தைராய்டு வர காரணங்கள்

தைராய்டு – வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்க வேண்டியதில்லை

தைராய்டு – வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்க வேண்டியதில்லை

தைராய்டு முன் கழுத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய ஒரு அற்புதமான சுரப்பி. இது ஒரு நாளமில்லாச் சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்து இருக்கக் கூடிய சிறப்பு வாய்ந்தது. உடலின் பல உறுப்புகளை கட்டுப்படுத்துவதோடு உடலுக்குத் தேவையான ஹார்மோன்களைச் சுரக்கிறது. 

மூளையில் உள்ள பிட்யூட்டரியின் கட்டளைக்கிணங்க தைராய்டு சுரப்பு நீரை சுரக்க வைக்கும். சரியான முறையில் தைராக்ஸின் சுரக்கும்போது எந்த பிரச்சனையும் வராது. பிட்யூட்டரி சுரப்பியின் கட்டளைக்குச் சரியான முறையில் ரெஸ்பான்ஸ் பண்ணாத போது தைராய்டு சம்பந்தப்பட்ட அந்த சுரப்பு நீர்  குறைவாகவோ அல்லது அதிகமாகவோ  சுரக்கும் போது தான் இந்த தைராய்டுப் பிரச்சனை வருகிறது.

தைராய்டு எதனால் வருகிறது ?

தைராய்டு அறிகுறிகள்

ஒருவருடைய மன அழுத்தத்தால் வரலாம். அவருடைய தாய் தந்தை (பெற்றோர்கள்) மரபு ரீதியாகக் கூட வரலாம். மாறிவரும் உணவுப் பழக்க வழக்கத்தால் இந்த தைராய்டு வரலாம். உடல் உழைப்பு சற்றும் இல்லாத நிலையிலும் இந்த தைராய்டு வரலாம். உள்ளுறுப்புக்கள் பாதிப்பாலும் வரலாம். 

ஆட்டோ இம்யூன் பிரச்சனையால் கூட வரலாம். ஹார்மோன் இம்பேலன்ஸ் ஆகும் போதுகூட வரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஐயோடின் குறைபாட்டாலும் இந்தப் பிரச்சனை வருகிறது. வாழ்க்கை பழக்க வழக்கம் எனும் (Life style) மாறினாலும் வரலாம்.

உலக அளவில் 750 மில்லியன் மக்கள் தைராய்டு நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லுகிறது. ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் பார்க்கும்பொழுது ஒரு ஆணுக்கு தைராய்டு வருகிறது என்றால் எட்டு பெண்ணிற்கு தைராய்டு இருக்கிறதாக இந்த தகவல் சொல்கிறது.

15 கிராம் முதல் 20 கிராம் அளவு இருக்கக்கூடிய இந்த தைராய்டு சுரப்பியில் சுரக்கக்கூடிய நீரைப் பொறுத்த அளவு பார்க்கும் பொழுது T3 என்று சொல்லக்கூடிய டிரைஅயடோ தைரோனின் என்கிற விஷயமும், T4 என்கிற தைராக்சின்  விஷயமும் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த T4 தைராக்சின் ரத்தத்தில் உள்ள அயோடினை பிரிப்பதற்காகப் பயன்படுகிறது.

மேற்சொன்ன T3, T4 போன்ற சுரப்பு நீர்கள் நமது உடல் நலம் பேணுவதில் மிகச் சிறப்பான பங்கை வகிக்கிறது. மற்றும் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் சீராக இயக்குவதற்கு இவ்விரண்டும் சுரப்பு நீர்களும் காரணமாகத் திகழ்கின்றன. 

இதையெல்லாம்விட தைராய்டு சுரப்பி நன்கு சீராக நலமாக இருக்கவும் அதைத் தூண்டும் வகையில் பிட்யூட்டரியின் முன்பகுதியில் அமைந்திருக்கக் கூடிய பகுதியிலிருந்து ஒரு சிறப்பு நீர் சுரக்கிறது அதுவே TSH  எனப்படும் ‘தைராய்டு ஊக்கி ஹார்மோன்’ தைராய்டை மிகச் சிறப்பான முறையில் பராமரிக்கிறது.

தைராக்சின்

தைராய்டு அறிகுறிகள்

கர்பப்பையில் ஒரு கரு உருவாவதிலிருந்து குழந்தை வளர ஆரம்பித்த பிறகு அந்த குழந்தையினுடைய உடல் திறன் நல்ல முறையில் வளர்ச்சி அடைவும் ஆசீர்வதிப்பது இந்த தைராக்சின் தான்.

நமது உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்திற்கு அடிப்படையே இந்த தைராக்சின் தான் சிறுகுடலில் ஜீரணமாகாத புரதத்தினை ரத்தத்தில் கலக்க வைப்பதும், ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி வருவதும் இந்த தைராக்சின் தான். 

தலை முதல் பாதம் வரை உள்ள வளர் மற்றும் சிதை மாற்றத்தை நல்ல முறையில் செயல்படுத்தி வருவதும் இந்த தைராக்சின் தான். ஆண் பெண் பருவம் அடைந்ததும் கருத்தரிக்க வழி வளர்ப்பதும், பாலுணர்வைத் தூண்டுவதும் இந்த தைராக்சின் தான்.

தைராய்டு இருக்கிறதா என்பதை அறிய பொதுவாக T3, T4 மற்றும் Tsh போன்ற டெஸ்ட் எடுப்பது வழக்கம். அனைவரும் இப்படித்தான் எடுக்கிறார்கள். இதுதவிர TG TPO என்கிற ஒரு டெஸ்ட் எடுத்தால் மட்டுமே துல்லியமாக தைராய்டின் நிலையை அறிய இயலும். பொதுவாக இந்த நிலை அறிந்தால்தான் தைராய்டுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியும்.

தைராய்டில் இரு பிரிவுகள் உண்டு. ஹைப்போ தைராய்டிசம், இன்னொன்று ஹைப்பர் தைராய்டிசம் ஆகும். தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பது தைராய்டு சுரப்பி நீர் அதிகமாக சுரப்பது இதில் எது என்பதை எளிதாக  கண்டுபிடித்தால் தான் நாம் சரியான ஒரு தீர்வை காண இயலும். சரியான மருந்தினை எடுத்துக் கொள்ள இயலும்.

ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள்:

தைராய்டு சுரப்பி நீர் மிகக் குறைவாக சுரப்பதால் வருவது ஹைபோதைராய்டிசம். இதன் அறிகுறிகள்: எந்த வேலையும் செய்யாமல் உடல் களைப்படைவது போன்ற உணர்வு. தலை முடி பிரிவதோடு, தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்.

உடல் எடை அதிகரிக்கும் மாதத்திற்கு மூன்றிலிருந்து நான்கு கிலோ வரை அதிகரிக்கும். இதயத்துடிப்பு அளவு 72-க்கும் குறைவாக இருக்கும். முறையற்ற மாதவிடாய் பிரச்சினைகள் வரலாம். ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பிரச்சனைகள் வரும். எண்ணெய்ப் பசை அற்ற வறண்ட தோல் காணப்படும். மலச்சிக்கல் ஏற்படும். தூக்கம் வந்து கொண்டே இருக்கும்.

ஹைப்பர் தைராய்டிசம் அறிகுறிகள் :

தைராய்டு சுரப்ப நீர் அதிகமாகச்சுரப்பதால் ஏற்படுவது  ஹைபர் தைராய்டிசம். ஹைப்போ தைராய்டின் எதிர்மாறான அறிகுறிகள் காட்டும். 

இதனுடைய சிறப்பு அறிகுறிகள் உடல் இளைத்துக் கொண்டே வரும். என்ன சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருக்கும். இதயத்துடிப்பு அதிகமாகும். பயம், பதட்டம், கோபப்படுதல் போன்ற நிலை அடிக்கடி ஏற்படும். மாதவிடாய் சீரற்று தள்ளிப்போகும். அடிக்கடி மலம் சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். செரிமானக் கோளாறு ஏற்படும். கண் பெரிதாகத் தோற்றமளிக்கும். அதிகப் பசி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நகம் பருத்து காணப்படும்.

எனது அனுபவத்தில் சில மருத்துவ வழிமுறைகள்:

ஐந்து அல்லது ஆறு சீதாப்பழ இலையுடன் இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து அத்துடன் இரண்டு மிளகு, சிறிது சீரகம் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் நீரை அரை டம்ளர் ஆக்கி வடிகட்டி வெறும் வயிற்றில் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு விட்டு சிறிது நாட்கள் இடைவெளி விட்டு விட்டு மறுபடியும் எடுத்துக்கொள்ள தைராய்டு நன்கு குணமாகலாம்.

அதேபோல பச்சைக் கொத்தமல்லித் தழையை  நீர் விட்டு அரைத்துச் சாறு எடுத்து காலை, இரவு உணவுக்கு முன் அரை டம்ளர் எடுத்து வந்தாலும் தைராய்டு நன்கு குணமாகிறது.

உணவு விஷயத்தில் பின்பற்றக்கூடிய விஷயங்கள்:

தைராய்டு உணவு முறைகள்

தேனில் ஊற வைக்கப்பட்ட நெல்லிக்காயை சுமார் இரண்டு மாதங்கள் எடுக்கலாம். கரிசாலை மற்றும் கீழாநெல்லி மூலிகையை எந்த வகையிலாவது நாம் பயன்படுத்தி வர தைராய்டுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும்.

ஒரு டம்ளர் நீரில் காய்ந்த கொத்தமல்லி மற்றும் சிறிது சீரகத்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்த பின்னர் கொதிக்கவைத்து அரை டம்ளர் ஆக்கி வடிகட்டி உண்டபின் இரு வேளை பருக நல்ல ஒரு தீர்வாக அமையும்.

நாட்படாத புத்தம் புதிய காய்கறிகள் மற்றும் கனிகளை சாப்பிட்டு வருவது நல்லது. நீர்ச்சத்து குறையாத அளவு அடிக்கடி நீரைப் பருகி கொண்டே இருக்கலாம். குறைந்தது ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை பருகி வருதல் நலம் பயக்கும்.

அதிக சூடான உணவும் கூடாது. ஐஸ்கிரீம் போன்ற அதிக குளிர்ச்சியான உணவும் கூடாது. வறுத்தது, பொரித்தது போன்றவைகளை எல்லாம் உண்ணாமல் இருப்பது நலம் பயக்கும். வெள்ளரிக்காய், பச்சைப் பயறு போன்றவை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

தேங்காய் எண்ணெய்

தைராய்டு உணவுகள்

கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற அரிசி வகைகளின் சாதம் சாப்பிடுவது நல்லது. உணவிற்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெயை விட தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நலம் பயக்கும். ஏனென்றால் தேங்காய் எண்ணெய் பூஞ்சை, பாக்டீரியாவை எதிர்க்கக் கூடியது.

தினமும் பல் துலக்கிய உடன் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி ஆயில் புல்லிங் செய்து கொள்வது நலம் பயக்கும். துளசி, புதினா போன்ற இலைகளை தேனீர் செய்து குடித்து வரலாம். இல்லாதபட்சத்தில் பச்சையாகவும் அந்த இலைகளை சாப்பிடலாம்.

கீரை வகைகளில் முருங்கைக் கீரை, பசலைக்கீரை எடுப்பது மிக மிக அருமையானது. அதிலும் குறிப்பாக  பசலைக்கீரையில்  தைராய்டினைக் குணப்படுத்தக்கூடிய சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, விட்டமின் கே, அமினோ அமிலங்கள், தாது உப்புகள் குறிப்பாக லைசின், த்ரியோனின் போன்ற விஷயங்கள் இருப்பதாலே பசலைக் கீரையை எடுத்துக் கொள்வது நல்லது. 

அதேமாதிரி காளான் மற்றும் பூண்டில் செலினியம் அதிகமாக இருக்கிறது. இதனால் காளான், பூண்டு போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம். அதே மாதிரி அயோடினை சீராக வைத்திருக்க உருளைக்கிழங்கினை வேக வைத்தும் சாப்பிடலாம்.

தைராய்டு பிரச்சனைக்கு உணவில் சேர்க்கக்கூடிய உப்பினை தேர்ந்தெடுப்பது எப்படி? இதற்கு ஒரு பிடி கடல் உப்பினை எடுத்து, ஒரு பிடி முருங்கைக் கீரையுடன் சேர்த்து ஒரு வானொலியில் வறுக்க வேண்டும். 

உப்பில் உள்ள கெட்ட விஷயங்களை முருங்கைக்கீரை வாங்கிக்கொள்ளும். வாங்கிய பின் அந்த முருங்கை இலையை தூக்கி போட்டுவிட்டு அந்த உப்பினை பொடியாக்கி நாம் பயன்படுத்தி வரும் போது மிகச் சிறந்த அயோடினை கொடுக்கக்கூடிய உப்பாக அமைவதோடு மட்டுமல்லாமல் தைராய்டுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

தைராய்டு வராமல் தடுக்க கூடிய உணவு வகைகள் :

பால், முட்டை, தயிர், தானியவகைகள் ரொம்ப ரொம்ப நலம் பயக்கக்கூடியது. பால் மற்றும் முட்டையில் 16 சதவீதம் அயோடின், 20 சதவீதம் செலினியம் இருப்பதால் சாமானியமாக தைராய்டு வராது. 

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பொதுவாக பேக்கரி உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் வகையறாக்களைத் தவிர்க்க வேண்டியது கண்டிப்பாக நலம் பயக்கும்.

தைராய்டுக்கு உண்டான யோகாசனம் :

புஜங்காசனம் செய்து வர தைராய்டினை பெலப்படுத்தும். நெஞ்சோடு உயர்த்தி பார்ப்பது போன்று இருக்கக்கூடிய அமைப்பில் இருப்பதால் தொண்டைப் பகுதிக்கு சிறப்பு அளிக்கும். ஆகவே இந்த புஜங்காசனத்தை செய்து வருதல் தைராய்டினை வரவிடாமல் நம்மை காப்பாற்றும் வல்லமை உடையது.

மருத்துவ ஜோதிடக் காரணங்கள்: 

தொண்டைப் பகுதியை பொதுவாக விசுத்தி சக்கரம் என்று ஆன்மீக ரீதியாக கூறுவார்கள். அந்த பகுதியில் தான் இந்த தைராய்டு சுரப்பி உள்ளது. பித்தம் மற்றும் கபம் கூடுவதாலும் தைராய்டு பிரச்சனை வரும் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.

நீர் கிரகங்களான மதி என்று சொல்லக்கூடிய சந்திரனும், சுக்கிரனும் இந்த தைராய்டுக்கான காரக கிரகங்கள் ஆகும். ரிஷபம், விருச்சிகம், கடகம், மீனம் மட்டும் பாதிக்கப்பட்ட நீர் ராசிகளுக்கு தைராய்டு பிரச்சனை வரும்.

கால புருஷ தத்துவப்படி இரண்டாமிடத்தில் தைராய்டு பிரச்சனை ஏற்பட்டு குறிப்பாக எட்டாம் இடம் சார்ந்த கர்ப்பப்பை சிறுநீரகப் பிரச்சனை ஏற்படுகிறது.

பாரம்பரிய சித்த மருத்துவ வழிமுறைகள்:

இம்மருத்துவ முறையில் பலகரை, முத்துச்சிப்பி, கௌரி சிந்தாமணி, சிவனார் அமிர்தம், சிவனார் வேம்பு போன்ற மருந்துப் பொருட்கள் கலந்த குப்பிகளுக்கு தைராய்டு குப்பிகள் என்பது பெயர். 

இந்த குப்பியோடு கல்லீரலை பலப்படுத்தி, பித்தநீர் சுரப்பினை சரிசெய்யும் முகத்தே கரிசாலை கற்பம் காலையில் வெறும் வயிற்றில் எடுத்து வர அதிகபட்சம் 50 நாட்களில் தைராய்டுப் பிரச்சினைகள் குணமாகிவிடும். 

வாழ்நாள் முழுக்க எந்த மருந்துமே எடுக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்படும். தைராய்டிலிருந்து நிறைய பேர்கள் விடுதலை பெற்று இருக்கிறார்கள். இது அனுபவ பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் இது குறித்து தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை +91 90803 75278  அலைபேசி எண்ணில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *