சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உணவுகள்
நமது பழக்கவழக்கங்களின் அடிப்படையிலேயே ஒருவருக்கு இந்த மதுமேகம் (சர்க்கரை நோய்) வருகிறது.
ஒருவருக்கு சர்க்கரை அளவு அதிகரிக்கக் காரணம் நேரம் தவறி சாப்பிடுவது. அடிக்கடி சாப்பிடுவது. இரவில் தாமதமாகச்சாப்பிடுவது. எப்பொழுதும் உணவை வேக வேகமாக மெல்லாமல் சாப்பிடுவது, இதுபோக பாஸ்ட் ஃபுட் கலாச்சாரம்.
இதெல்லாம் நாம் செய்யும் பொழுது, நாம் செல்லும் வழி தவறானது என நமது உடல் நமக்குச் சொல்லி வழி நடத்துவதே சுகர் ஆகும்.
கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கக்கூடிய இன்சுலின் கார்போஹைட்ரேட்டில் உள்ள இனிப்பை எளிய குளுக்கோஸாக மாற்றி, ஒவ்வொரு செல்லுக்கும் அளித்து, அதற்கு ஆற்றலை அளிக்கிறது.
கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவு குறைவு ஏற்படும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிவிடுகிறது
இந்த நிலையை மாத்திரைகளின் மூலம் மாற்றி சுகரை சராசரி நிலைக்குக் கொண்டு வரும் பொழுது, கழிவு நிலையிலுள்ள செரிமானமாகாத சுகர் நாளடைவில் சிறுநீரகம் மற்றும் ரத்தக் குழாயில் படிந்து சீர்கெட வழிவகை செய்கிறது.
சுகர் உள்ளவர்கள் செய்ய வேண்டியது:
1. எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருக்க வேண்டும்.
2. மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது சுகர் டெஸ்ட் எடுத்துப்பார்க்க வேண்டும்.
3. மருத்துவர் அனுமதி இல்லாமல் முழுமையாக மருந்தை நிறுத்தி விடக்கூடாது
4. கட்டுப்பாட்டில் சுகர் இருக்கிறது என்பதற்காக முழு மருந்ததையும் நிறுத்திவிட்டால் எதிர்பாராத பெரிய நோயினை அனுபவிக்க வேண்டியது இருக்கும்.
ஆரம்ப நிலையிலேயே கண்டு உணர வேண்டிய அறிகுறிகள்:
1. இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
2. அதிக தாக உணர்வு. நாவில் வறட்சி.
3. மங்கலான கண் பார்வை.
4. திடீரென எடை கூடுவது அல்லது குறைவது.
5. உடற்சோர்வு.
6. ஆறாத புண்கள், லேசான புண்கள் ஆறுவதற்குக்கூட அதிக நாட்கள் எடுத்துக் கொள்வது.
7. பாத எரிச்சல், பாதத்தில் வலி, கூச்சம், உணர்ச்சியின்மை,
8. அதிக பசி.
9. பல் ஈறுகள் பலவீனம் அடைதல், பல் கூச்சம், தேய்மானம்.
10. பிறப்புறுப்புகளில் புண்கள்.
தினமும் கடைப்பிடிக்க வேண்டியவை:
1. நன்கு மென்று சாப்பிடும் போது உமிழ் நீரின் மூலம் நன்கு ஜீரணித்து குடலுக்கு உணவானது செல்வது நலம் பயக்கும்.
2. உணவு அருந்தும் போது அடிக்கடி நீர் பருகக்கூடாது. இதன் மூலம் ஜீரண சுரப்பு நீர்கள் நீர்த்துப் போய் ஜீரணம் ஒழுங்காக நடக்காது.
3. சூரியன் மூலம் கிடைக்கும் விட்டமின் டி உடலுக்கு நல்ல உயிர்ப்பு சக்தியினைக் கொடுப்பதால் சூரிய வெளிச்சத்தில் போதியளவு இருப்பது நலம் பயக்கும்.
தவிர்க்க வேண்டியவை:
1. நேரடியாக சர்க்கரை, சீனி எடுக்கக்கூடாது.
2. பழங்களிலேயே மா, பலா, வாழை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது பயங்கரமாக இனிப்பை அதிகப்படுத்தும். ஆனால் நார் உள்ள வாழைப்பழம் இரு உணவு வேளைக்கு நடுவில் சேர்த்துக்கொள்ளலாம்.
3. தேநீர், காபியில் முழுமையாக இனிப்பு கண்டிப்பாக சேர்க்கக் கூடாது.
4. பால் சேர்க்காத தேநீர், காபி மிகவும் நல்லது.
5. ஓட்ஸ் கஞ்சி, சத்து மாவு கண்டிப்பாக கூடவே கூடாது. கஞ்சியாக எடுப்பதைவிட கலவை சாதம், உப்புமாவாகவும் எடுப்பது நலம்.
6. அரிசியில் பச்சரிசியாக எடுக்காமல் புழுங்கரிசியாகவோ அல்லது பாரம்பரிய அரிசியாகவோ எடுப்பது நல்லது.
உணவோடு கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டியவை:

1. உமியோடு கூடிய தானியங்களை எடுக்கும் போது இனிப்பின் தாக்கம் குறைவாக இருக்கும்.
2. பால் சேர்க்காத தேநீர் உடன் லவங்கப்பட்டை அல்லது ஆவாரம்பூ சேர்த்துக் கொள்வது நல்லது.
3. உணவுடன் சிறுதுண்டு கொய்யா, மாதுளை, பப்பாளியினைச் சேர்த்துக்கொள்ளலாம்.
4. கேழ்வரகு, ராகிதனை தோசை ஆகவும் எடுத்துக்கொள்ளலாம்.
5. மாலை நேரங்களில் சிறு சிற்றுண்டியாக எடுப்பது நலம் பயக்கும். இல்லாத பட்சத்தில் இரவு அதிக அகோரப் பசி வருவதை தடுக்கலாம்.
6. உணவோடு வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் பொடி, நாவற்கொட்டை பொடி, கீழாநெல்லி, சீந்தில், மரமஞ்சள் பொடிகளை எடுத்துக்கொள்ளலாம்.
7. அத்துடன் உடற்பயிற்சி, யோகாசனம், நடைப் பயிற்சி கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
8. கறிவேப்பிலையை பச்சையாகவே சாப்பிடலாம்.
9. இன்சுலின் செடி(Costus Igneus)யை வாரமிருமுறை அதிகபட்சம் இரண்டு இலைகளை நீரில் நன்கு கழுவி வெறும் வயிற்றில் சாப்பிட நலம் பயக்கும்.
சித்த மருத்துவ கண்ணோட்டம்:
மேக நோய்களில் இருபத்தி ஒரு வகை உள்ளது. இதில் மது மேகமும் ஒன்று. தற்போது ஆறு பேரில் ஒரு ஆளுக்கு மதுமேக நோய் உள்ளது. இது கொடிய நோய் அல்ல என்றாலும் கொடிய நோய்களை வளர்த்துவிடும் காரணியாக உள்ளது. இதற்கு
1. கட்டுப்பாடான உணவு.
2. ஜீரணிக்க கூடிய உணவு.
3. சைவ உணவு.
4. அளவான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. அகால போஜனம் கூடாது. மது, புகைப் பழக்கம் இருக்கக் கூடாது.
பொதுவாக கசப்பும் துவர்ப்பும் உணவில் குறையும் போது இந்த நோய் வரும். ஆகவே இச் சுவையுடைய பொருட்களை உணவோடு எடுக்க வேண்டும்.
பாரம்பரிய உணவு முறைகள்:
அரசஇலை மூன்று, அத்தி இலை ஆறு, ஆலிலை இரண்டு ஆக இம்மூன்று இலைகளின் காம்பினை நீக்கிவிட்டு நன்கு இடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்கவைத்து இத்துடன் 4 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரண்டி வறுத்த வெந்தயம், மூன்று நாவல் கொட்டையைச்சேர்த்து கால் லிட்டராக வற்ற வைத்து அதை குறைந்தது ஒரு மண்டலம் எடுத்துவர இந்த சுகர் லெவல் நன்கு குறையும்.
நல்லெண்ணெய் (பெயரிலேயே நல்ல எண்ணெய் என்று கூறப்பட்டிருக்கிறது.) இந்த நல்ல எண்ணெயானது பரம்பரை பரம்பரையாக வரக்கூடிய சுகரைக் குறைக்கும் வல்லமை கொண்டது. பொதுவாக முருங்கை இலை மற்றும் சிறிய வெங்காயம் சிறிது எடுத்து அறிந்து நல்லெண்ணெய்யை ஊற்றி வதக்கி சாப்பிட்டு வர மிகச்சிறப்பு.
குடிக்கப் பயன்படுத்தும் நீரில் இரவு நேரத்தில் இரண்டு கொய்யா இலையை கொதிக்க வைத்து இரவு முழுதும் வைத்திருந்து, காலையில் இலையை எடுத்து போட்டுவிட்டு, அந்நீரை குடிநீருக்குப் பதிலாக பயன்படுத்தி வர சுகர் லெவல் நன்கு குறையும்.
சுகருக்கான ஜோதிட காரணங்கள்:
இந்த இனிப்பு நோய்க்கான காரக ராசி என்று தனிப்பட்ட எந்த ராசியையும் சொல்வதற்கு இல்லை. டைப் ஒன் சுகரினை சுக்கிரனும், டைப் 2 சுகரினை குருவும் பொறுப்பேற்றுக் கொள்கிறது. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய பெரிய அளவு நோய்களை குறிப்பதாக சனி கிரகம் உள்ளது.
சுக்கிரன் குரு சனி ஆகிய கிரகங்கள் 6, 8, 12ஆம் பாவகத்தோடு சம்பந்தப்பட்டு நீர் ராசிகள் சம்பந்தப்படும் போது ஒருவருக்கு சுகர் வருகிறது. ஐந்தாம் பாவமும் குருவும் பாதிக்கப்படும்போது கணையம் பாதிக்கப்படுகிறது.
எனது பாரம்பரிய மருத்துவ அனுபவத்தில்
1. நாயுருவிக்குப்பி: இந்தக் குப்பியில் நாயுருவி பற்பம், நாவல்கொட்டைப்பொடி, அயச்செந்தூரம் மற்றும் சர்க்கரைக் கொல்லி போன்றவைகள் உள்ளது. இது தினமும் ஒரு குப்பி சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிட்டுகிறது.
2. தெலுங்கானா மாநிலத்தில் கிடைக்கக்கூடிய யுனானி சூரணமான (Sufoof-E-Ziabetes) எனப்படும் சூரணம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ரத்த சர்க்கரை அளவை நன்கு குறைத்து குணமளிக்கிறது.
3. முத்தாய்ப்பாக மலர் மருத்துவச் சொட்டு மருந்தான பன்னீர்ப் பூவிலிருந்து எடுக்கப்படும் மருந்தானது ஒரு வார காலத்திலேயே சுகர் லெவலை நன்கு குறைத்து நல்ல தீர்வினை அளிக்கிறது.
விரிவான மருத்துவ ஆலோசனைக்கு +91 90803 75278 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ் மருத்துவ ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். பாரம்பரிய சிறந்த சித்த மருத்துவ விருதாளர், மருத்துவ தாவர ஆராய்ச்சியாளர், குழந்தைப்பேறு சிறப்பு நிபுணர், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் ஸ்ரீரமணி மருத்துவ ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல தீராத நோய்களை தீர்த்து வைத்திருக்கிறார். ☎️+91 90803 75278.