‘கூகுள் ஃபார் தமிழ்’ என்ற பெயரில் கூகுள் நிறுவனம் சென்னையிலும் மதுரையிலும் கருத்தரங்கை நடத்தியது. அதில் ஆங்கிலம் தவிர்த்த இந்திய மொழிகளில் தகவல் உள்ளடக்க வறட்சி இருப்பதாக தெரிவித்திருந்தது. அதுவே இந்த வலைத்தளம் புதிதாக தொடங்க தூண்டுதலாக அமைந்தது. அதனால்தான் நமக்கு தெரிந்த தகவல்களை வரலாற்று நிகழ்வுகளை அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் ‘அறிவோம் அனைத்தும்’ என்ற உட்தலைப்பு இடப்பட்டது.