மூட்டுவலி: வலிகளில் இருந்து 4 மணி நேரத்தில் விடுதலை

Published by
முனைவர் நா.ரமணி சேகர்
Share

மூட்டுவலி: வலிகளில் இருந்து 4 மணி நேரத்தில் விடுதலை

மனித வாழ்வியலில் ஏதாவது ஒரு நேரத்தில் காலத்தின் கட்டாயத்தில் மிக வலியும், வேதனையும் தரும் நோயாக மூட்டுவாத வலி தோன்றுகிறது. மனித செயல்பாட்டிற்கு எளிதாக உடல் உறுப்புகள் இயங்கும் படி முதுகுத்தண்டுவடம், கை, கால்களை இயக்கவும், மூட்டுக்களில் ஏற்படும் தங்கு தடையில்லாத அசைவுகளின் மூலம் உடலின் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறவும், மிக மெல்லிய அசைவுகளின் மூலம் பல்வேறு அசைவுகள் ஏற்பட்டு நேர்த்தியாக உடல் செயல்படுகிறது.

எப்போது மூட்டுவலி வரும்? 

உடல் இணைப்புகளில் உள்ள மூட்டுக்களில் மற்றும் உடலில் உள்ள இணைப்புகளில் உள்ள மூட்டுக்களின் வடிவமைப்பிலும், செயல்படும் தன்மையிலோ மாறுபாடுகள் ஏற்பட்டு மெல்லிய திசுக்கள் பாதிப்படைந்து மனிதர்களை முடமாக்கி மற்றவர்களைச்சார்ந்து வாழும் நிலையை உருவாக்கிறது. 

இதை நோய்தான் என அறியாமல் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு வாழும்போது மூட்டுவலி தீவிரமடைந்து ஆர்த்தரைடீஸ் என அழைக்கப்படுகிறது.

மூட்டுவலியின் வகைகள்:

1. சரவாங்கி எனப்படும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்

2.  தோல் நோயுடன் கூடிய சோரியாட்டிக் ஆர்த்ரைட்டீஸ்.

3. யூரிக் அமிலத்தால் ஏற்படும் கவுட்

4. விபத்துக்களால் ஏற்படும் ஆர்த்தரைட்டீஸ்

5. மூட்டுக்கு மூட்டு வலி ஏற்படும் ஆர்த்தரைட்டீஸ்

வலிக்கான காரணங்கள்:

1. வயது மூப்பின் காரணமாக உறுப்புகள் தேய்ந்து வலி ஏற்படுகிறது.

2. கவுட் பிரச்சனையால் படிகங்கள் உருவாகி வலி ஏற்படுகிறது.

3. உடற்சோர்வால்  வலி ஏற்படுகிறது.

4. வேலைப்பளு மற்றும் விபத்தால் மூட்டுகள் பாதிப்படைகின்றன.

5. மூட்டுகளில் நீர் கோர்த்தலால் வலி ஏற்படுகிறது.

6. உடல் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாகவோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாகி உடலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் வலி. 

7. பல்வேறு நோய்த் தொற்றின் மூலம் வலி ஏற்படுதல்.

வாத வலிக்கான அறிகுறிகள்:

மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கம், பிற உறுப்புகள் பாதிப்படைதல், இதனால் நடக்க முடியாமை மற்றும் பொருட்களை கையில் பிடிக்க இயலாத நிலை மற்றும் மூட்டுகள் மென்மையாகி மடக்குவதில் சிரமம் ஏற்படுதல்.

இதனால் சிரமம் ஏற்பட்டு இந்நோய் உச்சம் அடையும் பொழுது இதயம் சார்ந்த நோய்கள் வரும் வாய்ப்பு கூட உள்ளது.

நாட்டு மருத்துவக் கொள்கை:

எந்த ஒரு நோயும் அது ஏற்படுவதற்கும், அது அதிகமாக வலுப்பெறவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தோஷங்கள் அதிகமாகவும் அல்லது ஓரிடத்திலேயே தேங்கி விடுவதும் அடிப்படைக் காரணங்களாக இருக்கிறது. 

தேங்கும் கழிவுகள் மூட்டு, தசை, எலும்புகளின் மேல் உள்ள கவசம் போன்ற உறைகள் மற்றும் அப் பகுதிகளில் தங்கி ஆர்த்தரைடீஸ் உண்டாகிறது. 

வாத, கப, பித்த தோஷ அடிப்படையில் பிரச்சினைகள் ஏற்படும். மற்றும் மன ரீதியாகவும் பாதிப்படைவதால் மன ரீதியான மருத்துவ வழிமுறைகளையும் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கும்.

மருத்துவ ஜோதிட காரணங்கள்:

 கால புருஷ தத்துவப்படி கடகம், சிம்மம், கன்னி, துலா ராசி நேயர்களுக்கு கால், இடுப்பு, முதுகு வலி பிரச்சனை அதிகமாக இருக்கும்.

ஆறு மற்றும் பதினொன்றாம் பாவகம் இது சார்ந்த பாவகமாக அமைகிறது. காரக கிரகங்கள் என்று குறிப்பிடும் பொழுது புதன் மற்றும் சூரியனைக் குறிப்பிடலாம்.

வாத அருகுச்சூரணம்:

முடக்கறுத்தான், வேலிப்பருத்தி, அமுக்கரா, பூனைக்காலி, நெருஞ்சில், யானை நெருஞ்சில், பச்சைக்கற்பூரம், காக்கரட்டான், வாதநாராயணன், இன்னும் பல கடைச் சரக்குகளைச் சேர்த்து  சூரணம் தயாரிக்கப்படுகிறது. 

முதுகு, இடுப்பு, கை, கால் வலி, எலும்பு தேய்மானம், வெரிகோஸ் போன்ற காரணங்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு 5 கிராம் பொடியை வெந்நீரில் எடுக்க அடுத்த 4 மணி நேரத்தில் மேற்கண்ட வலிகள் நிற்கும்.

சூரணம் சாப்பிட்ட நாலு மணி நேரத்துல மடமடவென்று மாடிப்படி ஏறலாம். ஸ்கிப்பிங் கயிறு ஆடலாம், சைக்கிள் ஓட்டலாம், உட்கார்ந்து எழுந்திருக்கலாம்.

தொடர்பான ஆலோசனைகளைபெற: முனைவர். நா.ரமணிசேகர், பாரம்பரிய மருத்துவ ஜோதிட விருதாளர். அழைப்பு எண்: +91 90803 75278.

Recent Posts

கிளியோபாட்ரா-55 தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு

தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More

2 years ago

கிளியோபாட்ரா 54 கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு!

கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More

2 years ago

கிளியோபாட்ரா 53 ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை

ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More

2 years ago

கிளியோபாட்ரா-52 புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை

புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More

2 years ago

51 ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்..!

ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More

2 years ago

கிளியோபாட்ரா-50 ஆண்டனியின் பரிதாப முடிவு!

கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More

2 years ago