தனுசு ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் நல்ல உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கவர்ச்சிகரமான உடலமைப்பை கொண்டவர்கள். இவர்கள் ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டால் அதில் எவ்வளவு குறுக்கீடுகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள். இவர்கள் பணத்தை விட மற்றவர்களின் மனதிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தனுசு ராசிகார்களிடம் தற்பெருமை அதிகம் இருக்கும். தன்னைதானே உயர்த்தி பேசிகொள்வார்கள். இவர்கள் அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள். யாராவது இவர்களை அவமானபடுத்தினால் அவர்கள் எப்பேற்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களை விட்டு விலகி விடுவார்கள். எடுத்து கொண்ட செயல்களில் தோல்வி அடைந்தால் எளிதில் துவண்டு விடுவார்கள். எதிர்காலத்தில் நடக்க கூடியதை முன் கூட்டியே அறிய கூடிய ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிகார்கள் பொதுவாக சுறுசுறுப்பானவர்கள். கள்ளம் கபடமின்றி எல்லோரிடமும் நன்றாக பழகுவார்கள். இவர்கள் யாருக்கும் அடிமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள், கோபம் வந்தால் அது கடுமையானதாக இருக்கும். இவர்களிடம் நயமாக பேசினால் எதையும் சாதித்து கொள்ளலாம். தெய்வ பக்தி, கருணை, தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர்கள்.
தனுசு ராசிகார்கள் பிறர் பிரச்சனையை தன் பிரச்சனை என கருதி அவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்கள். அதனால் பிரச்சனைகளிலும் மாட்டி கொள்வார்கள்.
வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது.
ஆண்டுக்கு ஒரு முறை
குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. குரு தனது 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.
ஜோதிடத்தைப் பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வரும் போது தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன்கள் தரப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு.
- குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள்?
- மேஷ ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
அந்த வகையில் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான ஆண்டு கிரகம், குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.
கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13ம் தேதி பெயர்ச்சி ஆவார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. தனுசு ராசிக்கு குரு நீச்ச ஸ்தானத்தில் இருந்தார். தற்போது ராசிக்கு 3ம் இடமான தைரியம், வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார்.
அதிர்ஷ்டம்
ராசிக்கு 3ம் இடத்திலிருந்தாலும், குருவின் சிறப்பான பார்வை பெறும் இடங்களின் அடிப்படையில் தனுசு ராசியினர் மிக சிறப்பான பலனைப் பெறுவார்கள். குருவின் பார்வை, ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், இந்த இடங்களில் கிடைக்கும் நற்பலன்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் தனுசு ராசியும் ஒன்று.
எந்த ஒரு முயற்சிகளும் வெற்றி தரும். திருமண முயற்சிகள் நிறைவேறும். புதிய பங்குதாரர், புதிய வாய்ப்புகள் உங்கள் தொழிலில் கிடைக்கும். தொழில் மாற்றம் ஏற்படலாம்.
- இந்த குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது?
- மிதுன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
வெளியூர், வெளிநாடு தொடர்பான வேலை அல்லது தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதில் நல்ல வெற்றியும், லாபமும் அடைவீர்கள். ராசிக்கு 9ம் இடத்தை நேரடியாக பார்ப்பதால், உங்கள் ராசிக்கு பாக்கியத்தை அனுபவிக்க இருந்த தடைகள் நீங்கும். ஏதேனும் ஒரு வகையில் பெரியவர்களின் அன்பு, ஆலோசனை கிடைக்கும். தந்தை அல்லது அதைப் போன்ற பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.அவர்களின் ஆலோசனையால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் பிரச்னைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.
ராசி நாதன் வலுப்பெறுவதாலும், ராசிக்கு 9, 11ம் இடங்களை குரு வலுப்படுத்துவதால் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும், இலக்குகள் அடைவீர்கள்.
தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். அல்லது பழைய கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உயர் கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். மண வாழ்க்கையில் இன்பம் பெருகும்
குடும்பம்
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வீட்டில் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகள் காரணமாக வீடு கலகலப்பாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகளுடனான உறவுகள் பலப்படும். நல்ல மனிதர்களின் நட்பு கிட்டும். உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும். அதன் மூலம் ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
- கடக ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
- சிம்ம ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
ஆரோக்கியம்
இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ஆரோக்கியம் பற்றிய கவலை இல்லை என்றாலும் நீங்கள் சிறிது கவனமுடன் இருக்க வேண்டும். ஒற்றைத் தலைவலி, முதுகு வலி போன்ற சிறு சிறு உபாதைகள் வந்து நீங்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுவது நன்மை பயக்கும். உணவுக் கட்டுப்பாடும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
காதல் / திருமணம்
காதலர்கள் மனதில் மகிழ்ச்சி நிலவும். உறவு இனிமை அளிக்கும் வகையில் இருக்கும். வெளியிடங்களைச் சென்று உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் இருக்கும். கருத்து ஒருமித்து இனிமையான இல்லறம் காண்பார்கள்.
நிதி நிலை
அலுவலகப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். இதனால் வருமானம் உயரும். லாபம் கிட்டும். குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்கள் நலன் கருதி சில செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி உங்கள் வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
- கன்னி ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
- துலா ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
வேலை / தொழில்
அரசு உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவும் அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவார்கள். அவர்கள் மூலம் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். கூட்டுத்தொழில் செய்யும் உங்களுக்கு சக கூட்டாளிகள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.
கல்வி
பள்ளி மாணவர்கள் மனதை ஒருமுகப்டுத்தி கவனமுடன் படிக்க முயன்றால் வெற்றி இலக்கை எட்டலாம். மேற்கல்வி படிக்க விரும்புபவர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் உதவி பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.
சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு. வியாழக்கிழமை மஞ்சள் வஸ்திரம் அணிவது வெற்றியைக் கொடுக்கும். மாணவர்கள் கல்வி கற்பதற்கு உதவி புரிவது வாழ்கையில் ஏற்றத்தைக் கொடுக்கும்.

ஆசிரியர் பற்றி…
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர், மீனாட்சி மைந்தன், திருவருட்செல்வர், நகைச்சுவை நாவரசு, எழுத்தாளர், கவிஞர், ஆன்மிக சொற்பொழிவாளர், குடமுழுக்கு திருவிழாக்களின் நேர்முக வருணனையாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், 5000 ஆயிரம் பட்டிமன்றங்களுக்கு மேல் நடுவராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். வெள்ளி விழா கண்ட மதுரை இலக்கியப்பேரவையின் தலைவர்.