Cleopatra on the boat

கிளியோபாட்ரா – 12 தேனிலவில் கண் கலங்கிய சீஸர்

கிளியோபாட்ரா – 12 தேனிலவில் கண் கலங்கிய சீஸர்

அழகான காலைப்பொழுது அது – நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்த அந்த அழகான இடத்தில் தென்றல் காற்று இதமாய் வீசிக்கொண்டிருந்தது. இரவிலும் அனல் தகிக்கும் அந்தப் பாலைவன பிரதேசத்தில், அதற்கு மாறாகக் குளுமையை வரவழைத்துக் கொண்டிருந்த அந்த இடம் சற்று வியப்பைத்தான் தந்தது.

பாலைவன அனலைத் தாங்கி வந்த வெப்பமான காற்று, இந்த இடத்தில் மட்டும் நைல் நதியின் தாகம் பருகிய பரவசத்தில் குளிர்ந்துபோய் வீசியது.

பொதுவாக வறட்சியைத் தாங்கி வளரும் கள்ளிச்செடி போன்ற தாவரங்களே காணப்படும் பாலைவனம், இங்கு மட்டும் சோலைவனமாக மாறியிருந்தது. பச்சை பேரீச்சம் மரங்களை மோதி வந்த காற்று லேசாக சலசலத்துக் கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட அழகான இடத்தில் அமைந்திருந்தது அந்தக் குடில். அதற்குள் முக்கியமான இருவர் தங்கியிருந்தனர் என்பதால், குடிலைச் சுற்றிலும் ஆங்காங்கே வீரர்கள் சிலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கிளியோபாட்ரா – பேரரசர் ஜூலியஸ் சீஸர் ஆகியோர்தான் அந்த வி.வி.ஐ.பி.க்கள். தேனிலவு கொண்டாடவே, இவர்கள் அங்கு வந்திருந்தார்கள்.

தேனிலவில் கண் கலங்கிய சீஸர்

பொதுவாக புதிதாய் திருமணம் ஆன தம்பதியர்தான் தேனிலவு கொண்டாடச் செல்வார்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு அந்த முதல் மாதம் தேனாய் இனிக்கும். அதை ‘ஹனி மூன்’ என்று ஆங்கிலத்தில் கூறினார்கள். அதுவே, தமிழில் தேன் + நிலவு = தேனிலவு ஆகிவிட்டது.

அந்த வகையில், உலகில் முதன் முதலாக தேனிலவில் தேனிலவு கொண்டாடிய ஜோடியாக கிளியோபாட்ரா – ஜூலியஸ் சீஸர் இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களது கணிப்பு.

தேனிலவு அறையில் கிளியோபாட்ராவும், சீஸரும் அருகருகே அமர்ந்திருந்தனர். ஏற்கனவே அவளை ஒட்டுமொத்தமாகப் பருகி காம தாகத்தைத் தீர்த்துக்கொண்ட அனுபவம் சீஸருக்கு இருந்ததால் அவள் மேல் கை போட்டபடி பேசிக்கொண்டிருந்தார்.

“என்னை முதன் முதலாக வியக்க வைத்த பேரழகே! உன்னுடன் 100 வயதைக் கடந்தும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த ஆசைதான் நிறைவேறுமா? நிறைவேறாதா? என்று பயமாக இருக்கிறது”.

“பயப்பட வேண்டாம் பேரரசே! உங்களுக்காகவே நான் பிறந்தது போல் உணர்கிறேன். இந்த எகிப்து பேரரசின் மகாராணியாக, உங்களவளாக நான் வாழ விரும்புகிறேன்…”

“உனது இந்த பேச்சு, ஆயிரம் வீரர்கள் என்னைச் சுற்றி பாதுகாப்புக்கு நின்றிருப்பது போன்ற தைரியத்தைத் தருகிறது…” என்ற ஜூலியஸ் சீஸர், கிளியோபாட்ராவை அணைத்துக்கொண்டு அவளது நெற்றியில் முத்தமிட்டார். தேனிலவில் அந்த மாவீரனது விழியோரம் லேசாகக் கலங்கியிருந்தது.

அந்த விழியோரம் தனது மஞ்சள் கரத்தைக் கொண்டு சென்ற கிளியோபாட்ரா, அங்கிருந்த ஈரத்தைத் துடைத்துவிட்டாள். ஆதரவாய் அவரை அணைத்துக் கொண்டாள்.

சிலிர்ப்பைத் தந்த படகுப் பயணம்

சில நிமிடங்கள் அங்கே எந்த சப்தமும் வரவில்லை. அதன் பிறகே இருவரும் அணைப்பில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.

“சரி… இப்போது மாலைப்பொழுது ஆயிற்றே..? நாம் இந்த அழகிய நதியில் சிறிது தூரம் உலாவி விட்டு வரலாமே…” என்றார் சீஸர்.

“நானும் அதைத்தான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நீங்களே முந்திக்கொண்டு விட்டீர்கள்…” என்ற கிளியோபாட்ரா, லேசாக புன்னகையை உதிர்த்தாள்.

‘உனது உடல் அழகு மட்டுமல்ல, இந்த புன்சிரிப்பும் என்னை என்னமோ செய்கிறது…’ என்று கூறுவது போல் கிளியோபாட்ராவை ஒரு பார்வை பார்த்த சீஸர், “இதோ படகுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன்…” என்று கூறிவிட்டு, அறையில் இருந்து வெளியேறினார்.

ஜூலியஸ் சீசர் தேனிலவில் கண்ணீர்

சில நிமிடங்கள் வேகமாகக் கரைந்திருந்தன.

தேனிலவில் உல்லாசப் படகில் பயணிப்பதற்காகத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள் கிளியோபாட்ரா. சீஸருக்கு பிடித்த மேலாடையை அணிந்து கொண்டாள். கவர்ச்சியாகவும் இருந்தது அந்த ஆடை.

சிறிதுநேரத்தில் சீஸர் வந்துவிட்டார். கிளியோபாட்ராவின் கரம் பற்றியவர், அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டு படகு நோக்கி நடந்தார்.

படகில் ஒரு வீரன்

படகில் ஒரே ஒரு வீரன் மட்டும் இருந்தான். அவன் சீஸரைக் கரம் நீட்டித் தாங்கி, மேலே தூக்கினான்.

சீஸர் படகினுள் ஏறியதும், அந்த வீரனைப் படகில் இருந்து வெளியேற பணித்தார். அவனும் வெளியேறினான்.
படகுக்கு அருகே தண்ணீர் தாலாட்டும் தரையில் கால் முட்டிவரை ஈரமாகிப்போன உடையோடு நின்று கொண்டிருந்தாள் கிளியோபாட்ரா. அவளை நோக்கி வலது கரத்தை நீட்டினார் சீஸர்.

கிளியோபாட்ராவும் அவரது கரத்தைப் பற்றிக்கொண்டு, வலது காலைப் படகின் மேல் வைத்தாள்.
அப்போது, ஈரமாகி உடலோடு உடலாக ஒட்டிப்போய் இருந்த அவளது ஆடை சற்று விலகியது. அவளது மஞ்சள் தொடையின் அழகு லேசாகப் பளிச்சிட்டது.

பேரரசருக்கு உரியவள் என்பதால், அருகில் நின்ற வீரர்கள் தலை குனிந்து கொண்டனர். சீஸர் மட்டும் அவளது அழகைப் பருகியபடியே அவளைப் படகுக்குத் தூக்கினார்.

சிறிதுநேரத்தில் உல்லாசப் படகை, துடுப்பை மீட்டி இயக்க ஆரம்பித்தார் சீஸர். அவருடன் கிளியோபாட்ரா மட்டுமே துணைக்கு இருந்தாள்.

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *