வாழ்வியல்

பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் சூப்பரான டிப்ஸ்

Published by
தகவல் 360d
Share

பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்க.. அன்பும், அமைதியும் குடிகொண்ட மனதில் முகம் தானாகவே அழகாகும். தீபத்தின் சுடர் போல பெண்களின் முகம் பிரகாசமடையும்.

இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்:

ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள் பெண்களின் அழகில் ஆடையின் பங்கு முக்கியமானது. ஆடை அணிவது முதலில் வசதிக்காகக்தான்.

உடலை கவ்விப் பிடிக்கும் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. அதேசமயத்தில் ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு!

வேலைக்கு போகும் பெண்களுக்கு புடவை கம்பீரமாக இருந்தாலும், இன்றைய சூழலில் அதை எப்போதுமே கட்ட முடியாது. சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளே சவுகர்யமானது.

உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை என்றால் ஜீன்ஸ் சவுகர்யம், வெளியூர் அல்லது உல்லாசப் பயணத்துக்கு ஜீன்ஸ் எப்போதும் வசதிதான்.

பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள் ஓரளவு டல் கலரில் பேன்ட்டும் அதே துணியில் சட்டையும் அணியும்போது அசத்தலாக தோற்றமளிக்கும்.

முகத்தில் கவலை

கேஷுவல் உடைகளை பொறுத்தவரை இது பெண்களுக்கானது, இது ஆண்களுக்கானது என்ற வித்தியாசம் மறைந்து எதெல்லாம் உடலுக்கும் வேலைக்கும் சவுகர்யமாக அணிய இருக்கிறதோ அதை பழகிக்கொள்ள வேண்டும்.

மனதில் தாழ்வு மனப்பான்மை, அலட்சியம்,. தற்பெருமை ஆகியவை கூடாது. இதனால், முகத்தில் கவலை ரேகைகள் படரும், நம் எண்ணத்திலும், செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அமைதியான மனமும், அதை வெளிக்காட்டும் முகமும் வேண்டும்!

மன அமைதியுடன் இருந்தால் முகம் பொலிவடையும் இதற்கு தியானம் மிகச் சிறந்தது. சரியான தூக்கம் தேவை. தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் தூங்க வேண்டும்.

இல்லாவிட்டால் கண்களின் அடியில் கருவளையம் விழும். இதனால் முகத்தில் ஒருவித முதிர்ச்சி தெரியும். அதேபோல் கண்கள் சோர்ந்து காணப்பட்டாலே பாதி அழகு குறைந்த மாதிரிதான்..!

சத்தான உணவு தேவை

காலையில் சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி. பிறகு அரை டம்ளர் லெமன் ஜூஸ் பருக வேண்டும். இதனால் உங்களுக்கு பசி ஏற்படும்.

பின்னர், நன்றாக குளித்துவிட்டு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் சேர்ந்த உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அவசரமாக சாப்பிட வேண்டாம். விருப்பமானதை மெதுவாக சாப்பிடவும்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் தேவையற்ற கழிவுகள் உடலிலிருந்து வெளியேறும்!

முக்கியமாக உடலில் எடை அதிகமாவதை தவிர்த்தல் நல்லது. நீச்சல். ஸ்கிப்பிங், சைக்கிள் சவாரி, நடை பயிற்சி போன்றவை இயற்கையாக பெண்களின் அழகைக் கூட்டும்.

கட்டமைப்பான உடல்

பெண்களின் மார்பளவும், இடுப்பளவும் ஒன்றாக இருக்க வேண்டும். இடையளவு இவற்றைவிட 25 செ.மீ. குறைவாக இருக்க வேண்டும். வயிற்றில் மடிப்பே விழக்கூடாது.

இடையை விட தொடைகள் சுற்றளவு 12செ.மீ குறைவாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு அழகான தோற்றம் தரும் கட்டமைப்பு இது.

உடலமைப்பு இப்படி இருந்தால்தான் அழகாக இருக்கும் என்று வரையறை எதுவும் இல்லை. உயரமோ, குட்டையோ எப்படி இருந்தாலும், அதற்கேற்ப நமது அங்கங்கள் சரியாக இருந்தால் அழகுதான்!

கூந்தலில் சிக்கல் விழுகிறது என்ற பயத்தில் பலர் வாரம் ஒருமுறை தலை குளிப்பதைக்கூட தவிர்க்கின்றனர். அதை தவிர்த்து வாரத்திற்கு மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும்.

தலையை குனிந்தபடி கூந்தலை முன்னால் போட்டு கைவிரல்களால் கோதி அழுத்தி நன்றாக அலசி சுத்தம் செய்யவேண்டும்.

அழுக்கு எளிதில் நீங்குவதுடன், சிக்கு விழாது. முகத்திற்கும் பொலிவு கூடும். எனவே வெயில் காலங்களில் வாரத்திற்கு மூன்று தடவையாவது தலைக்கு குளித்தால் நல்லது.

ஆண்களுக்கும் அழகு

பெண்களைப் போலவே ஆண்களும் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஏனெனில் பெண்களைவிட ஆண்களே அதிகம் வெளியில் செல்கின்றனர். ஆடைகளில் காட்டும் அக்கறையை முகத்தை அழகுபடுத்துவதில் காட்டுவதில்லை.

வேலை நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம் எளிதில் கறுத்துவிடும். அவர்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும்.

வெளியில் அலைவதானால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது குறையும்.

மேலும், சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.

Recent Posts

கிளியோபாட்ரா-55 தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு

தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More

2 years ago

கிளியோபாட்ரா 54 கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு!

கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More

2 years ago

கிளியோபாட்ரா 53 ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை

ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More

2 years ago

கிளியோபாட்ரா-52 புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை

புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More

2 years ago

51 ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்..!

ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More

2 years ago

கிளியோபாட்ரா-50 ஆண்டனியின் பரிதாப முடிவு!

கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More

2 years ago