வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது.
குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. குரு தனது 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.
ஜோதிடத்தைப் பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வரும் போது தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன்கள் தரப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு.
அந்த வகையில் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான ஆண்டு கிரகம், குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2-ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3-ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.
கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13-ம் தேதி பெயர்ச்சி ஆவார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20-ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.
மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் குரு பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது கடக ராசிக்கு ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீடாக அமைவதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடியதாக இந்த குரு பெயர்ச்சி அமையப்போகிறது.
ஏழாம் பார்வை
குரு, எட்டாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக விரய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தன ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக சுகஸ்தானத்தையும் பார்வையிடப்போகிறார்.
இந்த குருப்பெயர்ச்சியானது கடக ராசியைச் சார்ந்தவர்களுக்கு சொத்துக்கள் வாங்க சுப விரயத்தையும், தன நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் அமைத்துத் தரும் வருடமாக அமையப்போகிறது.
இந்த குருப்பெயர்ச்சியானது கடக ராசியைச் சார்ந்தவர்களுக்கு சொத்துக்கள் வாங்க சுப விரயத்தையும், தன நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் அமைத்துத் தரும் வருடமாக அமையப்போகிறது.
குடும்பம்:
குரு பெயர்ச்சி உங்களுக்கு அதிக பொறுப்புகளை அளிக்கும். ஓய்விற்கும் குடும்பத்தை கவனிக்கவும் நேரம் ஒதுக்க இயலாத நிலை இருக்கும். இதனால் நீங்கள் குடும்ப உறுப்பினர்களை திருப்திப்படுத்த இயலாது. பணிகள் காரணமாக வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கும் என்பதால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம்.
அதே சமயம் கடுமையான பணிகள் தரும் அசதி காரணமாக நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளவும் நேரலாம். எனவே பொறுமையாகச் செயல்படுங்கள். தேவையற்ற வார்த்தைகளை பேசாதீர்கள்.
கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். பரஸ்பரம் ஒருவரால் ஒருவர் ஈர்க்கப்படுவர். மன ஒற்றுமை காரணமாக இருவருக்கும் இடையே அன்னியோன்யம் கூடும்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடலுக்கு வழி வகுக்கும். உணர்ச்சி வசப்படாதீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயலுங்கள். ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பது உணவு ஆகும். முறையற்ற உணவு காரணமாக அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உணவில் கவனம் தேவை.
நிதி நிலை:
நிதிநிலை நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் ஏற்றமானதாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும், கடின உழைப்பின் மூலம் எழுத்துத் துறை, நடிப்புத் துறை மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கணிசமான வருமானம் காண்பார்கள். உங்களில் சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.
பணியிடச் சூழல் ஆதரவு தரும் வகையில் இருக்க வாய்ப்பில்லை. சக பணியாளர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவை பராமரிக்க இயலும். பணி நிமித்தமாக நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் ஏற்றம் காண்பார்கள். சிலர் கடன் வாங்கி சுய தொழில் ஆரம்பிக்கலாம். புதிய தொழில் முதலீடுகள் லாபம் அளிக்கும். வாடிக்கையாளர்கள் ஆதரவு கிடைக்கப் பெற்று தொழிலில் முன்னேற்றம் கிட்டும்.
கல்வி:
பள்ளி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று படிப்பில் வெற்றி காண்பார்கள். உயர் கல்வி மாணவர்கள் கவனம் செலுத்தி படிப்பதன் மூலம் வெற்றி இலக்கை எட்ட இயலும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் திகழ்வார்கள். வெளி நாடு சென்று படிக்க முயற்சி மேற்கொண்டால் நீங்கள் அதில் வெற்றி காண இயலும்.

ஆசிரியர் பற்றி…
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர், மீனாட்சி மைந்தன், திருவருட்செல்வர், நகைச்சுவை நாவரசு, எழுத்தாளர், கவிஞர், ஆன்மிக சொற்பொழிவாளர், குடமுழுக்கு திருவிழாக்களின் நேர்முக வருணனையாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், 5000 ஆயிரம் பட்டிமன்றங்களுக்கு மேல் நடுவராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். வெள்ளி விழா கண்ட மதுரை இலக்கியப்பேரவையின் தலைவர்.