Viruchogam Guru Peyarchi 2021

குரு பெயர்ச்சி: விருச்சிக ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி?

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார்கள். ஆனால் கோபம் வந்துவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லாமல் சட்டேன்று வார்த்தையை விட்டு விடுவார்கள்.

விருச்சிக ராசியினர் இயல்பாகவே குறும்புத்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அலட்டி கொள்ள மாட்டார்கள். எதையும் விடாபிடியாக நின்று சாதிப்பார்கள். பார்பதற்கு அப்பாவித்தனமான முகத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னுடயதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள். வாய் ஜாலம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேசி ஜெயிப்பது கடினம்.

விருச்சிக ராசியினர் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் முன் கோபம் அதிகம் இருக்கும். எத்தனை தோல்விகள் வந்தாலும் விடாபிடியாக நின்று முடித்து காட்டுவார்கள். இவர்கள் சேமிப்பில் அதிக அக்கறை கொண்டவர்கள். யாருடைய பணமாவது இவர்கள் கைகளில் புழங்கிகொண்டே இருக்கும். 

விருச்சிகம் 

வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும்.   குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது.

குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. குரு தனது 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.

விருச்சிக ராசிக்கு இந்த பெயர்ச்சி எப்படி? காணொளியாகவும் காணலாம்

ஜோதிடத்தைப் பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வரும் போது தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன்கள் தரப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு.

அந்த வகையில் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான ஆண்டு கிரகம், குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2-ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3-ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கம் 

கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13-ம் தேதி பெயர்ச்சி ஆவார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20-ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு நான்காம்  வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். நான்காம்  இடம் என்பது தாய் மற்றும் சுக போக ஸ்தானம் ஆகும்.    குருவிற்கு 5,-7 மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 8, 10 மற்றும் 12ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். உங்களுக்கு தன வரவு மேம்படும்.  முதலீடு குறித்து குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

உங்கள் உடன் பிறந்தவர்களுடன் பண  விஷயங்களில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம்.  உங்கள் தாயின் உடல் நலத்தில் அக்கறை வேண்டியிருக்கும். 

உடற்பயிற்சி 

இளம் வயதினருக்கு மனதில் காதல் மலரும்.   உங்கள் கடந்த  கால முதலீடுகளின் மூலம் லாபம் காண்பீர்கள். அசையாச் சொத்துக்கள் வாங்குதல் மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பணிக்காக அதிக செலவுகள் ஏற்படும். தொழில் செய்பவர்கள் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைத்து அங்கீகாரமும் பாராட்டும் பெறுவீர்கள்.

மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் ஒத்துழைபைப் பெறுவீர்கள்.  மாணவர்கள் அதிக கவனம் செலுத்திப் படிக்க வேண்டியிருக்கும்.  ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து வெற்றி காண்பார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  ஆரோக்கியமான உணவு உட்கொள்வது மற்றும்  உடற்பயிற்சி  மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ள இயலும்.

குடும்பம்

குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலை தூக்கும். குறிப்பாக அது பணம் சம்பத்தப்பட்ட விஷயமாக இருக்கும். பணம் முதலீடு குறித்த விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது. பொறுமையாகச் செயல்பட்டு முடிவெடுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.  வார்த்தைகளில் கவனம் தேவை.  குடும்ப உறுப்பினர்களுடன் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தந்தையுடன் மோதல்,  உடன் பிறப்புகளுடன் பண விஷயங்களில் கருத்து வேறுபாடுகள்,   தாயாரின் ஆரோக்கியப் பிரச்சினை என சில பல குடும்ப பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரும்.

ஆரோக்கியம்

சுத்தம், சுகாதாரம். நல்ல உணவு மற்றும் முறையான ஒய்வு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். நுரையீரல் மற்றும் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை நீங்கள் எதிர் கொள்ள நேரலாம். எனவே நல்ல உணவு, உடற்பயிற்சி மற்றும் ஓய்விற்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

காதல் / திருமணம்

விருச்சிக ராசி இளம் வயதினர்கள் சிலர் காதல் வயப்படக் கூடும். உங்கள் இனிமையான பேச்சு எதிர்பாலரின் மனதைக் கவரும். இது உங்கள் காதல் வெற்றிக்குக் கை கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தம்பதியருக்குள் அன்னியோன்யம் கூடும்.

நிதி நிலை

உங்கள் வருமானம் கூடும். கையில் இருக்கும் பணத்தை நிலம், வீடு என்ற வகையில் முதலீடாக நீங்கள் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. சேமிப்புகளின் மூலம் உங்கள் கடன் தொகையை அடைத்து முடிப்பீர்கள். நிதிநிலையில் ஏற்றம் காணப்படும்.  வீட்டுப் பராமரிப்பு வகையில் பணம் செலவு செய்வீர்கள். பயணங்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.

வேலை / தொழில்

பணியில் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்கள் கடுமையான உழைப்பை மேற்கொள்வார்கள். அதற்கேற்ற நல்ல பலனையும் பெறுவார்கள். சிறப்பாகச் செயலாற்றி பணியிடத்தில் அங்கீகாரம் மற்றும் பாராட்டு பெறுவார்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு இன்பம் அளிக்கும். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். 

கல்வி

பள்ளி மாணவர்கள் கடினமாக உழைக்க நேரும். மனதை ஒருமுகப் படுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சி உங்கள் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் கிரகிக்கும் திறன் கூடும். கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டால் சிறப்பான முறையில் படித்து முன்னேறுவீர்கள்.

பேராசிரியர்களுக்கு வஸ்திர தானம் செய்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வருவது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும். வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கு குத்துவிளக்கு தானம் கொடுத்தல் சிறப்பு. கோவிலுக்கு வருபவர்களுக்கு கொண்டக்கடலை சுண்டல் தானமாகக் கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *