sitting disease

தொடர்ந்து உட்கார்ந்தே இருக்கும் வியாதி 

இன்றைய இளைஞர்கள் பலரும் அலுவலக வேலையை விரும்புகிறார்கள். அந்த வேலை பெரும்பாலும் கம்ப்யூட்டர் முன் தொடர்ந்து உட்கார்ந்தே பார்க்கும் வேலையாக இருக்கும். 

இப்படி தொடர்ந்து உட்கார்ந்திருப்பது ‘உட்காரும் வியாதி’ என்று அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆங்கிலத்தில் இதனை ‘சிட்டிங் டிஸீஸ்’  என்று வகைப்படுத்துகிறார்கள்.

உட்கார்ந்தே வேலை

ஒயிட் காலர் ஜாப் என்று அழைக்கப்படும் வேலையில் இருக்கும் பணியாளர்கள் ஒரு நாளில் 7.7 மணி நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்கிறாறார்களாம். 

லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் லண்டன் சிட்டி பஸ் டிரைவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உட்கார்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வழக்கமான ஆபிஸ் பணியாளர்களைவிட 3 மணி நேரம் அதிகம். 

இதனால் லண்டன் டிரைவர்களில் 74 சதவீதம் பேர் அதீத உடல் பருமனுடன், மாரடைப்பு அபாயத்துடன் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

நாள் முழுக்க உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் விடுமுறை நாளிலும் உட்கார்ந்து கொண்டேதான் இருக்கிறார்களாம். அதுவும் பெரும்பாலும் டிவி முன் தான் உட்காருகிறார்களாம். 

Knock-off Effect
Knock-off Effect

இதை விஞ்ஞானிகள் Knock-off Effect என்று சொல்கிறார்கள். இப்படி டிவி முன் செலவு செய்யும் ஒவ்வொரு மணி நேரமும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை 18 சதவீதம் அதிகரிக்க செய்கிறதாம்.

உடற்பயிற்சி காப்பாற்றாது

நாள் முழுவதும் இப்படி உட்கார்ந்தே இருந்துவிட்டு ஒரு மணி நேரம் மட்டும் உடற்பயிற்சி செய்வது எந்தவிதத்திலும் உங்களை காப்பாற்றாது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை Active Couch Potato என்று மருத்துவ விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

உட்கார்ந்து வேலை பார்ப்பதால் வியாதிகளை வரவழைத்துக்கொள்ளும் ஆட்களுக்கு சில பரிந்துரைகளை சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். 

அதன்படி 20 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்திருக்கையில் மெடபாலிசம் என்ற உங்களின் கலோரிகளை எரிக்கும் திறன் சுருங்கிப் போய்விடுகிறது. அதனால் உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்ந்து விடுகின்றன. 

20 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்வது தவறு என்கிறார்கள் விஞ்ஞானிகள். 20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து ஒரு நிமிட நடையாவது போய்வருவது அவசியம் என்கிறார்கள்.  

ஒரு மணிநேரத்துக்கு 250 அடிகளாவது நடப்பது அவசியம் என ஆய்வுகள் கூறுகின்றன. இது குறைந்தபட்ச அளவீடு என்பதை நினைவில் கொண்டு 500 அடிகளாவது நடக்க முயல வேண்டும்.

ஓரிரு நிமிடங்கள்

20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து சின்ன, சின்ன பயிற்சிகள், ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள், ஒரு மாடி ஏறுதல் என ஓரிரு நிமிடங்கள் செய்துவிட்டு, ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஐந்து முதல் 10 நிமிட நடை என்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

20 நிமிடத்துக்கு ஒரு முறை எழுந்து சின்ன, சின்ன பயிற்சிகள், ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள், ஒரு மாடி ஏறுதல் என ஓரிரு நிமிடங்கள் செய்துவிட்டு, ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஐந்து முதல் 10 நிமிட நடை என்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் வேலைகள் பாதிக்குமே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். இம்மாதிரி செய்வதால் பணிகள் பாதிக்காது என்கிறது ஆய்வு. பணி நேரங்களில் சின்ன, சின்ன பயிற்சிகள் செய்பவர்கள், மதிய உணவு வேளையில் சின்னதாக வாக் போகிறவர்களின் புரடக்டிவிட்டி கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

குறிப்பாக மாலை 3 மணிக்கு மேல் நம் புரடக்டிவிட்டி வெகுவாக குறைகிறது. இதை சரிசெய்ய  3 மணிக்கு 15 நிமிட உடற்பயிற்சி செய்வது நம் புரடக்டிவிட்டியை கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்க செய்கிறதாம்.

வேலை நேரங்களில் தினமும் குறைந்தது 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். 

மோசமான விஷயம்

செல்போனில் பேசர் பெடோமீட்டர் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு நாம் 500 அடிகளாவது நடந்துள்ளோமா என்பதை கவனிப்பதும் பலனளிக்கும். இந்த ஆப்பில் அப்படி 500 அடிகள் நடந்ததை காட்டும் முள் உள்ளது.

உட்கார்ந்திருப்பது சிகரெட் குடிப்பதை விட மோசமான விஷயம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 

அதனால், இனி வேலையின் போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை நடப்போம். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *