Categories: தகவல்

பணவீக்கம் மற்றும் பணவாட்டம் என்றால் என்ன?

Published by
எஸ்.பி.செந்தில் குமார்
Share

பணவீக்கம் மற்றும் பணவாட்டம் என்றால் என்ன?

நடுத்தர மக்களை மட்டுமல்ல, நாட்டையும் ஆட்டிப்படைக்கும் ஒரு சொல் என்றால் அது ‘பணவீக்கம்’ என்பதுதான். ஆங்கிலத்தில் இதை இன்ஃப்ளேஷன் (inflation) என்கிறார்கள். 

பணவீக்கம் என்றால் என்னவென்றுதானே கேட்கிறீர்கள். சென்ற ஆண்டு இதே நாளில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 37 ஆயிரம், இன்று அதே தங்கம் பவுன் 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. சென்ற ஆண்டு இதே நாளில் நீங்கள் வாங்கிய கேஸ் சிலிண்டரின் விலை 940. இன்று அதே கேஸ் சிலிண்டர் 1118. 

இந்த விலைப்பட்டியல் படி பார்த்தால் தங்கத்தின் பணவீக்கம் ஓர் ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய். கேஸ் சிலிண்டரின் பணவீக்கம் 178 ரூபாய். இப்படி ஒரே பொருளுக்கு நாம் கொடுக்கும் அதிகப்படியான விலையே பணவீக்கம் எனப்படுகிறது. இந்தப் பணவீக்கம் தங்கத்தோடோ அல்லது கேஸ் சிலிண்டரோடோ முடிவதில்லை. 

நாம் வாங்கும் பலசரக்கு பொருட்களில் இருந்து பால், வீட்டு வாடகை போன்ற எல்லாவற்றிலுமே இந்த பணவீக்கத்தின் தாக்கம் இருக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த பணவீக்கத்தின் வீரியம் நம்மை தாக்கிக்கொண்டுதான் இருக்கிறது. 

விலைவாசி

வளரும் பொருளாதாரத்தில் உற்பத்தியைவிட தேவைகள் அதிகம் இருக்கும்போது இப்படி விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. இதுபோக பெட்ரோல் டீசல் போன்ற முக்கிய மூலப்பொருள்களின் விலை உயரும்போதும் அதன் தாக்கம் எல்லா இடங்களிலும் உண்டாகிறது. 

அதிலும் நாம் பெட்ரோல் மூலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் சர்வதேச சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப மற்ற பொருட்களின் விலையும் உயருகிறது. 

பணவாட்டம்

பணவீக்கத்திற்கு எதிராக ஒரு சொல் இருக்கிறது. அதன் பெயர் ‘பணவாட்டம்’. ஆங்கிலத்தில் டீஃப்ளேஷன் (deflation) என்பார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் பணவாட்டம் உண்டு. அங்கு பொருட்களின் உற்பத்தி அதிகம். தேவையோ குறைவு. 

தேவை குறைவாக இருப்பதால் பொருட்களின் விலை குறைந்து கொண்டே போகும். ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு பணவீக்கம் நல்லதா? அல்லது பணவாட்டம் நல்லதா? என்று கேட்டால் மிதமான பணவீக்கம்தான் நல்லது. அதுதான் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது.

நமது நாட்டில் கூட கம்ப்யூட்டர் விலை, மொபைல் விலை போன்ற சில பொருட்களின் விலை குறைந்து கொண்டேதான் வருகிறது. சென்ற ஆண்டு நீங்கள் வாங்கிய மொபைலை விட இந்த ஆண்டு அதை விட அதிகமான தொழில்நுட்பம் கொண்ட மொபைல் குறைந்த விலைக்கோ அல்லது அதே விலைக்கோ கிடைக்கிறது. இதனைத்தான் பணவாட்டம் என்கிறோம். 

ஆனால், பெருவாரியான பொருட்கள் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கின்றன. சில பொருள்களின் விலைகள் மட்டும் ஏறாமல் அல்லது இறங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் பணவீக்கத்தின் அளவு 6 சதவீதம். 

பணவீக்கம்

சராசரியாக பொருள்கள் மற்றும் சேவைகளின்  விலை ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற அளவில் உயர்கிறது. கடந்த ஆண்டு நீங்கள் ஒரு பொருளை 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியிருப்பீர்கள். இந்த ஆண்டு அதே பொருள் 10 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கும். இதுதான் பணவீக்கம் ஏற்படுத்தும் பாதிப்பு. 

இந்த பணவீக்கத்தை விட உங்களின் சம்பளம் ஒவ்வோர் ஆண்டும் உயர வேண்டும். குறைந்த பட்சம் பணவீக்கத்துக்கு சமமாக உயர வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கைத்தரம் குறையாமல் இருக்கும். 

அதேபோல் தொழில் செய்பவர்களின் லாபமும் பணவீக்கத்தைவிட ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக உயர வேண்டும். அப்போதுதான் அவர்கள் உயர்கிறார்கள் என்று அர்த்தம். 

முதலீடு

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டே எதிர்கால தேவைகளுக்கான முதலீடுகளை செய்ய வேண்டும். அந்த முதலீடு பணவீக்கத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும். 

நமது இந்தியர்கள் பெரும்பாலும் தங்கம் மற்றும் நிரந்தர வைப்பு நிதிகளில் முதலீடு செய்கிறார்கள். இந்த இரண்டு முதலீடுகளும் பணவீக்கத்தைவிட மிகக் குறைந்த அளவே வருமானத்தை தரக்கூடியவை. 

பங்குசார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்தான் பணவீக்கத்தைப்போல் இரட்டிப்பு வருமானத்தைத் தரவல்லவை. எனவே நீண்டகால முதலீட்டுக்கு பணவீக்கத்தை மிஞ்சி வருமானம் தரக்கூடிய முதலீடுகளில் முதலீடு செய்வதே உத்தமம். 

Recent Posts

கிளியோபாட்ரா-55 தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு

தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More

2 years ago

கிளியோபாட்ரா 54 கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு!

கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More

2 years ago

கிளியோபாட்ரா 53 ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை

ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More

2 years ago

கிளியோபாட்ரா-52 புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை

புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More

2 years ago

51 ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்..!

ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More

2 years ago

கிளியோபாட்ரா-50 ஆண்டனியின் பரிதாப முடிவு!

கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More

2 years ago