அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

  • அதென்ன தகவல் 360டி.காம்..?

360 டிகிரி என்பது முழுமையான வட்டத்தைக் குறிக்கும். அதேபோல் முழுமையான அனைத்து விதமான தகவல்களையும் தரும் தளம் என்பதால் அந்தப் பெயர்.

 

  • அப்படியென்றால் இதுவொரு கலைக்களஞ்சியமா..?

இல்லை. ஒரு கலைக்களஞ்சியம் என்பது பல்வேறு துறை சார்ந்த நூற்றுக்கணக்கான வல்லுநர்கள் மூலம் உருவாக்கப்படுகிறது. இத்தளம் அப்படியில்லை. குறிப்பிட்ட சிலர் மட்டுமே இதில் எழுதுகிறார்கள். எதிர்காலத்தில் ஒரு மினி களஞ்சியமாக உருவாகும் வாய்ப்பிருக்கிறது.

 

  • எந்தெந்த துறை சார்ந்த தகவல்கள் இதில் கிடைக்கும்?

இதுவொரு பல்சுவை தளம்தான். அரசியல் தவிர்த்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பயனுள்ள தகவல்கள் வெளிவருகிறது.

 

  • இதில் வெளியிடப்படும் கட்டுரைகள் 100 சதவீதம் நமபகத்தன்மைக் கொண்டதா? 

பல்வேறு தரவுகள் மற்றும் ஆய்வறிக்கைகள் அடிப்படையில் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதனால் முழுமையான நம்பகத்தன்மை வாய்ந்த படைப்புகளே வெளியிடப்படுகின்றன. அதையும் மீறி தவறான தகவல்கள் இடம்பெற்றது பின்னர் தெரியவந்தால் குறிப்பிட்ட தகவல் மட்டும் திருத்தம் செய்யப்படும்.

 

  • தகவல்கள் திருத்தியமைக்கப் படுகிறதா?

கண்டிப்பாக.. அவ்வப்போது திருத்தப்படுகிறது. உதாரணமாக ஒரு சாதனையாளர் பற்றிய கட்டுரையில், எழுதப்படும் காலத்தில் அவர் உயிருடன் இருந்திருப்பார். சில வருடங்களில் அவர் மரணித்திருக்கக்கூடும். அல்லது வேறுசில கண்டுபிடிப்புகளோ, விருதுகளோ பெற்றிருக்கக்கூடும். அவற்றை அவ்வப்போது சேர்த்து கட்டுரை செம்மைப்படுத்தப்படும்.

 

  • போட்டித் தேர்வுகளுக்கு இந்த தகவல்கள் பயன்படுமா?

அதற்குப் பயன்படும் விதமாகத்தான் தகவல்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனாலும், அதிகாரப்பூர்வ தளங்களில் உறுதி செய்துகொள்வது நல்லது. அதற்கான இணைப்புகளை அந்தந்த பக்கங்களில் இயன்றவரை கொடுத்திருக்கிறோம்.

 

  • தகவல்கள் மற்றும் கட்டுரைகள் வீடியோ இணைப்புடன் வெளியிடப்படுகிறதே?

இதுவொரு புது முயற்சி. பொதுவாக தொழில்நுட்ப தளங்கள் இப்படி செய்கின்றன. அதனையே சாதாரண கட்டுரைகளுக்கும் செய்திருக்கிறோம். அதன்மூலம் இத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்களை எழுத்து வடிவமாகவும் படிக்கலாம் அல்லது வீடியோ வடிவில் காணொளியாகவும் பார்க்கலாம். இன்றைய இளையதலைமுறை பெரும்பாலும்  படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு இது உதவும்.

 

  • இந்த தகவல்களை மற்றவர்கள் பயன்படுத்தலாமா?

இல்லை. இது அனைத்தும் சொந்தப் படைப்பு. காப்புரிமம் சட்டத்தின்படி காப்புரிமை செய்யப்பட்டது. அதற்கான முழு உரிமையும் தளத்தின் உரிமையாளரிடம் உள்ளது. உரிமையாளர் மற்றும் கட்டுரையாளர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எந்தவொரு தகவலையும் எடுத்தாளக்கூடாது.