கோயிலின் இருப்பிடமே நமக்கொரு உற்சாகத்தைத் தருகிறது. பெரிய சுற்றுச்சுவர் அதன் முகப்பில் சிறிய கோபுரம். கோபுரத்தின் எதிரே நாகலிங்க சுவாமிக்காக சிறிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய மண்குதிரைகள் வரிசையாக நிற்கின்றன. குதிரைகளின் எண்ணிக்கையிலிருந்து இந்த அய்யனார் பக்தர்களுக்கு எவ்வளவு வேண்டுதல்களை நிறைவேற்றியிருக்கிறார் என்பது தெரிகிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த அய்யனார் இருக்கிறார். இவரின் மகிமைகள் பற்றி பெருமை பொங்க பேசுகிறார்கள் சுற்றுவட்டார மக்கள்.
மேலும் படிக்க மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம்