மருத்துவ ஜோதிடம் ஓர் அறிமுகம்: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..!
மிகினும் குறையினும் நோய்செய்யும் முதலோர் என வள்ளுவர் கூறிய படி வாதம், பித்தம், கபமும் சீராக இருக்க ஒருவருக்கு நோய் வராது. இந்த மூன்றில் எது கூடினாலும் குறைந்தாலும் நோய் வரும்.
மனித உடலானது பல தனிமங்களால் ஆக்கப்பட்ட ஒரு தொகுப்பு. இரும்பு காந்தத்தால் கவரப்படுவது போல மனித உடலில் இருக்கக்கூடிய தனிமங்கள் மேலே இருக்கும் கிரகங்களால் ஈர்ப்பின் அடிப்படையில், அவர்களுடைய பிறந்த ஜாதக அடிப்படையில் கிரகங்களின் தன்மையைப் பொறுத்து அவர்கள் பிறந்த ஜாதகத்தின் தன்மையை பொறுத்து அவர்கள் உடலில் தூண்டல் மற்றும் துலங்கல் ஏற்படும்.
அந்தத் தூண்டலின் அடிப்படையில் நோய் ஏற்படுவது, கூடுவது அல்லது நோய் குறைவதோடு நோய் வராமல் இருக்கும் என்பது மருத்துவ ஜோதிடத்தின் அடிப்படை.
பருவ காலங்கள்:
நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவானின் அருளாசியால் பருவகாலங்கள் ஏற்படுகிறது. சூரியன் உச்சம் அடையும் சித்திரைமாதத்தில் (மேசத்தில்) கோடை காலமும் நீசம் அடையும் நேரத்தில் குளிர் காலமும் ஆரம்பிக்கிறது. இந்த பருவ காலத்தின் அடிப்படையில் தான் கோடை காலத்தில் வெப்ப நோய்களும் குளிர்காலத்தில் கபம் மற்றும் சுரம் சார்ந்த நோய்களும் ஏற்படுவது இயல்பு. அப்படியானால் அந்த நோய்க்கு அடிப்படை கிரக நாயகனின் சூரியனே என்பது கண்கூடு.
ஜோதிடமும் மருத்துவமும் இரு கண்கள்:
நவீன மருத்துவத்திற்கு முன்னர் ஜோதிடமும் மருத்துவமும் இரு கண்களாகத் திகழ்ந்து வந்து இருக்கிறது. ஒரு மருத்துவராக இருப்பவருக்கு ஜோதிடமும் தெரிந்திருக்கும். வரலாற்றுச் சான்றுகளின் படி 18 சித்தர்கள் காலத்தில் மேற்சொன்ன மருத்துவமும் ஜோதிடமும் சிறப்பாக இயங்கி வந்துள்ளது என்பதற்கு 18 சித்தர்களே சிறந்த சான்று.
போகர் மற்றும் அகத்தியர் போன்ற சித்தர்கள் ஜோதிட அடிப்படையில் மருத்துவம் பார்த்து இருக்கிறார்கள். மருத்துவ நூல்களை எழுதி இருக்கிறார்கள் ஜோதிட நூல்களையும் எழுதியிருக்கிறார்.
ஒரு மருத்துவராக இருப்பவருக்கு ஜோதிடம் தெரிந்ததால் நோயாளி வந்து அமர்ந்த நேரத்தின் அடிப்படையில் அந்த நோயின் அடிப்படைக் காரணம், எந்த நட்சத்திரத்தில் ஒரு நோய் வந்தால் எத்தனை நாட்களில் தீரும், அவருக்கு மரண பயம் உண்டா?
எந்த மாதிரி மூலிகைகளைப் பயன்படுத்தலாம். அவருடைய உடம்பு வாத உடம்பா? பித்த உடம்பா? கப உடம்பா? என்பதைக்கூட அவர்கள் நட்சத்திரத்தின் அடிப்படையில், ராசிகளின் அடிப்படையில் கண்டு உணர்ந்து அதற்கு தீர்வுகளை ஜோதிடம் சார்ந்து மருத்துவம் செய்திருக்கிறார்கள்.
சாப விமோசனம்:
கர்ம வினைகளின் பயனே தீராத வியாதிகளுக்கு அடிப்படைக் காரணம் என்பதை கண்டுணர்ந்து, அதற்கான பரிகார முறைகளை உணர்த்தி நோய்களை தீர்த்து வந்திருக்கிறார்கள்.
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ மூலிகைகளைப் பிடுங்குவதற்கு முன்னதாக இந்த மூலிகை சிறப்பாக வேலை பார்க்க வேண்டும் என்பதற்காகவும், அந்த மூலிகைக்கு உயிர் உண்டு என்பதனால் அதற்கு சாப விமோசனம் கொடுத்து காப்புக்கட்டி அதற்கான நாள் நட்சத்திரம் பார்த்து மனித உயிர்களின் உயிர் காப்பதற்காக உனது உயிரை எடுக்கிறேன் என்று சொல்லி அசுவனி, பூசம், அனுஷம் நட்சத்திரங்களில் அதற்கு காப்பு கட்டி அந்த மூலிகைகளைப்பிடுங்கி மருந்துகள் செய்து வருவது வழக்கமாக இருந்திருக்கிறது.
நாடியே பிரதானம்:
ஸ்டெதாஸ்கோப் மற்றும் பிரஷர் பார்க்கும் கருவிகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் நமது தமிழ் மருத்துவர்கள் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை அறிவதற்கும், வாத, பித்த, கபம் நோய்களுக்கான தன்மையை அறிய நாடியை மையமாக வைத்தே உடலின் தன்மையை அறிந்து வந்தனர்.
அந்த நாடி பார்ப்பதற்கு எல்லா நேரத்திலும் பார்க்க இயலாது. நாடி சரியான முறையில் இருக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கான நேரம் சூரியனால் ஏற்படும் பருவ காலங்களை மையமாக வைத்து காலை, மாலை, மதியம், இரவு என்று காலநேர அடிப்படையிலேயே நாடியைப் பார்த்து மனிதனின் உடல் சூழ்நிலை அறிந்து இருக்கிறார்கள்.
சுக்கிராச்சாரியார் மனித உடற்கூற்றினை மிகவும் நன்கு அறிந்திருந்ததால் இறந்தவனை எழுப்பும் உபாயத்தினை அறிந்திருந்தார். அதனால்தான் சுக்கிரன் பகவான் நோய் தீர்க்கும் நாயகனாகத் திகழ்கிறார்.
கூடாத நட்சத்திரங்கள்:
ஆதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம், மீராரும், மாதனங் கொண்டார் தாரார், வழிநடைப்பட்டார் மீளார், பாய்தனிற்படுத்தார் தேரார், பாம்பின் வாய்த்தேரை தானே.
மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் வராமல், பிரயாணம் செய்தவர் வராமலும், வியாதியுடன் படுக்கையில் படுத்தவர்கள் தேரமாட்டார் என்று சொல்லப்படுகிறது.
கிரகங்களும் உணவுகளும்:

நன்மை தரக்கூடிய கிரகங்களுக்குரிய உணவினை உண்பதால் அக்கிரகத்தின் நல்ல கதிர்வீச்சினை பெற இயலும்.
அவர்களுக்கு கெடுதல் தரக்கூடிய கிரகங்களுக்கு உணவை உண்பதன் மூலம் தீய கதிர்வீச்சினை உள்வாங்கி தீய பலன்களே நடக்கும் எடுத்துக்காட்டாக சரும வியாதி உள்ளவர்கள் மதியின் ஆதிக்கம் உடைய கத்திரிக்காய் போன்ற கரப்பான் பண்டங்களை உண்பதன் மூலம் தீய கதிர்வீச்சைப் பெறுவதோடு தோல் வியாதி முற்றிலும் குணமாவதில்லை.
கற்பம் மருந்துகளும் கிரகங்களும் :
கற்ப மருந்திற்கும் காலத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சூரியனது சூரிய கிரகத்தின் நகர்வுக்கு தகுந்தாற்போல் தான் இம் மருந்தை எடுக்க வேண்டும்.
சித்திரை, வைகாசி மாதங்களில் இம்மருந்தை சுக்குக் கசாயத்திலும், ஆனி, ஆவணி மாதங்களில் இனிப்பான வெல்லத்திலும், புரட்டாசி மாதத்தில் தேனிலும், ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கற்றாழையிலும், மார்கழி, தை, மாசி மாதங்களில் கற்கண்டிலும் பங்குனி மாதத்தில் நெய்யிலும் எடுத்துவர மிகச் சிறப்பான முறையில் நோய் குணமாகும் என்று ‘போகர் 700’ என்கிற நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நட்சத்திரங்களுக்கான மருத்துவமுறைகள்:
எல்லா வகையான மருத்துவ முறைகளும் அனைத்து அன்பர்களையும் குணமடைய வைத்ததில்லை. சிலருக்கு சில மருத்துவ முறைகள் நன்கு பலனளிக்கும். ஒருசிலருக்கு பலனளிக்காது. உதாரணத்திற்கு சித்த மருத்துவத்திற்கான நட்சத்திரங்கள் அசுபதி, கார்த்திகை, புனர்பூசம், பூரம், சித்திரை, சுவாதி, சதயம்.
ஒரு மண்டலம் என்றால் என்ன?
ஒரு மண்டலம் என்பது நாற்பத்தி எட்டு நாட்களைக் குறிக்கிறது. அது ஏன் நாற்பத்தி எட்டு நாட்கள் என்று இருக்கிறது?
நாற்பத்தி ஏழு இல்லை. 50 நாட்களாக இல்லை. ஏனென்றால் இந்த நாற்பத்தி எட்டு என்கிற எண்ணிற்கு 27 நட்சத்திரங்கள் +12 ராசிகள் + 9 கிரகங்கள் = 48 வருகிறது ஆக இந்த நாற்பத்தி எட்டு என்கிற எண்ணிற்கு அடங்காதது எதுவும் இல்லை என்பதே உள்அர்த்தம்.
அதனாலேயே சபரிமலை செல்பவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் விரதமிருந்து செல்கிறார்கள். மருந்து சாப்பிடுவதும் ஒரு மண்டலம் எடுத்துக்கொள்வதன் அடிப்படையும் இதுவே.
ஹோமியோபதியின் 12 உப்புக்களும் 12 ராசிகளும்:
ஹோமியோபதி மருத்துவத்தில் 12 உப்புக்கள் மிகப் பிரதானமானவை. இந்த 12 உப்புக்கள் 12 ராசிகளைக் குறிக்கும் வகையில் மேஷத்திற்கு பொட்டாசியம் பாஸ்பேட், ரிஷபத்திற்கு சோடியம் சல்பேட், மிதுனத்திற்கு பொட்டாசியம் குளோரைடு, கடகத்திற்கு கால்சியம் புளோரைடு, சிம்மத்திற்கு மெக்னீசியம் பாஸ்பேட், கன்னிக்கு பொட்டாசியம் சல்பேட், துலாத்திற்கு சோடியம் பாஸ்பேட், விருச்சிகத்திற்கு கால்சியம் சல்பேட், தனுசிற்கு சிலிக்கா, மகரத்திற்கு கால்சியம் பாஸ்பேட், கும்பத்திற்கு சோடியம் குளோரைடு, மீனத்திற்கு பாஸ்பேட் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மருந்து உண்ண ஏற்ற நட்சத்திரங்கள்:
அசுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி,
மருந்து உண்ண ஏற்ற திதிகள்:
துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி,
மருந்து உண்ண ஏற்ற லக்னங்கள்:
மேஷம், கடகம், துலாம், மகரம். ஆனால் எட்டாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
மருந்து உண்ண ஏற்ற கிழமை:
ஞாயிறு மற்றும் செவ்வாய்.
மருந்து உண்ண ஏற்ற ஹோரை:
செவ்வாய் ஹோரை.
கனத்த நாட்கள்:
அட்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி.
அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நாட்கள்:
வளர்பிறை நாட்களில் செய்யலாம். கோட்சார மதி ஜனன ஜாதக குருவைப் பார்க்கும் நாளில் செய்யலாம். ராசியை குரு பார்க்கும் போது செய்யலாம்.
அறுவைசிகிச்சை செய்ய கூடாத நாட்கள்:
அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில், ராசியில் செய்யக்கூடாது. அமாவாசை, பௌர்ணமியில் செய்யக்கூடாது. சனி, செவ்வாய் சேர்க்கை, பார்வை காலத்தில் செய்யக்கூடாது .
ஆங்கில மருத்துவத்தின் மருத்துவ குறியீடு:
அரச மரத்திற்கு அடியில் நிறைய நாகங்களின் சிலை இருக்கும் அதில் குறிப்பாக ரெட்டை நாகங்கள் (பின்னப்பட்ட பாம்பு)களின் கற்சிலைகளும் இருக்கும். இந்த பின்னப்பட்ட இரண்டு பாம்புகளின் குறியீடு ஆங்கில மருத்துவத்தின் குறியீடாகத் திகழ்கிறது.
ஆயில்ய நட்சத்திரம் இருக்கும் கடக ராசியில் ரத்த காரகனான செவ்வாய் ஒருவருக்கு நோயினை தூண்டக்கூடிய ரத்தத்தின் அடிப்படையில் இருக்கக்கூடிய செவ்வாய் நீசம் அடைகிறார். ஆகவே அதற்காகவே நம் முன்னோர்கள் அரசமரத்தடியில் பின்னப்பட்ட ஆயில்ய நட்சத்திர குறியீடான ரெட்டை பாம்பினை சுற்றிவரும் பொழுது உங்களுடைய தீராத பிணி தீரும் என்ற நம்பிக்கையில் அமைத்திருக்கிறார்கள்.
இதே இரட்டை பாம்புக் குறியீடு ஆங்கில மருத்துவத்தின் குறியீடாகவும் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கர் என்கிற விஞ்ஞானி கூறும்போது அமாவாசை மற்றும் பௌர்ணமியில் நோயின் தாக்கம் கூடும் என்று ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கிறார்.
மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி ஸ்ரீ ரமணி மருத்துவ ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மருத்துவ ஜோதிட அடிப்படையில் ஏற்படக் கூடிய நோய்களுக்கு உணவு சார்ந்த பழக்கவழக்கங்களில் இருந்து அதற்கான எந்த மருத்துவ முறைகளை மேற்கொள்வது என்பது வரையில் ஆலோசனை வழங்கி வருகிறது.
குறிப்பாக குழந்தை பேறு, தைராய்டு, தோல் வியாதிகள், சைனஸ், ஹிரண்யா போன்ற நோய்களுக்கு மிகச் சிறப்பான பாரம்பரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கி அதற்கான நல்ல தீர்வினை வழங்கி வருகிறது.
மாணவரின் ஜாதக அடிப்படையில் மருத்துவத்துறையில் எந்த மருத்துவப்பிரிவினை தேர்ந்து எடுப்பது, எந்த வகையான மருத்துவர் ஆவார் என உறுதியிட்டுச்சொல்வது.
நோயாளிகள் தங்களுடைய பிரச்சனைக்கு சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா, அலோபதி, யுனாணி, வர்மா போன்ற பிரிவுகளில் எவ்வகையான மருத்துவ முறையைத்தேர்ந்தெடுப்பது என ஆலோசனை வழங்குவது.
மேலும் தொடர்பிற்கு:
பாரம்பரிய சிறந்த சித்த மருத்துவ விருதாளர், மருத்துவ ஜோதிட நிபுணர், முனைவர் நா.ரமணி சேகர், M.Phil. (Medical astrology), Ph.D. (தமிழ் மருத்துவம்), கைபேசி: +91 94433 19495, +91 90803 75278.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ் மருத்துவ ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். பாரம்பரிய சிறந்த சித்த மருத்துவ விருதாளர், மருத்துவ தாவர ஆராய்ச்சியாளர், குழந்தைப்பேறு சிறப்பு நிபுணர், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் ஸ்ரீரமணி மருத்துவ ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல தீராத நோய்களை தீர்த்து வைத்திருக்கிறார். ☎️+91 90803 75278.