மார்ச் மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகும்வரை கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானமான 2-ல் ராகு நீச்சம் பெற்றிருப்பதால் பேச்சில் கவனம் தேவை. சிந்தித்து நிதானமாக பேச வேண்டும். படபடப்பு மற்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் பிரச்னைகள்தான் வரும். அதனால் யோசனை செய்து எதையம் செய்வது, மற்ற கிரகங்களின் அனுக்கிரகம் இருப்பதால் வெற்றி. ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..! இந்தக் கூற்று இந்த குருபெயர்ச்சியில் மேஷ ராசி அன்பர்களுக்கு பொருந்தும். உங்களோட பிறந்த இளைய உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். நல்லுறவு பராமரிப்பீர்கள். குடும்பத்தினர் மட்டுமன்றி அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் அனைவருடனும் நல்லுறவு பராமரிக்கிற காலகட்டமாக இடப்பெயர்ச்சி அமையப்போகிறது. பொழுதுபோக்குகளில் நாட்டம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க குரு பெயர்ச்சி: மேஷம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?