உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூப் சேனல்கள்

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூபர்கள்-2022

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூபர்கள் 

2022-ம் ஆண்டு கோடிகளில் சம்பாதித்த டாப் 10 யூ டியூப் சேனல்களை பற்றி இங்கு பார்ப்போம். அவரவர்கள் சேனல் தொடங்கிய நாளில் இருந்து 2022-ம் ஆண்டு வரை சம்பாதித்த வருமானத்தின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த டாப் 10 யூடியூப் சேனல்களில் இரண்டு இந்திய சேனல்கள் இருக்கின்றன. அண்ணன் தம்பி நடத்தும் சேனல்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு 7 வயது சிறுமி நடத்தும் சேனலும் இடம் பெற்றுள்ளது. 

10. ரசல் பிராண்ட்: கல்வி சேனல் 

ரசல் பிராண்ட் பிரிட்டிஷ் காமெடி நடிகர். 1975-ல் பிறந்து இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடைகளில் நகைசுவை நிகழ்ச்சிகளை நடத்துவதில் பிரபலமானவர். 2007-ம் ஆண்டு இவர் தன்னுடைய பெயரில் சேனலை தொடங்கினார். பிரபலங்களை பேட்டி எடுத்து போடுவதுதான் இவரது சேனலின் நோக்கம்.  

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூப் சேனல்கள் - ரசல் பிராண்ட்
ரசல் பிராண்ட்

இதுவரை 1960 விடீயோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். 60.6 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். 90 கோடி பார்வைகள் பெற்றுள்ள இந்த சேனலின் 2022-ம் ஆண்டு வரை வருமானம் 81 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ.648 கோடி வருமானம் வந்துள்ளது. அதிகம் சம்பாதித்த யூடியூப் சேனல்களில் 10-வது இடத்தில் இருக்கிறார். 

09. எம்மா சாம்பேர்லியன்: பொழுதுபோக்கு சேனல் 

எம்மா சாம்பேர்லைன் என்பவர் அமெரிக்க இன்டர்நெட் பர்சனாலிட்டி. 2001-ம் ஆண்டு பிறந்தவர். யூ டியூப் சேனல் மற்றும் பாட்காஸ்ட் நடத்தி வருகிறார். இவர் தனது பெயரில் 2016-ம் ஆண்டு யூ டியூப் சேனலை தொடங்கினார். சுற்றுலா மற்றும் சமையல் வீடியோக்களை அப்லோட் செய்கிறார். 

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூப் சேனல்கள் - எம்மா சாம்பெர்லியன்
எம்மா சாம்பேர்லியன்

மாதம் ஒரு வீடியோ என்ற கணக்கில் இதுவரை 287 விடீயோக்களை வெளியிட்டுள்ளார். ஒரு கோடியே 19 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் இருக்கிறார்கள். இவரது சேனல் 156 கோடி வியூஸ் பெற்றுள்ளது. இந்த சேனல் மூலம் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை இவர் பெற்ற வருமானம் 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள். நமது இந்திய ரூபாயில் 720 கோடி. 2022-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த யூடியூப் சேனல்கள் வரிசையில் 9-வது இடத்தில் இருக்கிறார். 

08. கிம் லாசியா: மியூசிக் சேனல் 

கிம் லாசியா 1997-ல் பிறந்தவர். இவர் மெக்சிகோ நாட்டின் இணைய பிரபலம். இசைப் பாடல்களை உருவாக்குவதில் வல்லவர். 2019-ம் ஆண்டில் கிம் லாசியா என்ற தனது பெயரில் ஒரு யூடியூப் சேனலை ஆரமிப்பித்தார். மியூசிக் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். 

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூப் சேனல்கள் - கிம் லாசியா
கிம் லாசியா

மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விடியோவை அப்லோட் செய்கிறார். இவரது சேனலில் மொத்தம் இருப்பதே 14 வீடியோக்கள்தான். எண்ணிக்கை முக்கியமல்ல தரமான கன்டென்ட் தான் முக்கியம் என்பதற்கு இவரது சேனல் நல்ல உதாரணம். இவகிருக்கு ஒரு கோடியே 42 லட்சம் சப்ஸ்கிரைபேர் இருக்கிறார்கள். இவரது வீடியோக்கள் 127 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. 2022-ம் ஆண்டு இவரது சேனல் இவருக்கு பெற்றுத்தந்த வருமானம் 1,080 கோடி. 2022-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த யூடியூப் சேனல்களில் 8-வது இடத்தில் இருக்கிறார். 

07. ஜெஃப்ரீ ஸ்டார்: ஹவ் டு சேனல் 

ஜெஃப்ரீ ஸ்டார் ஒரு அமெரிக்கர். 1985-ல் பிறந்தவர். யூட்டுபேர், மேக் அப் ஆர்ட்டிஸ்ட், பாடகர், பாடலாசிரியர் என்று பல திறமைகளை கொண்டவர். 2006-ம் ஆண்டு யூடியூப் சேனல்களில் மிகப் பிரபலமான கேட்டகரியான ‘ஹவ் டு’ சேனலை ஆரம்பித்தார். இவர் பெரும்பாலும் மேக்கப் சம்பந்தமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூப் சேனல்கள் - ஜெஃப்ரீ ஸ்டார்
ஜெஃப்ரீ ஸ்டார்

மாதத்திற்கு ஒரு வீடியோ என்ற கணக்கில் இவர் இதுவரை இவரது சேனலில் 433 வீடியோக்களை அப்லோட் செய்திருக்கிறார். இவருக்கு ஒரு கோடியே 59 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். இவரது வீடியோக்கள் மொத்தம் 258 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. 

2022-ம் ஆண்டு இவரது சேனல் 1,680 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 2022-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த யூடியூப் சேனல்களில் 7-வது இடத்தில் இருக்கிறார். 

06. லோகன் பால்: காமெடி என்டேர்டைன்மெண்ட் சேனல் 

லோகன் அலெசாண்டர் பால் எனப்து இவரது முழுப்பெயர். இவர் 1995-ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். மல்யுத்த வீரர், குத்துசண்டை வீரர், நடிகர், பாட் காஸ்டர், யூடியூபர் என்று பன்முகங்கள் கொண்டவர். இவர் தனது பெயரில் 2015-ம் ஆண்டு ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார். 

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூப் சேனல்கள் - லோகன் பால்
லோகன் பால்

இரண்டு மாதங்களுக்கு ஒரு வீடியோ என்ற கணக்கில் இதுவரை 713 விடீயோக்களை அப்லோட் செய்துள்ளார். இவருக்கு இரண்டு கோடியே 36 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். இவரது வீடியோக்கள் மொத்தமாக 593 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. 2022-ம் ஆண்டில் இவரது சேனல் சம்பாதித்த தொகை 1,960 கோடி ரூபாய். 2022-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த யூடியூப் சேனல்களில் 6-வது இடத்தில் இருக்கிறார். 

05. லைக் நாஸ்தியா: குழந்தைகளுக்கான சேனல் 

அனஸ்தேசியா செர்ஜியேவ்னா ராட்ஜின்ஸ்காயா (Anastasia Sergeyevna Radzinskaya) என்பதுதான் அந்தக் குழந்தையின் பெயர். 2014-ம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தவர். 7 வயதே நிரம்பிய இந்த குட்டிப் பெண் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் யூடியூபர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். 2016-ம் ஆண்டு தனது இரண்டாவது வயதில் இந்த சேனலை ஆரம்பித்தார். லைக் நாஸ்தியா என்று அதற்கு பெயர் வைத்தார். 

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூப் சேனல்கள் - லைக் நாஸ்தியா
லைக் நாஸ்தியா

வாரத்திற்கு இரண்டு வீடியோக்கள் என்ற கணக்கில் இதுவரை 733 வீடியோக்களை அப்லோட் செய்துள்ளார். இவருக்கு 10 கோடியே 20 லட்சம் சப்ஸ்கிரைப்பற்கள் இருக்கிறார்கள். இவரது வீடியோக்கள் 8 ஆயிரத்து 591 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. 2022-ம் ஆண்டில் இவரது சேனல் சம்பாதித்த மொத்த வருமானம் வெறும் 2,080 கோடி ரூபாய்கள் மட்டுமே. 2022-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த யூடியூப் சேனல்களில் 5-வது இடத்தில் இருக்கிறார். 

04. ஜேக் பால்: மக்கள் சேனல் 

ஜேக் ஜோசப் பால் என்பதுதான் இவரின் முழுப் பெயர். 1997-ல் அமெரிக்காவில் பிறந்தவர். நாம் ஏற்கனவே பார்த்த லோகன் பாலின் தம்பிதான் இவர். அண்ணன் தம்பி இருவருமே டாப் 10 யூடியூபேர்கள்தான். ஐவரும் அண்ணனைப் போலவே பன்முகங்கள் கொண்டவர். குத்துசண்டை வீரர், ராப் பாடகர், நடிகர், யூடியூபர் என்று பல தளங்களில் பயணிப்பவர். 2013-ம் ஆண்டு ஜேக் பால் என்ற பெயரில் யூடியூப் சேனலை ஆரம்பித்தார். குத்துசண்டை மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார். 

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூப் சேனல்கள் - ஜேக் பால்
ஜேக் பால்

வாரத்திற்கு ஒரு வீடியோ என்ற கணக்கில் இதுவரை 946 விடீயோக்களை அப்லோட் செய்துள்ளார். இவருக்கு இரண்டு கோடியே 4 லட்சம் சுப்ஸ்கிரைப்பற்கள் இருக்கிறார்கள். இவரது விடியோக்கள் 725 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.  

2022-ம் ஆண்டு இவரது சேனல் சம்பாதித்து கொடுத்த மொத்த வருமானம் 2,480 கோடி ரூபாய். 2022-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த யூடியூப் சேனல்களில் 4-வது இடத்தில் இருக்கிறார். 

03. செட் இந்தியா: பொழுதுபோக்கு சேனல்

சோனி என்டேர்டைன்மெண்ட் டெலிவிஷன் என்பதன் சுருக்கமே செட் என்பதாகும். இது ஜப்பானிய சோனி நிர்வாகத்தின் இந்திய நிறுவனம். இந்த நிறுவனம் 1995-ல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. சோனி இந்தி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறது. அந்த யூடியூப் சேனலின் பெயர்தான் செட் இந்தியா என்பது. 2006-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.  

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூப் சேனல்கள் - செட் இந்தியா
செட் இந்தியா

செட் இந்தியா நிறுவனம் மொத்தம் 16 சேட்டிலைட் சேனல்களை வைத்துள்ளது. இவற்றில் வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றை அப்லோட் செய்து வருகிறது. 

இந்த பதிவை காணொளியாக பார்க்க…

ஒருநாளைக்கு சராசரியாக 80 வீடியோக்களை யூடியூப் சேனலில் அப்லோட் செய்கிறது. இதுவரை 99 ஆயிரத்து 750 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளது. இந்த சேனலுக்கு 14 கோடியே 70 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். இதன் வீடியோக்கள் 13 ஆயிரத்து 487 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. பொழுதுபோக்கு சேனலில் உலகின் முதலிடத்தில் இருக்கிறது. 

இந்த சேனலின் மொத்த வருமானம் 2,880 கோடி ரூபாய். 2022-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த யூடியூப் சேனல்களில் 3-வது இடத்தில் இருக்கிறது. 

02. டி சீரிஸ்: மியூசிக் சேனல் 

சூப்பர் கேசட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தி திரைப்படப் பாடல்களை டி-சீரீஸ் என்ற பெயரில் வெளியிட்டு வந்தது. 1983-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் டி-சீரீஸ் யூடியூப் சேனலை 2006-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், 2010-ம் ஆண்டுதான் முதல் வீடியோவை அப்லோட் செய்தது. அதுவரை அந்த சேனலில் எந்தவொரு செயலும் நடைபெறவில்லை. இந்தி திரைப்படப் பாடல்கள், டிரைலர்கள் இந்த சேனலில் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. 

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூப் சேனல்கள் - டி சீரிஸ்
டி சீரிஸ்

ஒரு நாளைக்கு சராசரியாக 5 முதல் 10 வீடியோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. இதுவரை 18 ஆயிரத்து 200 விடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. 23 கோடியே 10 லட்சம் சப்ஸ்கிரைப்பர்களை கொண்டிருக்கும் உலகின் முதல் சேனல் இதுதான். வேறு எந்த சேனலும் 20 கோடி சப்ஸ்கிரைப்பர்களைக் கூட தொடவில்லை. இந்த சேனலின் விடியோக்கள் 20 ஆயிரத்து 900 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. மியூசிக் சேனலில் உலகில் முதல் இடத்தில் இருக்கிறது. 

இந்த சேனலின் மொத்த வருமானம் 3,600 கோடி ரூபாய். 2022-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த யூடியூப் சேனல்களில் 2-வது இடத்தில் இருக்கிறது. 

01. கோகோமெலான்: நர்சரி ரைம்ஸ் சேனல் 

கோகோமேலான் என்ற யூடியூப் சேனல் அமெரிக்க நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 3டி அனிமேசனால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய நர்சரி ரைம்ஸ் மற்றும் இவர்களால் சொந்தமாக இயற்றப்பட்ட ரைம்ஸ் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. குழந்தைகள் வாழ்வில் தினசரி பயன்படும் பொருட்களை அறிமுகப்படுத்தும் விதமாக இதன் வீடியோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் கோடி கோடியாக சம்பாதித்த டாப் 10 யூடியூப் சேனல்கள் - கோகோமெலன்
கோகோமெலன்

இரண்டு நாட்களுக்கு ஒரு வீடியோ என்ற கணக்கில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. இதுவரை 823 வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் 14 ஆயிரத்து 546 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. இந்த சேனலுக்கு 14 கோடியே 9 லட்சம் சப்ஸ்கிரைப்பற்கள் உள்ளனர். குழந்தைகளுக்கான சேனலில் உலகில் முதலிடத்தில் இருக்கிறது. அதிக பார்வைகளை பெறுவதில் டி-சீரிஸ் க்கு அடுத்ததாக உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

இந்த சேனலின் மொத்த வருமானம் 6,320 கோடி ரூபாய். 2022-ம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய சேனல்களில் முதலிடத்தில் இருக்கிறது. 

முதல் மூன்று இடங்களில் இருக்கும் சேனல்கள் நிறுவனங்கள் நடத்துவது. அவர்களுக்கு கன்டென்ட் என்பது அவர்கள் துறை சார்ந்த நிறுவனங்கள் மூலமே கிடைத்து விடுகிறது. அவர்கள் யூடியூப் சேனலுக்கு என்று தனியாக மெனெக்கிடுவதில்லை. ஆனால் மற்ற 7 பேரும் யூடியூப்புக்காகவே உழைப்பவர்கள். அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்ற தகுந்தவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *