முதுகு வலி: தீர்த்து வைக்கும் பாரம்பரிய வைத்தியம்
நமது நடைமுறை வாழ்க்கையில் நம் பக்கத்து வீடு, சுற்றியுள்ள சமூகத்தில் சர்வசாதாரணமாக சொல்லப்படக்கூடிய வார்த்தை முதுகுவலி. சாதாரண முதுகு வலி எனில் முதுகுப் பகுதியில் உள்ள வலுவற்ற தசைகளால் வாய்வு பிடிப்பு, மூச்சு பிடிப்பு போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு சாதாரணமாக வலித் தைலங்களை தடவுவதன் மூலம், சிறிது ஓய்வு எடுப்பதன் மூலமாகவும் அல்லது முதுகுக்கான உடற்பயிற்சிகள் எடுப்பதன் மூலமாக வழியை தீர்க்கலாம்.
யாருக்கு வேண்டுமானாலும் முதுகு வலி வரலாம். குறிப்பாக 28 வயது முதல் 55 வயதுக்குள் அதிகப் பெண்களுக்கு இந்த முதுகுவலியால் பாதிப்பு இருக்கிறது. தசைநார், தண்டுவடம் மற்றும் எலும்பு என அதனைச் சார்ந்த வலிகளும் ஏற்படும் பகுதியின் நிலையினை அறிந்து அது சார்ந்த முடிவினை எடுத்து சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
முதுகு வலிக்கான முதன்மைக் காரணம்:
அதிக உடல் உழைப்பே இதற்கு முதன்மைக் காரணமாகத்திகழ்கிறது. வெறித்தனமான உழைப்பு, அளவுக்கதிகமான ஓட்டங்கள், அபரிமிதமான கால், கைகளால் செய்யக்கூடிய வேலையின் அடிப்படையில் இந்த வலியானது ஏற்படுகிறது.
அதிக முதுகு வலிக்கான காரணிகள் :
அதிகமாக உழைத்ததால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தசைகள், மற்றும் கை, கால்களில் உள்ள தசைகளாலும், முறையற்ற முறையில் பொருட்களை ஏட்டிக்குப் போட்டியாக தூக்குவதால் வரக்கூடியதாலும், அளவுக்கதிகமான கனமான பொருட்களை தூக்குவதாலும், கோணல் மாணலாக படுப்பது போன்ற சிக்கல்களால் இந்த முதுகு வலிக்கு காரணிகளால் திகழ்கின்றது.
முதுகு வலிக்கான மற்றைய காரணங்கள்:
தசை மற்றும் தசை நார்களின் பாதிப்பு ஏற்படுவதாலும், தண்டுவட எலும்புகளுக்கிடையே உள்ள பகுதியில் பாதிப்பு ஏற்படுவதாலும், மூட்டு வலி ஏற்படுவதாலும், தண்டுவடத்தில் வளைவு ஏற்படுவதாலும், எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும் முதுகுத்தண்டில் வளைவு ஏற்பட்டு வலி ஏற்படுவதாலும், சியாடிக் எனப்படும் நரம்பு வலியால் கால் வரைக்கும் ஏற்படக்கூடிய வலியாலும், தண்டுவடத்தின் கிருமிகளின் தாக்குதலாலும், தண்டுவடத்தில் புற்றுநோய் ஏற்படுவதாலும், தூக்கம் சரிவர இல்லாததாலும், தலையணை அதிக உயரம் வைத்துக்கொண்டு படுப்பதாலும் முதுகு வலி வருகிறது.
முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உண்டு:
கர்ப்ப காலத்தில் குழந்தை பெரிதாகப் பெரிதாக கர்ப்பப்பை கீழே இறங்கும் போது முதுகு வலி ஏற்படும். அதிக உழைப்பு இல்லாமல் இருப்பதாலும் முதுகு வலி ஏற்படலாம். எப்போது பார்த்தாலும் மன உளைச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த முதுகு வலி வரலாம்.
வயதாவதால் ஏற்படுகிற முதுமை நிலையாலும் இவ் வலி வரலாம். மனக்கவலை மற்றும் படபடப்பாலும் இந்த வலி ஏற்படலாம். பெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவில் முதுகு வலி ஏற்படுகிறது.
அதிக எடை அல்லது அளவுக்கு மீறிய உடற்பயிற்சியாலும் இப்பிரச்சினை வரலாம். தொடர் புகை பிடித்தலாலும் வலி ஏற்படுகிறது.
மருத்துவரை உடனடியாக அணுக வேண்டிய காரணங்கள்:

சிறுநீர் மற்றும் கழிவுகள் அடிக்கடியோ அல்லது கட்டுப்பாடில்லாமல் வெளியேறிக் கொண்டிருக்கும் பட்சத்தில், இரவு படுக்கும்போது மட்டும் ஏற்படக்கூடிய முதுகுவலி. இது வலி என்று கூறுவதைவிட மாரடைப்புக்கான அறிகுறியாக் கூட இருக்கலாம்.
அதேபோல் படுக்கையை விட்டு எழுந்தவுடன் சுமார் அரைமணிநேரம் வலி இருக்கும் நேரத்தின் போது உடலில் வியர்வை வரத் துவங்கும். முதுகு வலியோடு வயிறு, முதுகின் பின்புறம், கீழ் வயிறு வலி இருந்தாலும் வரக்கூடிய விடாத தொடர் வலி இருந்தாலும். வலியானது முதுகிலிருந்து கால் மற்றும் மூட்டு கீழ் இறங்கு முகமாக இருந்தாலும்.
அடி மற்றும் காயம் ஏற்பட்டாலும். சிறுநீர் பிரியாமல் இருந்தாலும். பிறப்புறுப்புகள் மரத்துப் போவதால் ஏற்படக்கூடிய வலியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.
சியாடிகா வலி:
நரம்புப் பிரச்சனையால் முதுகின் கீழ்ப்பகுதியில் இருந்து காலின் பின் வழியாக வலியானது இறங்கும். இவ்வாறு இறங்கும் வலிக்கு சியாடிகா வலி என்று பெயர். இதனால் இடுப்பு மற்றும் கீழ் முதுகு வலி, உட்கார்ந்து எழும் போது வலி, காலில் எரிச்சலுடன் கூடிய வலி. கால் பாதம் மரத்துப் போதல்.
சொரணை இல்லாமல் இருத்தல். கால் கனமாகி காலை நகர்த்துவதில் சிரமம். நிற்கும் போது தாங்க முடியாத வலி ஏற்படல். இப்படி அறிகுறி இருந்தால் இதற்கு சியாடிகா வலி என்று பெயர்.
சியாட்டிகாவிற்கான தீர்வு :
பக்கவாட்டில் திரும்பி படுத்து உறங்குதல் நலம். படுக்கும் மெத்தை மெத்து மெத்தென்று இல்லாமல் கடினமாக உறுதியாக இருக்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி பாயில் படுத்து உறங்குதல் நலம். நாற்காலியில் அமரும் போது கூன் விழுந்தது போல் அமராமல் நேராக அமர்தல். இரு பாதங்களும் தரையில் முழுமையாகப் படிந்து அமர வேண்டும். மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும்.
தகுந்த உடற்பயிற்சியின் எடுக்க வேண்டும். எப்போதும் அமைதியாக இல்லாமல் சிறிது தூரமாவது நடக்க வேண்டும். வலியுள்ள இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். சுமார் அரை மணி நேரம் கொடுக்கலாம். நாளொன்றுக்கு மூன்று முறை சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.
பாரம்பரிய வழிமுறைகள்:

இடுப்பு வலி:
ஒரு தேக்கரண்டி நொச்சி இலைச் சாறு எடுத்து ஒரு கிராம் மிளகுத்தூள் கலந்து சிறிது நெய் விட்டு கலந்து இரு வேளை உணவுக்கு பின் எடுத்துவர நல்ல தீர்வு கிட்டும். நொச்சி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
வாய்வு குத்து:
அரைத்தேக்கரண்டி பெருங்காயப் பொடியை சிறிது வெண்ணீரில் சாப்பிட்டு பின் வெந்நீர் பருக வாய்வுக் குத்து மாறும்.
கை கால் வலிகள்:
முடக்கத்தான் இலையை உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து வருதல் நலம். உதாரணத்திற்கு தோசை மாவில் கலந்து தோசையாக சாப்பிடுதல்.
ஜோதிட மருத்துவ காரணங்கள்:
கால புருஷ தத்துவப்படி கடகம், சிம்மம், கன்னி, துலாம் ராசி நேயர்களுக்கு முதுகு, இடுப்பு, கை, கால் வலி பிரச்சினைகள் அதிகம் வரும். வலிக்குரிய பாவகம் 6 மற்றும் 11ஆகும். வலிக்குரிய காரக கிரகங்கள் சூரியன், புதன்.
முடக்கருகு சூரணம் :
இந்த அரிய சூரணத்தில் உள்ள பொருட்கள்:
நெல்லி, கடுக்காய், அதிமதுரம், அமுக்கரா, பூனைக்காலி, பசலை, கண்ணுப்பூளை, நெருஞ்சில்,யானை நெருஞ்சில், முடக்கறுத்தான், பச்சைக்கற்பூரம், மிளகு, சோம்பு ,காயம், மல்லி, காக்கரட்டான், வாதநாராயணன் மற்றும் சில கடைச்சரக்குகள் உள்ளது.
முதுகு, இடுப்பு, கை, கால் வலி, கழுத்து எலும்பு தேய்மானம், வெரிகோஸ் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரீல் எடுத்த 4மணி நேரத்திலேயே மேற்கண்ட பிரச்சினைகளுக்குரிய வலி உடனே நிற்கும்.
எந்த பக்க விளைவுகளும் அற்ற அற்புதமான வலி நிவாரணி சூரணம். சிக்கன் குனியா போன்ற காய்ச்சல் வந்த பிறகு தீராத உடல் வலி, கை வலி, கால் வலி போன்ற தீராத வலிகளுக்கு தீர்வாக இந்த முடக்கருகு சூரணம் திகழ்கிறது.
துளசி பாம்:
வெளிப்பூச்சிற்கான துளசி பாம் எனப்படும் மருந்து தலை வலி சுளுக்கு, உடலில் எந்தவகையான வலியாக இருந்தாலும் தேய்க்க நலம் கிட்டும். இதையே ஆவி பிடிக்க நெஞ்சுச்சளி மாறும். பித்தவெடிப்பிற்கும் இத்தைலத்தை பயன்படுத்த நல்ல தீர்வு கிட்டும்.
அருள் ஜோதி எண்ணெய்:
இந்த அருள் ஜோதி எண்ணெய் எல்லா வகையான உடல் வலி, முதுகு, இடுப்பு, கை, கால் வலி, சியாடிகா நரம்புச் சிலந்தி போன்ற அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இந்த எண்ணெயை இரு முறையோ மூன்று முறை தடவி வர நல்ல நிவாரணம் கிட்டும். இது சுத்தமான செக்கு நல்லெண்ணெயில் செய்ததால் காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் உள்ளேயும் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற மருத்துவ ஆலோசனைகளுக்கு +91 90803 75278 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ் மருத்துவ ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். பாரம்பரிய சிறந்த சித்த மருத்துவ விருதாளர், மருத்துவ தாவர ஆராய்ச்சியாளர், குழந்தைப்பேறு சிறப்பு நிபுணர், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் ஸ்ரீரமணி மருத்துவ ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல தீராத நோய்களை தீர்த்து வைத்திருக்கிறார். ☎️+91 90803 75278.