நேரம்

உங்கள் நேரம் எப்படி செலவாகிறது? அதுதான் வெற்றி ரகசியம்!

காலம் பொன் போன்றது. இது பிரபலமான பழமொழி. உண்மையில், பொன் பொருள் இவற்றிலிருந்து நேரம் ரொம்பவே வித்தியாசமானது. எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக பணம், உணவு, எரிபொருள் போன்றவற்றைச் சேமிக்கிறோம். ஆனால், நேரத்தை அப்படிச் சேமிக்க முடியாது.

நேரத்தைப் பயன்படுத்தாமல் சேமிக்க முயன்றால் அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நீங்கள் ஒரு நாளில் எட்டு மணிநேரம் தூங்கி, மீதி நேரத்தை ஒன்றும் செய்யாமல் சேமிக்க முடியுமா? அப்படிச் செய்தால் அந்நாளின் கடைசியில், நீங்கள் பயன்படுத்தாத நேரம் வீணாகிப் போய்விட்டிருக்கும்.

கிடைக்கும் சக்தி

நேரத்தை வேகமாய் பாய்ந்தோடும் ஒரு பெரிய நதிக்கு ஒப்பிடலாம். அது எப்பொழுதும் முன்னோக்கியே பாய்ந்து செல்கிறது. அதன் ஓட்டத்தை உங்களால் தடுக்கவும் முடியாது, அதன் எல்லா துளிகளையும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியாது. நூற்றாண்டுகளுக்கு முன்னால், ஆற்றங்கரைகளில் நீர் ஆலைகளை மக்கள் உருவாக்கினார்கள். இவற்றைக் கொண்டு, பாய்ந்தோடும் நீரிலிருந்து கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்தினார்கள்.

அதைக் கொண்டு மாவரைக்கும் கற்கள், மரம் அறுக்கும் ஆலைகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், மிகப்பெரிய சம்மட்டிகள் போன்றவற்றை இயக்கினார்கள். அதேவிதமாக, நேரத்தையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

கூர்மையான வாள்

சேமிப்பதற்கு அல்ல, நல்ல வேலைகளைச் செய்ய பயன்படுத்துவதற்காக. இப்படி நல்லவிதமாக நேரத்தை பயன்படுத்த வேண்டுமென்றால், நேரத்தைத் திருடும் முக்கியமான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

காலம்‘ என்ற கருத்துக் குறித்து, ஸ்டீஃபன் ஹாக்கிங் என்ற தலைசிறந்த விஞ்ஞானி ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல் எழுதியுள்ளார். ‘கால’த்தைப் பற்றிய விஞ்ஞானப் பூர்வமான பல கோட்பாடுகளை விதம் விதமான பரிமாணங்களில் ஆராய்கிறார். இதைப் படிக்கும் போது எனக்குக் திருக்குறள் நினைவுக்கு வந்தது.

‘நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாளது
உணர் வார்ப் பெறின்.’

‘நிலையாமை’ என்பது பெரிய கூர்மையான வாள். ஆனால் அது கண்ணுக்குத் தெரியவில்லை. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் வாளின் கண் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. அறுபடுவதும் தெரியவில்லை. உயிர் இல்லாமல் போகும் போதுதான் கண்ணுக்குத் தெரியாத வாளில், உடம்பு தொடர்ந்து அறுபட்டுக் கொண்டு வந்திருக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது.

இந்த வாளின் பெயர் என்ன? ‘காலம்’ என்கிறார் வள்ளுவர். ‘காலம்’ என்பது நாமே நம்முடைய சௌகரியத்துக்காக உண்டாக்கிக்கொண்ட ஒரு தவிர்க்க முடியாத மானசீக ஏற்பாடு என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

கால நேரம்

“வெளி’ (space)யுடன் சேர்ந்து இது நான்காவது பரிமாணம் (fourth dimension) ஆகின்றது” என்றார் ஐன்ஸ்டீன். பரிமேலழகர் கூற்று, ‘காலம்’ என்ற மானசீகத்தை எவ்வளவு துல்லியமாகப் புலப்படுத்துகின்றது பாருங்கள்!

‘நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை யுடைத்திவ் வுலகு’


‘நேற்றிருந்தான், இன்று அவன் இல்லை என்று சொல்லும் நிலையாமையை மிகுதியாக உடையது இவ்வுலகம்’ என்பது இதன் பொருள்.

வாழ்க்கையின் மீது ஓர் எதிர் மறை உணர்வை ஏற்படுத்துவதற்காக வள்ளுவர் இக்குறளை எழுதவில்லை. ஆனால் ‘நிலையாமை’யை உணர்ந்து, மனிதன் ஆக்கப்பூர்வமாகச் செயல் படவேண்டும் என்பதைக் கூறத்தான் வள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார்.

‘பிறப்பு எதேச்சை, இறப்பு உறுதி’ என்பார்கள், இதனால், வாழும் காலத்துக்குள், நம் ஆற்றலின் எல்லையை முழுதுறும் உணர்வதற்கு நாம் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.ஏன்?
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடிஅலையும் அறிவிலிகாள்! – பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

உலகில் பிறந்த அனைவரும் சமமானவர்களே என்பதைப் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையான்’ என்ற குறள் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

உங்கள் நேரம் எப்படி செலவாகிறது?

“காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது”,
“காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது”,
“காலம் பொன் போன்றது”

போன்ற பழமொழிகள் நாம் அறிந்ததே. காலத்தின் அருமையை உணர்ந்தவர்கள் சாதனையாளர்கள். காலம் நம் அனைவருக்கும் பொது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவர்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது.

கார்ல் சான்ட்பர்க்: “நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உரிமை உங்களுக்குத் தான் கொடுக்கப்படுகிறது. உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவர்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீர்கள்.” என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் கார்ல் சான்ட்பர்க்.

அடுத்தவருக்காக இழக்காதீர்கள்

உங்கள் நேரம் உங்களுக்காகவே. அதை அடுத்தவருக்காக இழக்காதீர்கள்.
உங்கள் நேரத்தை உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்
எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப்போட வேண்டாம். நாளை, நாளை என்று தள்ளிப்போடும் பழக்கம் நல்லதல்ல.

வாழ்க்கை என்ற கடிகாரத்திற்கு ஒரு முறை தான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கிரமே நின்று போகுமா அல்லது அதிக காலம் கழித்து நின்றுபோகுமா என்பதை யாரும் கூற இயலாது. தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உரியது.

மன உறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள். அன்பு செலுத்துங்கள்.
உழைத்து கொண்டிருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிடுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும். கால விரயத்தைத் தடுக்கலாம். காலத்தைச் சரியாகப் பயன்படுத்த தெரிந்தால் போதும், நீங்கள் வெற்றியின் பாதையில் நேராகச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published.