குழந்தைப்பேறு கிடைக்க செய்யும் பாரம்பரிய வீட்டு மருத்துவம்
யாம் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் தல மரங்களும் தமிழ் மருத்துவமும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்த போது கிடைத்த தரவுகளின் அடிப்படையில், பல பாரம்பரிய மருத்துவர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களுடைய பாரம்பரிய மருத்துவம் சார்ந்த வழிமுறைகளை, ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் மருத்துவத் தாவர ஆராய்ச்சிகளின் விளைவாக இவ்வரிய மருத்துவ விசயங்களைத் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
சாதாரண மக்களும், தங்களது உணவு பழக்க வழக்கங்களின் அடிப்படையில் இம் மருத்துவத்தை மேற்கொள்ளும் வகையில் பெண்களுக்கான குழந்தைப்பேறு மருத்துவம் சார்ந்த வழி முறைகளை அனைவரும் அறிந்து பயன்பெற இவ்வரிய விஷயங்களைத் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
குழந்தைப்பேறு பெண்களின் பிரச்சனைகள்
பொதுவாக பெண்களுக்கு இருக்கக்கூடிய கருப்பைப் பூச்சி, கிருமிகள் ஒழியவும், நீர்க்கட்டிப் பிரச்சனைகள் தீரவும், தரமான கரு முட்டை உற்பத்திக்கும், மாதவிடாய்ப் பிரச்சினைகள் தீரவும், பெண் மலடு நீங்கவும் கிராமப்புறங்களில் மூலிகை பெயர்களை மற்றவர்களுக்குத் தெரியாமல், அந்த மூலிகையை அரைத்து மாதவிடாயின் போதும் அல்லது மாதவிடாய் வந்த மூன்றாவது நாளில் இருந்து ஐந்தாவது நாள் வரையும் மூலிகை உருண்டைகளை வெறும் வயிற்றில் ஈரத் துணியுடன் குளித்து வரச் சொல்லி அதை சாப்பிடக் கொடுப்பார்கள்.
அது என்ன மூலிகை? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அது நம்மைச் சுற்றி இருக்கும். நாமெல்லாம் அறிந்த மூலிகையின் இலைகளைத்தான் மிகவும் ரகசியமாக வைத்திருந்தார்கள். அந்த ரகசியமான மூலிகைகளை எல்லாம் நாம் இப்போது இந்த பதிவிலே தெரிந்து கொள்ளப் போகிறோம்.
பெண்களுக்கான மருத்துவ முறைகள் :

- ஒரு கைப்பிடி அளவு இலந்தை இலையைப் பறித்து நன்கு கழுவி அத்துடன் 5 மிளகு, 3 பல் பூண்டு சேர்த்து நன்கு மைய அம்மியில் வைத்து அரைத்து மாதவிலக்கின் 3, 4, 5-வது நாட்கள் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டியது இருக்கும்.
- இது போல மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். இப்படி எடுக்கும் பொழுது அந்த மூன்று மாதத்திற்குள்ளாகவே கர்ப்பம் தரிக்கக் கூட வாய்ப்பு உண்டு. இந்த மருந்தின் தன்மை கர்ப்பப்பையில் உள்ள கிருமிகளைக் கொன்று கர்ப்பம் தரிக்க வழிவகை செய்கிறது.
- ஒரு கைப்பிடி அளவு வெள்ளை அருகு இலையைப் பறித்து நன்கு கழுவி அத்துடன் 5 மிளகு, 3 பல் பூண்டு சேர்த்து மைய அம்மியில் வைத்து அரைத்து மாதவிலக்கின் மூன்று நான்கு ஐந்தாவது நாட்கள் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டியது இருக்கும் இது போல மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக எடுக்க வேண்டும் இடையிலேயே கூட கர்ப்பம் தரிக்க கூடிய வாய்ப்பு ஏற்படலாம்.
- பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் சூப்பரான டிப்ஸ்
- ஒருசில பெண்களுக்கு எப்போது பார்த்தாலும் உடல் உஷ்ணமாகவே இருந்து வரும். இதனால் கர்ப்பப்பையில் விந்தணுக்கள் வரும்பொழுது அந்த விந்தணுக்கள் கர்ப்பசூட்டினால் அழிந்து, கர்ப்பம் ஏற்படாத சூழ்நிலை ஏற்படும். வெள்ளை, வெட்டை போன்ற உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகளும் இருக்கும் இதற்கும்,
- கர்ப்ப சூட்டிற்கு மருதாணி இலையை நன்கு மைய அரைத்து சிறு சிறு சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக ஆக்கி நிழல் காய்ச்சல் வைத்து சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அதிகபட்சம் ஒரு மாத காலம் ஒரு ஒரு உருண்டையை எடுத்து வர கர்ப்பச் சூடு குறைந்து எளிதில் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
- முற்றாமலும், இளந்தளிராகவும் இல்லாமல் இருக்கும் ஒரு கைப்பிடி மலைவேம்பு இலை சிறிது சிறியாநங்கை இலை, சிறிது விராலி மஞ்சள் சேர்த்து அம்மியில் வைத்து மைய அரைத்து சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக்கி மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர கர்ப்பப்பை மற்றும் சினைப்பைகளில் இருக்கும் தேவையற்ற கசடுகள், நீர்க்கட்டிகள் எல்லாம் கரைந்து எளிதில் கர்ப்பம் தரிக்க வழி செய்யும்.
- உடலில் வெயில் பட்டால் உடல் எடை குறையும்
- நெருஞ்சில் இலை ஒரு கைப்பிடி எடுத்து 100 மில்லி நீரில் இட்டு 50 மில்லியாக வற்ற வைத்து மாதவிலக்கான மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வர கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நீர்க்கட்டிகளால் ஏற்படக்கூடிய தாமத மற்றும் சீரற்ற மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டி மற்றும் நீர் கட்டிகள் கரைந்து கர்ப்பம் தரிக்க ஏதுவாகிறது. இது மூன்று மாதங்கள் தொடர்ந்து எடுக்க நல்ல பலன் கிட்டும்.
- வெகு நாட்கள் ஆகியும் மாதவிலக்கு வராமல், சீரற்ற மாதவிலக்கினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை கட்டிகள், நீர்கட்டிகள் எல்லாம் கரைந்து மாதவிலக்கு சீராகி கர்ப்பம் தரிப்பதற்கு கழற்ச்சிக்காயினை உடைத்து அதிலுள்ள பருப்பினை எடுத்து நன்கு மைய அரைத்து மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சுண்டைக்காயளவு சாப்பிட நல்ல பலன் கிட்டும். கழற்சிக்காய் கிடைக்காதவர்கள், நாட்டு மருந்துக்கடையில் கழற்சிக்காய் சூரணம் என்று விற்கும். அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
உணவு முறை சார்ந்த வழிமுறைகள் :

- ஒரு கைப்பிடி முருங்கைப் பூவினை நன்கு நறுக்கி 100 மில்லி பசும் பாலில் இட்டு வேகவைத்து 50 மில்லியாக வற்றிய உடன் 2 தேக்கரண்டி தேன் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் இருவரும் பருகி வர தாது புஷ்டி மற்றும் கருமுட்டை வளர்ச்சிக்கு நல்ல மருந்தாகிறது.
- பகல் உணவில் முருங்கைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இதில் ஏதாவது ஒன்றை நெய்யில் பொரித்து ஒரு கப் அளவு சாப்பிடச் சிறப்பு.
- பெண்கள் அரச இலைக் கொழுந்தை 5 எடுத்து நீரில் அலசி 5 மிளகு, கால் ஸ்பூன் வெந்தயம் வைத்து அரைத்து உருண்டையாக்கி தினசரி காலை வெறும் வயிற்றில் மோர் அல்லது வெந்நீருடன் சாப்பிட்டு வர குழந்தைப் பேறு அடையலாம்.
- மாதவிலக்கான மூன்று நாட்களிலும் இரவு விரதம் இருந்து மறுநாள் காலையில் தாமரைப் பூவை பசும்பாலில் அரைத்து அருந்த குழந்தை உண்டாக வாய்ப்பு உண்டு.
- இந்த 4 வகையான உணவுகள் ஆண்மைக்கு ஆபத்தானவை
- நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்துப்பு,காசிகட்டியினை வாங்கி சுமார் ஒவ்வொன்றும் அரை கிராம் அளவு எடுத்து (நாட்பட்ட பூவரசம் பட்டை) வயதான பூவரச மரத்திலிருந்து கிடைக்கும் பட்டை இம்மூன்றையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து மாதவிலக்கான நான்காவது நாளன்று பசுவின் பாலில் கலந்து சாப்பிட பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும்.
- இரவு உணவுக்குப்பின் தம்பதியர் இருவரும் அரை டம்ளர் பாலுடன் சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அத்துடன் உரித்த வெள்ளைப் பூண்டுப் பற்கள் மூன்றினை தட்டிப் போட்டு ஒரு நிமிடம் கொதித்த பின் இறக்கி சூடு ஆறிய உடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து பருகி வர விரைவில் குழந்தை பாக்கியம் தேடிவரும்.
- தினண அரிசியை வறுத்து மாவாக்கி அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடக் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
- இரவில் அரிசி உணவினை விட கோதுமை உணவு எடுப்பது நலம் பயக்கும். 9. படுப்பதற்கு முன் ஒரு செவ்வாழைப்பழம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
- மாலை நேரத்தில் காபி, தேநீருக்குப் பதில் பாலில் பேரிச்சம் பழம் கல்கண்டு சேர்த்துக் காய்ச்சிப்பருக சிறப்பு உண்டாகும்.
- கோட்டைப்பாசி எனப்படும் அரக்கினை, நாட்டு மருந்துக் கடையில் வாங்கி சுத்தம் செய்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து மாதவிலக்கான நான்காவது நாளன்று பசும்பாலில் கலந்து பருக சிறப்பான குழந்தைப்பேறு ஏற்படும்.
பருவமடையாத பெண்களுக்கான தீர்வு:

பூப்பெய்தாத பெண்களுக்கு சிறு நெருஞ்சில் வேரை எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு எடுத்து, அதிகபட்சமாக ஒரு மண்டலம் குடித்து வர விரைவில் பூப்பெய்தி பருவம் அடைவார்கள்.
2. பூப்பெய்தும் வயதை கடந்த பிறகும், அதாவது சுமார் 18 வயது, 19 வயது, 20 வயது என்று ஆகியும் பருவம் எய்தாத நிலையில் உள்ள பெண்களுக்கு ஓர் அற்புதமான மருந்து இருக்கிறது. 12 செம்பருத்திப் பூவுடன், மஞ்சள் சிறு துண்டு எடுத்து, ஒரு சிறிய கொப்பரை தேங்காய் துண்டு சேர்த்து, அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரையில் சாப்பிட்டுவர பருவம் எய்தி விடுவார்கள். இது போன்று ஒன்பது செவ்வாய்க்கிழமை சாப்பிட வேண்டும் .
நாலாவது அல்லது ஐந்தாவது வாரத்திலேயே பருவமெய்தி விடுவார்கள். இது நான் அனுபவத்தில் கண்ட மருத்துவமுறை. இத்துடன் அவர்களுக்கு அஸ்வகந்தி லேகியம் அல்லது அமுக்கரா சூரணம் கொடுத்துவர விரைவில் பருவம் எய்துவார்கள்.
மருத்துவ ஜோதிடக் காரணங்கள்:
5ஆம் அதிபதியும், ஆறாம் அதிபதியும் சேர்ந்து இருக்கும் பட்சத்தில் கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படும். மாதவிலக்கு 28 முதல் 32 நாட்களுக்குள் வரவேண்டும். வரவில்லை எனில் கர்ப்பப்பையில் நீர்கட்டி, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை கட்டிகள், பெலோபியன் டியூப் அடைப்பு, கிருமிகள் தொற்று போன்றவை ஏற்படும்.
இதனால் பாதிக்கப்படும் கூடிய ராசிகள் எவை எனில், நீர் ராசிகள் எல்லாம் பாதிக்கப்படும். பாவகம் என்று சொன்னால் ஏழாம் பாவகம், எட்டாம் பாவகம் ஆகும். காரக கிரகங்கள் சந்திரன், செவ்வாய் மற்றும் சனி ஆகும்.
எனது அனுபவத்தில் விருச்சிக லக்னம், விருச்சிக ராசி. துலா லக்னம், துலா ராசி காரர்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படுகிறது. மாதவிடாய் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும், உணவு பழக்கவழக்கங்கள் அடிப்படையிலும் ஆலோசனை வழங்கி வருகிறோம். இது குறித்து +91 90803 75278 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ் மருத்துவ ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். பாரம்பரிய சிறந்த சித்த மருத்துவ விருதாளர், மருத்துவ தாவர ஆராய்ச்சியாளர், குழந்தைப்பேறு சிறப்பு நிபுணர், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் ஸ்ரீரமணி மருத்துவ ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல தீராத நோய்களை தீர்த்து வைத்திருக்கிறார். ☎️+91 90803 75278.