லட்சுமி குபேர பூஜை

லட்சுமி குபேர பூஜை: அளவில்லா செல்வம் பெறுவது எப்படி?

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று சொல்வது உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார். வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது.
குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிப்பவர் குபேரன். எனவே தான் குபேரன், லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார். குபேரன் அருளாட்சி நடத்த அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான்.

மேலும் படிக்க லட்சுமி குபேர பூஜை: அளவில்லா செல்வம் பெறுவது எப்படி?