ஆன்மிகம்

கும்ப ராசிக்கு 2022 இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?

Published by
முனைவர் சண்முக திருக்குமரன்
Share

கும்ப ராசிக்காரர்கள் குடத்தில் இட்ட விளக்கை போல பிரகாசிப்பார்கள். சரியான தூண்டுகோல் இருந்தால்தான் இவர்கள் வாழ்வில் முன்னேற முடியும்.

இவர்கள் பல ரகசியங்களை மனதில் வைத்திருப்பார்கள். ஆனால் எதையும் வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு உலக விஷயங்களில் அதிக ஈடுபாடு உண்டு.

கும்ப ராசிக்காரர்கள் உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இருக்கும் இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் அளவுக்கு திறமை கொண்டவர்கள். 

தைரியசாலிகள்

இவர்கள் மிக பெரிய தைரியசாலிகள். இவர்கள் அன்பான, சாந்தமான, தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிடித்தவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் இவர்கள் பிடிக்காதவர்களை குப்பையாக கூட மதிக்க மாட்டார்கள்.

கும்ப ராசிக்காரர்கள் பேச்சுக்கு எந்த இடத்திலும் மதிப்பும், மரியாதையும் இருக்கும். உண்மையே பேச வேண்டும் என நினைப்பார்கள். உடன் பழகுபவர்களின் மனதை அறிந்து செயல்படுபவர்கள்.

ஒரு காரியத்தை இவர்களிடம் ஒப்படைத்தால் அது முடிந்து விடும் என நினைத்து கொள்ளலாம். கண்ணும் கருத்துமாக இருந்து அந்த வேலையை செய்து முடிப்பார்கள். யாருடைய அந்தரங்க பிரச்சனையிலும் தேவையின்றி மூக்கை நுழைக்க மாட்டார்கள்.

வருட கிரகம்

வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும்.   குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கப்படும் பெருமை பெற்றது.

குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. குரு தனது 2, 5, 7, 9, 11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.

ஜோதிடத்தைப் பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வரும் போது தன் ராசிக்கு அந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன்கள் தரப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் கட்டுவதுண்டு.

அந்த வகையில் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான ஆண்டு கிரகம், குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆனார்.

கும்ப ராசிக்கு முறையாக குரு 2021 நவம்பர் 13ம் தேதி பெயர்ச்சி ஆனார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ்ந்தது.

ஜென்ம குரு

குரு பகவான் ஜென்ம குருவாக கும்பத்திற்கு அமர்கிறார். இதைத் தவிர எல்லாமே உங்களுக்கு சிறப்பானதாக தான் இருக்கிறது. குருவின் பார்வையால் யோகம் அடையக்கூடிய ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று.

ஜென்ம குருவாக இருந்தாலும், அவரின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் குழந்தை பேறு உண்டாகும்.

Related Post

திருமண தடை சந்தித்து வந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். இதுவரை இருந்த சொத்து தொடர்பான வில்லங்கங்கள் நீங்கும். குருவின் பார்வையால் உங்களுக்குரிய பாக்கியம், யோகத்தை அனுபவிக்க எந்த ஒரு தடையோ அல்லது பிரச்சினையோ இருக்காது.

விரய சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கும்ப ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியால் ஆறுதல் தருவதாகவும், அதைத் தாண்டி அதிர்ஷ்டம் தருவதாகவும் இருக்கும்.

குடும்பம்:

குடும்பத்தில் குதூகலம் இருக்கும். குல தெய்வ வழிபாடும், தெய்வ அனுக்கிரகமும் கிட்டும். குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன்  சுமுகமான உறவு காணப்படும்.

குழந்தைப் பேறு வேண்டி தவம் கிடந்தவர்கள் தங்கள் எண்ணம் ஈடேறக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவார்கள். நண்பர்கள்  உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை இருக்கும்.

ஆரோக்கியம்:

இந்தப் பெயர்ச்சிக் காலக் கட்டத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற மேலும் நேரம் தவறிய உணவு காரணமாக வயிற்றுப்புண் மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

சரியான உணவு மற்றும்  முறையான ஒய்வு மற்றும் சிறிய அளவிலான உடற்பயிற்சி மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறந்த முறையில் காத்துக் கொள்ளலாம்.

காதல் / திருமணம்:

கும்ப ராசி இளம் வயது அன்பர்களுக்கு தங்கள் காதல் முயற்சிகள் கை கூடும். நீண்ட காலமாக திருமண முயற்சி கை கூடாதவர்களுக்கு இந்தக் காலக் கட்டத்தில் திருமணம் நடை பெறும் கணவன் மனைவி உறவு சுமுகமாக நல்லுறவாக இருக்கும். தம்பதிகள்  வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் ஒற்றுமை கூடி மகிழ்ச்சி அடைவார்கள்.

நிதி நிலை:

உங்கள் பொருளாதாரம் நீங்கள் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை நாடி வரும். பூர்வீகச் சொத்துக்கள் வகையில் ஆதாயம் கிடைக்கப் பெறும். அனைத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.

ஊக வணிகங்களான பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் நல்ல தன லாபங்களை எதிர்பார்க்கலாம். வரவுக்கேற்ற செலவுகளையும் நீங்கள் சந்திக்க நேரும். 

வேலை / தொழில்:

பணியிடச் சூழல் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் அதிக பணிகளை மேற்கொள்ள நேரும். தனியார் துறை அலுவலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு பெயரும் புகழும் பெறுவார்கள் சக ஊழியர்களின் ஆதரவும், நல்லிணக்கமும் கிடைக்கும். சுயதொழிலில் ஏற்றம் ஏற்படும். அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். கூட்டுத் தொழில் செய்பவர்களின் தன நிலை ஏற்றம் மிகுந்து காணப்படும்.

கல்வி:

பள்ளி மாணவர்களுக்கு கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் நாட்டம் செல்லும். அனைத்துத் துறை மாணவர்களும்  தேர்வுகளை சிறப்பான முறையில் எழுதி வெற்றி காண்பார்கள்.

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

குலதெய்வக் கோவிலில் அன்னதானம் செய்வது சிறப்பு. வியாழக்கிழமைகளில் பசுவிற்கு வாழைப்பழம் உண்ணக் கொடுக்கலாம். கோவில் அர்ச்சகர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம். கவனம் தேவை.

Published by
முனைவர் சண்முக திருக்குமரன்

Recent Posts

கிளியோபாட்ரா-55 தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு

தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More

2 years ago

கிளியோபாட்ரா 54 கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு!

கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More

2 years ago

கிளியோபாட்ரா 53 ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை

ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More

2 years ago

கிளியோபாட்ரா-52 புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை

புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More

2 years ago

51 ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்..!

ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More

2 years ago

கிளியோபாட்ரா-50 ஆண்டனியின் பரிதாப முடிவு!

கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More

2 years ago