சர்க்கரைப் புண்: அறுவை சிகிச்சை இல்லாமல் முழுமையாக குணப்படுத்தலாம்
பொதுவாக முள் குத்துவது அல்லது ஒரு பொருளின் மீது இடித்து விடுவது என்பது இயல்பு. இந்த இயல்பு நிலையில் சர்க்கரைப் (சுகர்) புண் உள்ளவர்களுக்கு முள் குத்தினால் அந்த வலியை உணர இயலாது. பொருளின் மீது மோதி விட்டால் கூட அடிபட்ட விஷயமும் தெரியாது.
மாரடைப்பு ஏற்படும் போது ஒருவரின் மீது யானை ஏறி நின்றால் எவ்வளவு வலி இருக்குமோ அந்த அளவு வலி தோன்றி தாங்க இயலாத நிலை ஏற்படும். அந்த மாரடைப்பு வலி கூட சர்க்கரைப் புண் உள்ளவர்களுக்கு உணரா இயலா நிலை ஏற்படும்.
சர்க்கரைப் புண் வர காரணங்கள் :
ரத்தச் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பவர்களுக்கு புண் வந்தால் சாமானியமாக ஆறாது. ஏனென்றால் நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் நமக்கு நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதோடு நோய்க் கிருமிகளைக் கொல்லும் திறன் உடையது.
ரத்த சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கு வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு திறனை அழிக்கும் தன்மையைக் கெடுத்து செயல்பட விடாது. வெள்ளை அணுக்கள் சீராக செயல்பட முடியாததால் சர்க்கரைப் புண் வரும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்த ஒட்டத்தின் நிலை மெதுவாக நடைபெறும் ஆகவே உடல் முழுவதும் கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவும் சத்துக்களின் அளவு குறைவதால் போதிய நோய் எதிர்ப்பு திறன் கிடைக்காததால் சர்க்கரைப் புண் வரும். ஆறாது.
உடலில் உள்ள நரம்புகள் பழுதடையும் போது முள் குத்தினால் தெரியாது. அடிபட்டாலும் தெரியாது. அந்த வலியை மூளைக்கு கடத்தக்கூடிய திறனை அந்த நரம்புகள் இழந்து விடுகிறது. அதனால் மூளைக்கு தெரிவிக்க இயலவில்லை.
என்சைம் மற்றும் ஹார்மோன்கள் சர்க்கரை வியாதியினால் தன்நிலையிலிருந்து மாறுபாடு அடையும். இந்த என்சைம், ஹார்மோன்கள் மாறுபாடு அடைவதால் புண் வந்தால் சீக்கிரம் ஆறாது.
சர்க்கரைப் புண்ணின் வகைகள் :
1. குழிப்புண்கள்.
2. குதறிய புண்கள்
3. புரையோடிய புண்கள் (உள்ளுறுப்புகளை துளைத்து அருகம்புல்லின் வேர் ஊடுருவது போல் புண் தொடர்வது)
சர்க்கரைப் புண் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
1. தினமும் சுத்தமான நீரால் புண்ணைக்கழுவி சுத்தமான துணியால் துடைத்து வரவேண்டும்.
2. தினமும் புண்ணின் நிலையில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.
3. தினமும் காலில் மஞ்சள் கலந்த தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ளலாம்.
4. செருப்புகள் அணியாமல் வெளியே செல்லக்கூடாது.
5. நகம் வெட்டும் போது கூட கவனமாக இருக்க வேண்டும். சதையை வெட்டி விடக்கூடாது.
6. புண்களின் மீது பிளாஸ்டர் ஒட்டிக் கொள்ளலாம்.
7. தினமும் டிரஸ்ஸிங் பண்ணி கொள்ள வேண்டும்.
பாரம்பரிய நாட்டு மருத்துவ நடைமுறைகள்:
1. ஒரு கைப்பிடி வேப்பிலையுடன் விரலி மஞ்சளைச்சேர்த்து அரைத்து அதை ஆறாத புண்களின் மீது தடவி வர சுமார் 21 நாட்களில் குணமாகும்.
2. ஆவாரம் பூவினை அரைத்து வேப்பெண்ணையில் லேசாக வதக்கி புண்களில் தடவி வர புண்கள் எளிதில் குணமாகும்.
3. நெல்லிக்காயை தினமும் காலையில் சாறாக எடுத்து பருகிவர உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியே எடுத்து சர்க்கரை அளவினை நன்கு குறைக்க வழி செய்யும்.
4. இரவு படுக்கும் முன் பத்து வில்வ இலையை சுத்தமான செப்பு பாத்திரத்தில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் இந்நீரையும் வில்வ இலைகளையும் தின்னலாம், அல்லது நீரை மட்டும் பருகலாம். இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உண்டான நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக அமையும்.
5. இரவு படுக்கும்முன் ‘அஸ்வகந்தி சூரணம்’ எடுத்து வர நரம்பு சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
மருத்துவ ஜோதிட காரணங்கள் :
சர்க்கரை நோயினால் புண்ணால் காலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கும்.
கிரகநிலைகள் :
சர்க்கரை நோய் தீவிரமாக குரு, சுக்கிரன், சனியின் வலுவான தொடர்பு முக்கிய காரணங்களாகும். இவருடன் ராகு அல்லது கேது தொடர்பு இருந்தால் மட்டுமே உடலின் ஒரு பகுதியை வெட்டி எடுக்கக்கூடிய நிலை ஏற்படும்.
குருவினால் பாதிப்பு வந்தால் காலில் உள்ள சதைப் பகுதியும், சுக்கிரனால் பாதிப்பு ஏற்பட்டால் காலில் உள்ள நரம்பு மற்றும் தோலின் நிறத்தில் மாற்றங்கள் கருப்பு நிறம் மாறுதல் மற்றும் புண்கள் ஏற்படுதலும். சனியினால் பாதிப்பு வந்தால் கால் மற்றும் விரல்களில் உள்ள எலும்புகள் பாதிப்பு ஏற்படும்.
குரு பகவான் பார்க்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சை அல்லது மூலிகை மருந்து மூலம் புண்ணைக் குணப்படுத்தும் நிலை ஏற்படுகிறது.
இது குறித்த மருத்துவ ஜோதிட ஆலோசனை பெற +91 94433 19495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மேகரணத் தைலம் :
இத் தைலத்தை தொடர்ந்து தேய்த்து வர ஆரம்ப நிலை சர்க்கரைப் புண் விரைவில் ஆறும்.
செய்முறை:
தேவைக்கேற்ப தேங்காய்ப்பூதுருவல், ஐந்து வெள்ளை பூண்டு பற்கள், எருக்கம் பூ மூன்று (அந்தப் பூவில் உள்ள மூக்குத்தி போன்ற பகுதியை எடுத்து விட வேண்டும்).
புங்கை இலை மூன்று. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து இடித்து, இலுப்பை எண்ணெயில் இட்டு காய்ச்சவேண்டும்.
நுரை வரும் பொழுது தீயைக் குறைக்க வேண்டும். இந்த எண்ணெயை படுக்கைப்புண் குழிப்புண்களுக்கு தடவிவர நோய்க்கிருமிகளை, புண்களில் உள்ள புழுக்களை அழித்து புண்ணை ஆற்றி விடும். சீயக்காய் மற்றும் பூந்திக்கொட்டை சூரணத்தின் மூலம் புண்களைக் கழுவி வரலாம்.
இந்த செய்முறையின் மூலம் மருந்து செய்ய இயலாதவர்கள் மேகரணத் தைலத்தினை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
பன்னீர் பூ சொட்டு மருந்து :
இம்மருந்தினைக் கால் டம்ளர் நீரில் 5 சொட்டு உணவுக்கு முன், பின் இரு வேளையோ அல்லது மூன்று வேளையோ, ஒரு மண்டலம் எடுத்துவர இயற்கை முறையில் இன்சுலின் சுரந்து விரைவில் சர்க்கரை அளவு சராசரி நிலைக்கு வரும்.
அதன் பின் உணவுக் கட்டுப்பாடு மூலம் சராசரி நிலையை தக்கவைத்துக் கொள்ளலாம். மலர் மருத்துவம் சார்ந்த இம்மருந்து தேவைப்படுவோர் என்னிடமோ அல்லது மருத்துவர் சாய் குகன் செங்கல்பட்டு மாவட்ட கண்ணாப்பட்டு கிராமத்தில் தொடர்புகொள்ளலாம். அவருடைய செல் எண்: +91 70925 98163
ஆதி சித்தர் குருகுலம்
சர்க்கரைப் புண்ணிற்கு மேற்சொன்ன கை வைத்தியங்கள் எல்லாம் செய்ய இயலாதோர் நான்கு நாட்கள் (நாள் ஒன்றுக்கு ரூபாய் 1000 உணவு தங்குமிடம் மருந்து செலவுடன்) புண்ணை ஆற்றி வீடு திரும்பலாம். அதன்பின் அவரவர் வீட்டிற்கு திரும்பிய பின் புண் முழுமையாக ஆற வழிமுறைகள் சொல்லித்தரப்படும். இங்கு ஆறாத சுகர் புண் மிகச் சிறப்பான முறையில் சரி செய்யப்படுகிறது .
உடல் உறுப்புகளை வெட்டி எடுக்க தேவை இல்லை. ஆதி சித்தர் குரு குல நிர்வாகியான டி.எஸ்.பி.சங்கரன் அவர்கள் எல்லா வகையான புண்களையும் துடைத்து, மருந்திட்டு, சிகிச்சை அளித்து தனிக் கவனம் செலுத்துவது மிகச் சிறப்பாகும்.
இத்துடன் ஆய கலைகள் அறுபத்தி நான்கையும் புத்துயிர் பெறும் வகையில் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு பாரம்பரியக் கலைகளை புத்துயிர் ஊட்டுகிறார். ஆதி சித்தர் குரு குலம், பாரம்பரிய மருத்துவர் டி.எஸ்.பி. சங்கரன் அவர்களைத் தொடர்பு கொள்ள கைபேசி எண்: +91 86751 80544.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ் மருத்துவ ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். பாரம்பரிய சிறந்த சித்த மருத்துவ விருதாளர், மருத்துவ தாவர ஆராய்ச்சியாளர், குழந்தைப்பேறு சிறப்பு நிபுணர், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் ஸ்ரீரமணி மருத்துவ ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல தீராத நோய்களை தீர்த்து வைத்திருக்கிறார். ☎️+91 90803 75278.