சைனஸ் தொற்றிலிருந்து முற்றிலும் குணமாவது எப்படி? பீனிசம் (சைனஸ்) ‘சைனசைட்டிஸ்’ என்றால் என்ன?
புருவங்களுக்கு மேல், கண்களுக்கு கீழ், மூக்கில் மேற்பகுதி போன்ற பகுதிகளில் வெற்றிடம் காணப்படும். இப்பகுதிகளில் காற்று மட்டுமே சென்று வர வேண்டும். வேறு எந்த ஒரு பொருளும் அவ்விடத்தில் தங்கக்கூடாது.
எப்போது அந்த இடத்தில் பாக்டீரியா அல்லது வைரஸ் போன்றவற்றின் தொற்று நிகழ்கிறதோ அப்பொழுது மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம், குனிந்தால் கல்லைக் கட்டி விட்ட மாதிரி இருக்கும் நிலை, மூக்கு தொடர்ச்சியாக ஒழுகுதல், முகம் வீங்குதல், கண் அரிப்பு, அடுக்குத் தும்மல், ஜுரம் கூட வரலாம்.
பேசும் போது துர்நாற்றம் கூட ஏற்படலாம். இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதையே ‘பீனிசம்’ அல்லது ‘சைனசைட்டிஸ்’ பிரச்சனை என்கிறோம். இதற்கு தொடர் மருந்து எடுக்காத பட்சத்தில் ஆஸ்துமா நிலைக்கு கூட செல்லலாம்.
சைனஸ் மருத்துவக் காரணங்கள்:
மூக்கில் உள்ள மூக்குத் தண்டு நேராக இல்லாமல் சற்று வளைந்து இருப்பதால் காற்று செல்வதற்கு இடையூறாக இருப்பதால் சைனஸ் குழிகளில் கிருமித்தொற்று ஏற்படுவதன் மூலமாக இப்பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு.
மூக்கு மற்றும் சைனஸ் குழிகளில் தேவையற்ற சதை வளர்ந்தாலும் கிருமித்தொற்று ஏற்பட்டு இப்பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள் எளிதில் இப்பிரச்சனைக்கு ஆளாவது உறுதி.
மற்ற தொடர் காரணிகளும், காரணங்களும்:
பூக்களின் மகரந்தத்தாலும், வீட்டு விலங்குகளான நாய், பூனையின் முடிகளாலும் அலர்ஜி ஏற்பட்டு சைனஸ் சார்ந்த பிரச்சனை அதிகமாகும்.
வீடு கூட்டுவதாலோ ஒட்டடை அடிப்பதாலோ கார், பஸ் போனால் ஏற்படக்கூடிய தூசுகளாலோ இப்பிரச்சினை ஏற்படலாம்.
குளிர்ச்சியான ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை சாப்பிடுவதாலும் தட்பவெப்ப சூழ்நிலை மாற்றத்தாலும், மழை குளிர் காலத்திலும் அதிகமாக இப் பிரச்சனைகள் வரலாம்.
அடிக்கடி தலைக்கு குளிப்பதாலும் வரலாம். ஒரு சிலருக்கு பூச்சிப்பல் இருப்பதால் கூட இப்பிரச்சனை வரலாம். கண், காது, மூக்கு, தொண்டை பகுதிகளோடு நரம்பு தொடர்ச்சியாக இருப்பதால் பிரச்சனை வருகிறது.
அடிக்கடி புகை பிடிப்பதாலும், சென்ட் போன்ற வாசனை திரவியங்களின் வாசனைகளாலும் வரலாம்.
இப் பிரச்சனை வராமல் தடுக்க:
முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொள்ளலாம். ஏசி மற்றும் காற்றாடியிலிருந்து தள்ளிப் படுக்கலாம். நொச்சி இலை கொண்டு ஆவி பிடிக்கலாம். அடிக்கடி தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். காய்கறிகள் சூப்பினை தினமும் பருகி வரலாம். நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தலையை உயர்த்தி வைத்து படுக்க வேண்டும்.
ஒவ்வாமைக்கான உணவுகள் கூடாது:
பால் பொருட்களை அதிகம் எடுக்கக்கூடாது. மோருக்கு மட்டும் விதிவிலக்கு. எல்லா உணவிலும் மிளகுத்தூளை சேர்த்து எடுக்கலாம். காரத்திற்கு மிளகாய்க்குப்பதிலாக மிளகினைப் பயன்படுத்தலாம்.
அதிக இனிப்பைக் குறைக்க வேண்டும். வெள்ளைச் சர்க்கரை அதாவது ஜீனி கூடவே கூடாது. வெல்லம், கருப்பட்டி எடுக்கலாம். நீர்க் காய்களை தவிர்க்க வேண்டும். பீர்க்கு, புடலை, தக்காளி, வெள்ளரியைத் தவிர்க்க வேண்டும்.
சீரகத்தண்ணீர், மல்லித்துவையல் எடுக்க பித்தம் குறைந்து ஒவ்வாமையும் குறையும்.
பாரம்பரிய மூலிகை தீர்வு :

சீந்தில் சூரணம் ஒரு மண்டலம் எடுக்க இப் பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு கிட்டும்.
உணவுக்குப் பின் ஒரு வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி 5 மிளகு, சிறிது துளசி சேர்த்து 100 மில்லி நீரில் இட்டு கொதிக்க வைத்து 25 மில்லியாக வற்றிய நீரை ஒரு நாளைக்கு ஒரு வேளை 48 நாள் சாப்பிட்டு வர இந்த ஒவ்வாமை நன்கு குறையும்.
வறண்ட இருமலுக்கு சிறு அதிமதுரத் துண்டினை வாயில் வைத்து உமிழ் நீரை குடித்து வர வறட்டு இருமலுக்கு நல்ல தீர்வு கிட்டும். உப்புத் தண்ணீரால் வாயில் ஊற்றி கொப்பளித்து வர நலம் பயக்கும்.
திப்பிலி, சுக்கு, மிளகு இவற்றை சூரணித்து அரை ஸ்பூனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வர சளி சேராது.
ஜோதிடக்காரணங்கள்:
நுரையீரலைக் குறிக்கக் கூடிய ராசி மிதுனம், கடகம் ஆகும். கார்க் பாவம் மூன்று. சனிக்கு திரிகோணத்தில் இராகு அல்லது கேது இருந்தால் காச நோய் வரும். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசிகளில் ராகு, கேது, புதன் இருந்தால் ஆஸ்துமா வரும். கிருமி மற்றும் அலர்ஜிக்கு இராகு பொறுப்பு ஏற்கிறது.
சைனஸ்க்கான சித்த மருந்துகள்:
நீர்கோவை மாத்திரை:
பொதுவாக சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி மற்றும் தலைகணம் வருவது இயல்பு. அவர்கள் இரு நீர்க்கோவை மாத்திரையை எடுத்து இரண்டு சொட்டு வெந்நீர் அல்லது இரண்டு சொட்டு பசும்பால் விட்டு மசிய வைத்து அப்பசையை நெற்றி, உச்சந்தலை, கழுத்து, கன்னத்துக்கு மேல் கண்ணுக்கு அடியில், தொண்டைப் பகுதியில் பற்றிட அப்பகுதியில் உள்ள நீரினை உறிஞ்சி தலைக்கணத்தை மாற்றும்.தலைவலி தீரும்.
கடப்பாறை தைலம்:
விடாத மூக்கொழுகளுக்கு கடப்பாறை தைலத்தை பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலில் தடவி முகர மூக்கடைப்பு உடனே நிற்கும். இத்தைலத்தில் வெள்ளைப் பூண்டு மற்றும் நொச்சி இலை சாறு இருப்பதால் தலைக்கணமும் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.
முசுமுசுக்கை குப்பிகள்:
ஈளைக்கு முசுமுசுக்கை என்று சொல்வார்கள். முசுமுசுக்கை குப்பியில் உள்ள பொடியினை பல் துலக்கிய உடன் வாயிலிட்டு வெந்நீர் பருகிவர அடுக்குத் தும்மல் குறைந்து தொண்டையில் ஏற்படும் கிச்சுகிச்சு மாறும்.
தொண்டையில் முள் கம்பியை விட்டு இழுப்பது போன்ற உணர்வும் மாறும். தொடர்ந்து இந்த முசுமுசுக்கை குப்பியைப் பயன்படுத்தி வர வேரோடு சைனஸ் பிரச்சினையை முறியடிக்கலாம்.
பீனிச தைலம்:
இத்தைலத்தினை வாரமிருமுறை ஒரு கரண்டி அளவு தலைக்கு தேய்த்து கால் மணி நேரம் ஊறிய பின் ஒரே வெண்ணீரில் தலைமுழுக தலைக்கணம் மற்றும் தலைவலி மாறும்.
பஞ்ச கல்பம்:
பஞ்ச கல்ப பொடியினை 50 மில்லி பசும் பாலில் அரை ஸ்பூன்இட்டு உச்சந்தலையில் தேய்த்து கால் மணி நேரம் ஊறிய பின் நீராடி வர தலைக்கணம் மாறி இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
சளி டானிக்:
துளசியால் செய்யப்பட்ட இந்த சளி டானிக் ஒரு நாளைக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் இருமலுக்கு ஏற்றவாறு எடுக்க அடுத்த நொடியே கண்ணு, காது, மூக்கு, தொண்டை ரயில்வே கேட் திறந்தது போல திறந்து விடும்.
ராஜா நந்த லேகியம்:
சளி, இருமல், மூக்கில் முனுமுனுப்பு, மூக்கில் கணையினால் வெந்து போதல், ஆஸ்துமா, இளைப்பு, புகை, ஒட்டடை அலர்ஜி, மூக்கில் நீர் வடிதல், நரம்பு தளர்ச்சி, மாதவிலக்கு பிரச்சினைகள், தூக்கத்தில் சிறுநீர் கழித்தல் போன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.
மேலும் மருத்துவ ஆலோசனைகள் பெற +91 90803 75278 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ் மருத்துவ ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். பாரம்பரிய சிறந்த சித்த மருத்துவ விருதாளர், மருத்துவ தாவர ஆராய்ச்சியாளர், குழந்தைப்பேறு சிறப்பு நிபுணர், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் ஸ்ரீரமணி மருத்துவ ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல தீராத நோய்களை தீர்த்து வைத்திருக்கிறார். ☎️+91 90803 75278.