திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

‘கிருபானந்த லாரி வருகிறது’ கிண்டலடித்த திகவினர் – மனம் மாறிய பெரியார்

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே..!” என்று வருத்தப்பட்டனர்.

மேலும் வாசிக்க... ‘கிருபானந்த லாரி வருகிறது’ கிண்டலடித்த திகவினர் – மனம் மாறிய பெரியார்
லட்சுமி குபேர பூஜை

லட்சுமி குபேர பூஜை: அளவில்லா செல்வம் பெறுவது எப்படி?

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று சொல்வது உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார். வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது.
குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிப்பவர் குபேரன். எனவே தான் குபேரன், லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார். குபேரன் அருளாட்சி நடத்த அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான்.

மேலும் வாசிக்க... லட்சுமி குபேர பூஜை: அளவில்லா செல்வம் பெறுவது எப்படி?
Mesham Guru Peyarchi 2021

குரு பெயர்ச்சி: மேஷம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?

மார்ச் மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகும்வரை கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானமான 2-ல் ராகு நீச்சம் பெற்றிருப்பதால் பேச்சில் கவனம் தேவை. சிந்தித்து நிதானமாக பேச வேண்டும். படபடப்பு மற்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் பிரச்னைகள்தான் வரும். அதனால் யோசனை செய்து எதையம் செய்வது, மற்ற கிரகங்களின் அனுக்கிரகம் இருப்பதால் வெற்றி. ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..! இந்தக் கூற்று இந்த குருபெயர்ச்சியில் மேஷ ராசி அன்பர்களுக்கு பொருந்தும். உங்களோட பிறந்த இளைய உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். நல்லுறவு பராமரிப்பீர்கள். குடும்பத்தினர் மட்டுமன்றி அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் அனைவருடனும் நல்லுறவு பராமரிக்கிற காலகட்டமாக இடப்பெயர்ச்சி அமையப்போகிறது. பொழுதுபோக்குகளில் நாட்டம் அதிகரிக்கும்.

மேலும் வாசிக்க... குரு பெயர்ச்சி: மேஷம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?
Guru Peyarchi

குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன நன்மைகள்?

ஜோதிட உலகில் தேவர்களின் குரு பிரகஸ்பதி என்கின்ற வியாழ பகவான். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்…

மேலும் வாசிக்க... குரு பெயர்ச்சி: எந்தெந்த ராசிக்கு என்னென்ன நன்மைகள்?
விதி என்பது என்ன? படம்

நான் நல்லவன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும்? விதி

முற்பிறவியின் ஞாபகங்கள் இருக்காததால் தான் எதற்காக இப்படி நடந்து கொள்கிறோம் என்று சில நேரங்களில் வாழ்பவர்களுக்கு தெரியாது..! ஒருவன் முற்பிறவியில் என்ன குணத்தில் இருந்தானோ அதே குணத்தின் மிச்சம் இப்பிறவியில் அவனது அடிப்படை குணத்தை நிர்ணயிக்கும். இப்பிறவியில் எந்த வகையான குடும்பத்தில் பிறக்கிறானோ அக்குடும்ப வளர்ப்பு ஒருவனது குழந்தை பருவத்தை பாதிக்கிறது. அந்த பாதிப்பே அவன் இளமை பருவத்தின் நடவடிக்கைகளுக்கு விதியாக அமைகிறது..! அந்த விதிப்படி அவன் இளமை பருவத்தில் செய்யும் காரியம் முழுவதும் அவனது வாழ்கை

மேலும் வாசிக்க... நான் நல்லவன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும்? விதி
Village Deity

மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம்

கோயிலின் இருப்பிடமே நமக்கொரு உற்சாகத்தைத் தருகிறது. பெரிய சுற்றுச்சுவர் அதன் முகப்பில் சிறிய கோபுரம். கோபுரத்தின் எதிரே நாகலிங்க சுவாமிக்காக சிறிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய மண்குதிரைகள் வரிசையாக நிற்கின்றன. குதிரைகளின் எண்ணிக்கையிலிருந்து இந்த அய்யனார் பக்தர்களுக்கு எவ்வளவு வேண்டுதல்களை நிறைவேற்றியிருக்கிறார் என்பது தெரிகிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த அய்யனார் இருக்கிறார். இவரின் மகிமைகள் பற்றி பெருமை பொங்க பேசுகிறார்கள் சுற்றுவட்டார மக்கள்.

மேலும் வாசிக்க... மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம்