேஷன் தேவையில்லை

ஹிரண்யா பிரச்சனைக்கு ஆபரேஷன் தேவையில்லை

ஹிரண்யா பிரச்சனைக்கு ஆபரேஷன் தேவையில்லை

ஹிரண்யா என்றால் என்ன?

உடலிலே ஒரு உறுப்பு இருக்கிறது என்று சொன்னால், அந்த உறுப்பினை பாதுகாக்கும் படியாக தசையால் ஆன ஒரு கவச தொட்டில் போல் பாதுகாத்து வரும் தசைப்பகுதி இருக்கும். அத்தசைப் பகுதியில் ஒரு பிளவு அல்லது தொய்வு நிலை ஏற்படுவதால் அதன் மேலுள்ள உறுப்பு கீழிறங்கும். இதுவே ‘ஹிரண்யா’ எனப்படும். ஹிரண்யா அல்லது ஹெர்னியா என்று இரு பெயர்களால் இந்தப் பிரச்சனை அழைக்கப்படுகிறது.

பிறந்த குழந்தையிலிருந்து வயது முதிர்ந்தோர் வரை இந்த ஹிரண்யா வரலாம் .

எந்த இடத்தில் ஹிரண்யா பிரச்சினை வரலாம் ?

1. வயிற்றுப் பகுதி மற்றும் தொடைப் பகுதி சேருமிடத்தில் ஹிரண்யா வரலாம். 

2. தொப்புள் பகுதியில் ஹிரண்யா வரலாம்.

3. வேறு ஒரு பிரச்சினைக்காக  ஆப்பரேஷன் செய்த தழும்பிலிருந்து பலூன் போன்ற வடிவத்தில் கூட வரலாம்.

4. வலது வயிற்றுப்பகுதியில் வரலாம்.

5. மேல் வயிற்றுப் பகுதியில் வரும் வீக்கத்தால் வரலாம்

6. மார்பும் வயிறும் சேரும் உதரவிதானம் பகுதியில் ஹிரண்யா வரலாம்.

வெயிட் தூக்கினால் மட்டுமே ஹிரண்யா வருமா?

அப்படி பாரம் தூக்குவதால் மட்டும் இல்லாமல் வேறு பல காரணங்கள் உண்டு.

ஹிரணியாவிற்கான காரணிகள்:

1. ஒரு சிலருக்கு தொடர் இருமல் இருக்கும் பட்சத்தில் கூட வரலாம்.

2. ஒரு சிலருக்கு உடல் தசை தளர்வு இருப்பதால் கூட வரலாம்.

3. புராஸ்டேட் சுரப்பியில் அதிதீவிர வளர்ச்சியாலும்,  சிறுநீர் கழிக்கும்போது அதிக அளவில் முக்குவதாலும் வரலாம்.

4. பழக்கம் இல்லாமலோ அல்லது பெல்ட் போடாமலோ அதிக அளவு பாரம் தூக்குவதால் வரலாம்.

5. ஆபரேஷனுக்கு பிறகு அதிக அளவு உடற்பயிற்சியோ, ஓடுவது, ஆடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் வரலாம். 

6. பெண்களுக்கு பிரசவித்த பின்னும் ஹிரண்யா வரலாம்.

பிறக்கும் குழந்தைகளுக்கு கூட ஹிரண்யா வரலாம். பெண்களுக்கு மகப்பேறுக்கு பின் ஹிரண்யா வரலாம்.

ஹிரண்யாவிற்கான அறிகுறிகள்: 

ஹிரண்யா பிரச்சனைக்கு ஆபரேஷன் தேவையில்லை

அடிவயிற்றில் வலி ஏற்படலாம். அந்த இடத்தில் விட்டுவிட்டு வலிக்கும். தும்மும்போதும் இருமும் போதோ வயிற்றுப்பகுதி மற்றும்  வயிற்றின் அடிப்பகுதிகளில் வீக்கம் வருகிற மாதிரி இருக்கும். பித்த வாந்தி வருவது போலவும், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். தொப்புள் பகுதியில் வீக்கம் வரலாம்.

நாட்டு மருத்துவர்களின் கருத்து:

பொதுவாக உடலில் இருக்கக்கூடிய நீரானது வெப்பத்தால்  திரிவடையும் பொழுது காற்று என்று சொல்லக்கூடிய வாத நிலையினை அடைகிறது. 

வாதம் (காற்று) அதிகமாகி வயிற்றுப்பகுதிகளிலும் உப்பிசத்தை ஏற்படுத்தும். குடல் பகுதிகள் அழுத்தம் ஏற்படுவதால் கீழ் நோக்கித் தள்ளப்படும். அந்த உறுப்பை சுற்றி இருக்கக்கூடிய ஒமண்டம்  என்கிற லேயர் சிறிது சிறிதாக் கிழிந்து இந்த ஹிரண்யா என்கிற பிரச்சனை ஆரம்பிக்கும். 

ஓட்டை வழியாக குடல் கீழே வர ஆரம்பிக்கும். இறங்கிய பகுதியில் வீக்கம் ஏற்பட்டு வலி ஆரம்பிக்கலாம். ஆண்கள் சிலருக்கு விந்துப்பையானது தொடைச்சந்துப் பகுதிக்குள் இறங்க ஆரம்பிக்கும்.

இந்தக் குடல் இறக்கத்தால் மலக்குடல் அமுக்கப்பட்டு மலம் கழிக்கும்போது மலச் சிக்கலை ஏற்படுத்தி அதிகமாக அவர்களை முக்க வைக்கும். அப்பொழுது தான் பிரச்சனை அதிகமாகிறது. இது ஒரு பிரதானமான காரணமாகவும் அமைகிறது.

ஹிரண்யாவின் ஆரம்ப நிலையிலேயே அறிந்து உடனே இந்த பாரம்பரிய மருத்துவத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் ஆபரேஷனை தள்ளிப் போட்டுக்கொண்டே போகலாம். ஆபரேஷனுக்கு அவசியம் இருக்காது.

ஹிரண்யாவை முற்ற விட்டு சீல் பிடிக்கும்  நிலையினை ஏற்படுத்தி விட்டால் ஆபரேஷன் அவசிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆகவே ஆரம்ப நிலை தெரியும் பொழுது இந்த ஹிரண்யாவிற்கு கீழ் கண்ட மருந்துகளை எடுக்கும் பட்சத்தில் இதற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நாட்டு மருத்துவ வழிமுறைகள்: 

ஹிரண்யா பிரச்சனைக்கு ஆபரேஷன் தேவையில்லை

1. குறைந்தது 10 நாட்டு இலந்தைப் பழத்தின் கொட்டையை எடுத்துவிட்டு, புழு பூச்சி இல்லாமல் கால் ஸ்பூன் சீரகம், 3 பல் பூண்டு சேர்த்து துவையலாக அரைத்து ஒரு டம்ளர் சுடு பாலில் கலந்து குடித்துவர இந்த ஹிரண்யாவிற்கு கைகண்ட மருந்தாகத் திகழும். 

2. கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை சம அளவு எடுத்து பாத்திரத்தில் லேசாக வறுத்து அதை பவுடர் செய்து பொடித்து அக்கலவையிலிருந்து இரண்டு கிராம் எடுத்து வெதுவெதுப்பான நீருடன் பருகிவர மிகச் சிறந்த ஒரு தீர்வு கிட்டும். 

3. மஞ்சள்பூசணி, இஞ்சி, எலுமிச்சை இவற்றை மிக்ஸியில் அடித்து சாறாக்கி, 2 ஸ்பூன் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஹிரண்யாவுக்கு நல்ல ஒரு தீர்வு கிட்டும்.

4. கற்றாழை ஜெல் எடுத்து குடலிறக்க பகுதியில் தேய்த்து வர அந்த வீக்கம் வற்றும்.

5. அதேபோல கழற்சிக்காய் சூரணத்துடன்  மிளகுப் பொடி சேர்த்து இருவேளை சுடு நீரிலோ அல்லது வெண்ணெயிலோ கலந்து சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிட்டும்.

6. தேவதாருக்கட்டையை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, அந்தத் தேங்காய் எண்ணெயினை ஹிரண்யாவின் வெளிப்பகுதியில் தடவிவர வீக்கம் வற்றும்.

உணவு முறைகள் :

1. கோவைக்காயை உணவில் பொரியலாக அடிக்கடி செய்து சாப்பிட நலம் பயக்கும் 

2. வெந்தய தோசையை விளக்கெண்ணெய் விட்டு சுட்டு சாப்பிட மலச்சிக்கலால் ஏற்படக்கூடிய ஹிரண்யாப் பிரச்சனை நல்ல தீர்வு கிட்டும். 

3. அடிக்கடி நாட்டு இலந்தை பழம் ( தினம் பத்து பழமாவது) எடுத்துவர மிகச்சிறப்பு.

மருத்துவ ஜோதிடம்:

1. குருச்சந்திர யோகம் உள்ளவர்களுக்கு குடல் சார்ந்த பிரச்சனைகள் வரும்.

2. சிம்ம ராசி அல்லது சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு வயிறு சார்ந்த பிரச்சனைகள் வரும் கன்னி ராசி அல்லது கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  அடிவயிற்றில் பிரச்சனைகள் வரும்.

3. 6-ஆம் இடத்தில் குருவுடன் பாவிகள் சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினைகள் வரலாம். இதற்கான பரிகாரம் சனிக்கிழமை தோறும் நரசிம்மர் வழிபாடு செய்து வருவது சிறப்பு.

ஹிரண்யா சூரணம் :

மதுரை மாவட்டம் தே கல்லுப்பட்டியில் அமைந்திருக்கும் ஸ்ரீ ரமணி மருத்துவ ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஹிரண்யா சூரணம் கிடைக்கும் இந்தச் சூரணத்தைப்பயன்படுத்தி வர  ஒரே வாரத்தில் வீக்கம் வற்றும். தொந்தரவில்லாத நல்ல ஒரு திருப்தியான அமைதியான நல்ல நிலைக்கு வருவதற்கான தீர்வு கிட்டும். 

பொதுவாக குடலிறக்கம், குடல் வால் இறக்கம், விதைப்பை இறக்கம் போன்ற அனைத்து வீக்கங்களுக்கும், ஆபரேஷனைத் தள்ளிப் போடும் அளவிற்கு தீர்வினைக் கொடுத்து நலம் பயக்கும். இச்சூரணத்தை தொடர்ந்து பயன்படுத்தி வர நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

இந்த ஹிரண்யா சூரணத்தில் இருக்கக்கூடிய மூலப்பொருட்கள்:

சுக்கு, மிளகு, திப்பிலி, கோரைக்கிழங்கு, மாவிலிங்கம் பட்டை, கரி உப்பு, கருஞ்சீரகம், நெல்லி. இந்த பொருட்களால் செய்யப்பட்ட இந்த அற்புதமான சூரணம் ஹிரண்யாவிற்கு மட்டுமல்லாமல் உடல் சூட்டினை நன்கு குறைக்கும். 

கேஸ்ட்ரிக் அல்சரை விரட்டியடிக்கும். நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும், ஜீரண சக்திக்குறைவினுக்கும் நல்ல தீர்வினை வழங்கி மகிழ்ச்சி அளிக்கும். அனைத்துவகை மூலத்திற்கும் இது ஒரு அருமருந்தாகும் திகழ்கிறது .

தேவைக்கும் ஆலோசனைகளுக்கும் +91 90803 75278 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *