சங்க இலக்கியத்துக்கு முந்தியதாகத் தமிழில் கிடைத்த இலக்கண நூல் தொல்காப்பியம் மட்டுமே சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் பழந்தமிழகத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. பண்டைத்தமிழ் அறிஞர்கள் இலக்கியங்களை அகம், புறம் என இரு வகையாகப் பிரித்தனர்.
அகத்துறை இலக்கியம் காதலைப் பற்றியும் புறத்துறை இலக்கியம் பிறவற்றையும் குறிக்கும் என்ற அடிப்படையில் இலக்கியங்கள் பாகுபாடு செய்யப்பட்டன.