வாஸ்து என்பது வீட்டுக்கு மட்டுமல்ல வணிகத்திற்கும்தான்

வாஸ்து என்பது வீட்டுக்கு மட்டுமல்ல வணிகத்திற்கும்தான்

வாஸ்து என்பது வீட்டுக்கு மட்டுமல்ல வணிகத்திற்கும்தான்

இன்றைக்கு வாஸ்து என்பது மனித வாழ்வில் இருந்து விலக்க முடியாத ஒர் அவசியமாகிவிட்டது. இவ்வளவு காலம் இதை குடியிருக்கும் வீடுகளுக்குத்தான் பார்த்து வந்தார்கள்.

இப்போது ஒருவரது வாழ்வுக்கு வளம் சேர்ப்பது அவர் செய்யும் தொழில்தான் என்பதால் அந்த இடம் சரியான வாஸ்துவில் இருந்தால்தான் தொழில் சிறக்கும். எனவே அதற்கும் வாஸ்து வந்துவிட்டது. கீழே குறிப்பிட்ட முறைப்படி வர்த்தக இடங்களை அமைத்தால் வியாபாரம் செழிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

கிழக்கு

ஒரு கடை கிழக்கு திசைப் பார்த்து இருந்தால் அது எப்படி இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. தரைமட்டம் மேற்கில் சற்று உயரமாகவும், கிழக்கில் சற்று தாழ்வாகவும் இருக்க வேண்டும். கேஷியர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமரவேண்டும். பணப்பெட்டி அவரது இடது கைப்பக்கம் இருக்க வேண்டும்.

தென்கிழக்கு மூலையில் கிழக்குப் பார்த்து அமர்ந்தால் பணம் வைக்கும் இடம் கேஷியரின் வலதுபுறம் இருக்கம் வேண்டும். கேஷியர் வடகிழக்கிலோ அல்லது வடமேற்கிலோ அமரக்கூடாது.

தெற்கு

தெற்கு திசைப்பார்த்த கடையில் வடகிழக்கு நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். கேஷியர் தென்மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமரலாம்.

கிழக்கு நோக்கி அமர்ந்தால் பணம் வைக்கும் இடம் கல்லாப்பெட்டி அவருக்கு வலதுபுறம் இருக்க வேண்டும். தென்கிழக்கு மற்றும் வடமேற்கு மூலையில் அமரக்கூடாது.

மேற்கு

மேற்கு திசைப் பார்த்த கடையில் வகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும்.

கேஷியர் தென்மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடதுப்பக்கத்தில் பணப்பெட்டி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணப்பெட்டி அவரது வலது கைப்பக்கம் அமைய வேண்டும். வடமேற்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ, தென்கிழக்கு மூலையிலோ அமரக்கூடாது.

வடக்கு

வாஸ்து என்பது வீட்டுக்கு மட்டுமல்ல வணிகத்திற்கும்தான்

வடக்கு பார்த்த கடையில் வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். கேஷியர் வடமேற்கு மூலையில் கிழக்குப்பார்த்து அமர்ந்தால் பணப்பெட்டியை வலது கைப்புறம் வைக்க வேண்டும்.

வடக்குப்பார்த்து அமர்ந்தால் பணப்பெட்டியை அவரது இடது கைப்புறம் அமைக்க வேண்டும்.

தென்மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென்கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக்கூடாது.

வாஸ்து வாயிற்படி

வாயிற்படியை பொதுவாக கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம். கிழக்கு பார்த்த கடையில் படிகளை வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேற்கு பார்த்த கடையில் படிகளை வடமேற்கில் அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கடையில் தென்கிழக்கு மூலையில் படிகளை அமைக்கலாம்.

வடக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் வட்டம் அல்லது அரைவட்டம் வடிவமுள்ள கடை தோற்றம் அல்லது படிகள் அமைக்கக்கூடாது.

கதவுகள்

ஒரு கடையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஷட்டர்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கிழக்கு பார்த்த கடையில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென்கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். (இதற்கு எதிர்மறையாக செய்யக் கூடாது) அல்லது இரண்டு ஷட்டரும் திறந்திருக்க வேண்டும்.

தெற்கு பார்த்த கடையில் தென்மேற்கு ஷட்டர் மூடி இருக்க வேண்டும். மேற்கு பார்த்த கடைகளில் மேற்கு, வட மேற்கு ஷட்டர் திறந்து இருக்க வேண்டும். தென் மேற்கு ஷட்டர்கள் மூடி இருக்க வேண்டும்.

இதற்கு எதிர்மாறாக செய்யக்கூடாது. அல்லது இரண்டு ஷட்டர்களும் திறந்து இருக்கலாம். வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்து இருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடி இருக்கு வேண்டும்.

பூஜை இடம்

கடையில் ஈசான்ய மூலையில் கடவுளின் படம் அல்லது சிலை வைக்க வேண்டாம். தென்மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கில் அவற்றை வைக்கவேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *